ஒற்றுமை .. ..
ஒற்றுமை விட்டகன்று ஒவ்வாமை தனி நின்று
சுட்டு விரல் காட்டி சுட்டதே சட்டி என்று
விட்ட கை உறவே.. ..
வா என்றுதானே அன்றே அழைத்தான்
மானத் தமிழன்
போ என்று புறமுது கிட்டதனால்
அவனியில் அறுந்ததே அடம்பன்
வாய்ப் பேச்சு வீரரே கேழீர்
புலி வீரம் ஒன்றே தன்மானம் காக்கும்
மத பேதப் பிரிவினையில்
தாய் மண்ணின் விடிவில்லை
பிரித்தாழுமை கொண்ட சிங்கம்
பசியாறி படுக்கவில்லை
எச்சங்கள் மிச்சம் கூடாதென்றே
கூவித் திரிகிறது
பள்ளிகளையும் கல்லறை கொள்ள
உலகெங்கும் உயிர்ச் சிலையாய்
நதி வலம் வருகிறான் தன் மானத் தமிழன்ஒரு கொடியில் வந்தே நில்லு
அடம்பனாய் மண்ணை பற்று
நிச்சயம் விடிவுண்டு ஆதவன் துணையுண்டு
தணியும் தாகம் உனக்கும் எனக்கும்
தமிழனாய் ஒன்றுபடு
சுய உரிமைத் தன்னாட்சி
உன்னையும் வாழவைக்கும்.
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...