lundi 30 décembre 2019

நிலா முற்றம் !!!!


நிலா முற்றம் என்றே நினைந்தேன்
நிமிடங்கள் கழிந்தன
நிசப்த்தங்கள் கழிந்தன
ஸ்பரிசங்களில் வியர்வைத் துளிகள்
மதனும் ரதியும் மலர் அணையில்
உலா போன காலங்கள் கனவா

விண்ணிலவே உனக்கு மரணம் இல்லை
மண்ணில் நிலாக்கள் தேய்கின்றன
வளர் நிலா ஆவதில்லை
நிலா என அழைத்தவன்
இன்னொரு நிலாவில்
அழகின்றி ஓர் நாள்
அவனையும் காண்பேன்
அன்றே எனக்கு அமாவாசை

பாவலர் வல்வை சுயேன்

mardi 24 décembre 2019

வான் மேகம் !!!


ஆனந்தச் சாரல் தூவுதிங்கே துளிர் தென்றல் 
தென்னங் கீற்றின் நர்த்தன நீராபிசேகம் 
ஆறுகால பூசையில் சிவனாகி 
ஆடுகிறேன் தீர்த்தம்

நாணம் கொண்ட மௌனத்தில் 
ஏகாந்த விழிகள் 
என் மேல் நீ கொண்ட காதலை 
களவின்றி சொல்லுதடி

குளிர் நிலா என நினைந்திருந்தேன் 
நீயும் என்போல் எரி நிலா என, 
உணர்ந்தேன்
கொன்றுவிடு இல்லையேல் வென்றுவிடு
மின்னல் கொடியே யன்னல் இடையில்
உன்னை காண்கிறேன்

பாவலர் வல்வை சுயேன்

vendredi 20 décembre 2019

அழியுமா.. அழியாதா.. உலகு !!!

அழியுமா.. அழியாதா.. உலகு !!! 
21.12.2012

நூறு கோடி வயசடா மனிதா 
இந்த பிரபஞ்ச பூமிக்கு 

அதை ஆளப் பிறந்து ஆளும் நீ 
உலகை கண்டு 
நான்கு லெட்சம் ஆண்டுகளே 
உன்னை உலகே அறியும்

உலக உயிர் அழியுமா...  அழியாதா… 
உனக்குள்ளே அச்சம் மிகு கேழ்வி  

மாயன் எழுதி வைத்தான் அச்சரச் சுவடி
அழியும் உலகென்று 21.12.2012ல்
அகழ்ந்தறிந்தான் அறிவாளி
இதில் எவன்தான் ஞானி
இன்னும் இவ்வுலகு
தன்னுயிரை 
ஈகம் செய்யவில்லை

பூமியை, தின்னும் இன்னொரு பூகோளம்
பூமிக்கருகில் கண்டாயா சொல்
பூமி, தன்னைதானே தின்டு செரித்தாலும்
கோடிகாலம் வேண்டுமே ஜீரணிக்க

சினையுற்ற மணல் நண்டு 
ஒரு நாளும் அழுவதில்லை
தனக்காக 

வாய் இருந்தும் மொழி பேசா பசுவாய் 
நீதி கேழ் வாய்மை காக்கும் உலகு
சினம் தணிந்து மனம் துணிந்து நட
நாலும் தெரிந்தாலும் 
நடக்கப்போவது தெரிவதில்லை நக்கு

பாவலர் வல்வை சுயேன்

mercredi 18 décembre 2019

சாலையிலே சோலைக் குயில் !!!


சாலையிலே சோலைக் குயில் கூவுதம்மா குவுதம்மா
தாளாத சோகம் தனில் மூழ்குதம்மா மாழுதம்மா
செஞ்சோலை வாழ்ந்த குயில் 
செய்ததென்ன குற்றம் அம்மா

ஆதரிப்பார் யாரும் இல்லை 
அன்பு செய்ய நேசம் இல்லை
ஊருக்குள்ளே ஓடுதிங்கே 
இதன் ஓசை நதி
ஓடக்கரை கால்வாயிலே ஜீவ நதி
போர் முடிந்தால் வாழ்வு வரும் 
வசந்தம் எமை தேடி வரும் என்றீரே
வீரம் வீழ்ந்து மாண்ட பின்னே 
மண்ணிலொரு இறைவனை 
இன்னும் நாம் காணலையே

வசந்தம் கொல்லும் வாடைதானே 
வடக்கில் வந்து வீசுதம்மா
உதயம் தந்த சூரியனால் 
கிழக்கில் ஒளி இல்லையம்மா

ஏர் பிடித்த நாளை எண்ணி 
எத்தனை நாள் வாழ்வதிங்கே
வரப்புயர வாழ்வெனும் 
சின்னவரே மன்னவரே 
மனசிருந்தா மார்க்கம் உண்டு
வீதி வாழ் குயில்களுக்கு 
வேடம் தாங்கல் தாருங்களேன்

பாவலர் வல்வை சுயேன்

lundi 16 décembre 2019

இதய ஒலி கேக்கிறதா !!!


ஒளி ஏந்தி வந்துள்ளீர்கள் எமதுறவே 
விழி நீர் சிந்தாதீர்கள் விடியலுக்காகாது

பாச நேசங்களை பற்றறுத்து 
பாதியில் போகவில்லை நாங்கள்
உமக்காகவே போராடினோம் 
உதிரம் சிந்தினோம் 
உயிரையும் தந்துவிட்டோம் 
உளமாற மகிழ்கின்றோம் 
உங்களை பிரியவில்லை

இன்னும் விடியவில்லை இடர் காட்டில் நீங்கள்
முள்ளி வாய்க்கால் முற்றுப் புள்ளி அல்ல
விடியல் வென்றால் வந்தெமை எழுப்புங்கள் 
தாய் மடியில் கொஞ்சம் இளைப்பாறுகின்றோம் 
தாலாட்டுகிறாள் எங்களை தமிழீழத் தாய்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 4 décembre 2019

பூவுக்குள் நாகம் !!!

கொல்லாமல் கொல்லும் கண்ணே
பூவுக்குள் நாகமடி நீ
களங்கம் அற்ற அன்பும் 
ஒன்று கலந்த உயிரும்
பொய்யாகி போனதடி

கரை காணா காதல் ஓடம்
கலங்கரை ஒளி இன்றி 
கண்ணீரில் மூழ்கிதடி

இதயம் தேடும்
இதய ஒலி கேட்கிறதா
மழை நீரில் குளித்தாலும்
அழித்து எழுதப்படுவதில்லை
உண்மை காதல் உயிர் உள்ளவரை

பாவலர் வல்வை சுயேன்

mardi 3 décembre 2019

குடிசை கூட்டுக்குள் ...


குடிசை கூட்டுக்குள்    
குடியிருப்பு மிகை அழகு     
அது குயிலின் குஞ்சென்றால்
கூவும்வரைதானே தாயின் அன்பும்


பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...