mardi 4 novembre 2014

செங்குருதி நாளத்தின் ஆறடி ஓடமே ..

 
செங்குருதி நாளத்தின் ஆறடி ஓடமே
உன் குருதி உனக்குள்ளே நான்
இதயம் எனும் படகோட்டியை
கொன்று விட்டு
நீ எங்கே போகிறாய்
 
உன் இயந்திரம் எனும் மூளை
கோளாறில் கொந்தளித்து
கொடும் பாவம் செய்கிறது
மனச் சாட்சி எனும் பாய் விரித்து
யாதி மத பேதம் எனும்
சமுத்திரம் விட்டு
வெளியே போய்விடு
ஒன்றே ஜீவன் ஒன்றே குருதி
உலக மாந்தர்க் கெல்லாம்
ஒன்றே குலம் ஒருவனே இறைவன்
உன்னையும் கரை சேர அழைக்கிறேன்
செங்குருதி வைப்பக கலங்கரை விளக்கு
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...