என் மண்ணுக்குத் தனி வாசம்.. ..
ஊருக்கு ஒரு வாசம் என் மண்ணுக்குத் தனி வாசம்
மாவீரர் முகம் தோணுதே தமிழாலே காந்தழ்
கதிர்ச் சோலை பூத் தூவுதே.. ..
புயல் எழுமோ இன்னும் இடி விழுமோ
இதயத்தை இடம் நீக்கி இனி ஒரு விதி தருமோ
வீரம் விதையானதே விடிவிற்கே உயிரானதே
உனக்குள்ளே வாழுது தமிழா உன் சோதரர்
உயிரே அது உரம் இட்டு நீர் ஊற்று
உன் தாயகம் உனக்கே அது
மாவீரர் முகம் தோணுதே தமிழாலே காந்தழ்
கதிர்ச் சோலை பூத் தூவுதே.. ..
கவி எழுதி சுரம் மீட்டு புவி மீட்க களம் பொருது
வங்கத்திலும் வெடியானதே வேங்கை
வெண்சங்காய் தினம் வாழுதே
ஊரெல்லாம் ஒரே வாசம் தமிழீழப் பூ வாசம்
காந்தழ் உலகெங்கும் உயிரானதே
தயங்காதே தமிழா தமிழீழம் உனதாகிதே
காந்தழ் கதிர்ச் சோலை பூத் தூவுதே..
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...