vendredi 31 mars 2017

மௌன யுத்தம் !!!


மேலைத் தேசம் எண்ணி உழைப்புத் தேடி

விமானம் ஏறிய பறவைகள் நாங்கள்

எங்கள் வாழ்வின் இன்பச் சிறகை     

சிறையில் வைத்துவிட்டே பறந்து வந்தோம்

பணம் ஒன்றே உயிரென போற்றும் உறவே

இதயங்கள் செத்து காலாவதி யாகிவிட்டன

எங்களின் பிணங்களே நடக்கின்றன இங்கே    

உங்களிடம் வந்து சேர்ந்த பண நோட்டினை

நுகரப்ந்து பாருங்கள்..

அதில் எங்களின் பிண நெடில் வீசும்..பாவலர் வல்வை சுயேன்

mardi 28 mars 2017

இன்னுமா நீ உறக்கத்தில் !!!

துயரின் தூரல்கள் ஓய்ந்தாலும் - நனைந்த
இதயத்திலிருந்து இன்னும்
வீழ்ந்து கொண்டே இருக்கிறது துயரத் துளிகள்
இரு முனை போராட்டத்தில் இன்னும்
உதடுகளின் நேசம் 
புரட்சி என்போரும் மருட்சி நாடகம் ஆடுகிறார்
உண்மையும் பொய்யும் கலந்து போடுகின்றன
இரட்டை கோலங்கள்  
விடி வெள்ளி முளைத்தும்
விடிவானம் துலைந்துவிட்டதே வெகுதூரம்
முடிந்த யுத்தம் முடிந்ததுதானா
அடிமை வாழ்வை அள்ளி முடித்து
எத்தனை காலம்தான் வாழ்வாய் தமிழா
உனக்காக உன் தலை முறைக்காக
நீயே எழுச்சி உறு
தானைத் தலைவன் மீண்டும் வரான்
உன் கையில் தந்துவிட்டான் ஈழ மலர்வை
இன்னுமா நீ உறக்கத்தில்

பாவலர் வல்வை சுயேன்

lundi 27 mars 2017

இதயம் இரும்பல்ல....


ஈரமான இதயமே உனக்குள் இன்னும்
அந்த ஞாபகத்தின் ஓர் துளி !
யாருக்கு யாரென்ற தீர்மானம்
பேருக்கு மனசுக்குள்
நடக்கிறது போராட்டம் !!
அவளுக்கும் எனக்குள்ளும்
அவிழ்க்கப் படாத முடிச்சு அது
விதியா ? மதியா ?
எழுதப்பட்ட ஓவியம் சிதைந்தாலும்
அவரவர்க்கான வண்ணச் சித்திரங்கள்
பிள்ளை மலர்களாய் தத்தித் தவழ்ந்து
ஆடி அடங்கும் வாழ்வுக்கு
அன்பு முத்திரை தந்துவிட்டது
ஆராதிக்கின்றேன் வாழ்வே
இதுதான் உன் பயணம் என்பதால்   


பாவலர் வல்வை சுயேன்

samedi 25 mars 2017

இல்லத்தரசி....


பிறந்த நாள் காணும் அன்பு நிலாவே
முகில் திரை நீக்கி இன் முகம் காட்டினாய்
வெள்ளை ரோஜா அன்பு மழை பொழிகிறது
சிகப்பு ரோஜா இதழ் பரிசம் தருகிறது
தடை இல்லை,
எடுத்ததை கொடுத்துவிட்டேன்
இதயமே என் இதயம் உன்னிடமே
உனக்காக நான் ஒவ்வொரு பொழுதும்
மலர்ந்தும் மலராமல் எனக்காக நீ
உயிர் உள்ளவரை ...


பாவலர் வல்வை சுயேன்

சேதாரம் ஆனேன்!!!

முந்தை வினைப் பொழுதும் சிந்தை கலைந்தேன்
வந்தமர்ந்த வண்டெல்லாம் வடிவழகே என்றேன்
எந் நிலை யுற்று வேடம் தாங்கல் பாட்டிசைத்தேன்
காதல் சிறகை விரித்தேனா
காமக் கிளையில் அமர்ந்தேனா
கருவில் குழந்தை
சிசுவின் தந்தை யாரென அறியேன் !
கண்ணியம் இளந்து காமக் கடல் நீந்தி
பெண்ணியம் சாகடித்த மா பாவி எனை
கல்லால் அடித்தே கொன்றுடுங்கள்
ஆதாரம் இல்லா வாழ்வில்
சேதாரமாகிப் போனேன்….

பாவலர் வல்வை சுயேன்

எந்த நிலை வந்தாலும் கலங்காதே !!!

பாலுக்குப் பாலகன் பசியென்றழுதிட
மடிப் பாலூட்டி நின் தாய் முகம் மலர  
இகபரம் காணும் உயிரே !  

வேண்டா நிலையுறு கூடுதனை
நீ விட்டுச் செல்ல மனம் இன்றி
நீள் மூச்செறிந்து நீண்டு கிடந்திடினும் 
பசும் பால் பருக்கி கரும வினை அகற்றி
இறைவனை வேண்டியே நின்னுயிர் பிரித்து   
பிணம் எனச் சொல்வார் சுடு காடு சுமந்து
சுட்டெரித்துச் செல்வார் உறவென வந்தோரே

பந்த பாசம் எல்லாம் நிந்தன் உயிர் உள்ளவரை
எந்த நிலை வந்தாலும் கலங்காதே
காத வழி தூரம் கூடி வர
உறவும் இல்லை உன்னோடு !!

பாவலர் வல்வை சுயேன்

jeudi 23 mars 2017

காலை எழுந்தவுடன் படிப்பு....


காலை எழுந்தவுடன் படிப்பு

பின்னர் கனிவு கொடுக்கும்

நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு

என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா

                 கவிச் சாரதி பாரதியார்கல்லை உடைத்தால்தான் தேனீர்

பின்னர் மதியம் றொட்டிக்கொரு இடைவேளை

மாலை வந்தும் கல்லுடைப்பு

மழலை எம் வாழ் வெப்போ உயரும் சொல்லுங்கப்பா

                          பாவலர் வல்வை சுயேன்

உன்னை அறியும் ஊரு !!


ஊருக்காக உழைக்கும் உயிரே - ஊரார்

நெஞ்சம் குளிர்ந்து உன்னை வாழ்த்த

உன் கையால் நீயே கொடு

உன்னை அறியும் ஊரு

உலைக்களம் உழன்று

உயிரையும் இழந்து

தளிர்க் கொடி தரையில் தவிக்கிறது

இடைத் தரகன் அங்கங்கே

அள்ளித் தின்கிறான் உன் பணத்தை!

கயவரை நம்பாதே

இன்றில்லா இதயம்

நாளை முளைப்பதில்லை நாநிலத்தில்பாவலர் வல்வை சுயேன்

mercredi 22 mars 2017

தத்தெடுங்கள் தாயாகலாம்!!!!

சுய நலம் இன்றி பொது நலமே

எல்லோர்க்கும் இனிதானது

தத்தெடுங்கள் நீங்களும் தாயாகலாம்பாவலர் வல்வை சுயேன்

mardi 21 mars 2017

நெஞ்சச் சுவரில் ஏது வர்ண மாயைகள் !!!


நித்தம் நித்தம் தேன் தேடி பித்தமாகும் உலகில்

இறக்கை விரியேன் என் பட்டுப் பூவே

காதலால் காதலை கனிவுற்றும்   

கண்ணீரில் கரையுதே ஓவியங்கள்

நெஞ்சோடு நெஞ்சிருத்தி சங்கமித்த உயிரே

நிறங்கள் உதிர்ந்து சாயம் போகலாம்

நெஞ்சச் சுவரில் ஏது வர்ண மாயைகள்

வெண் முகிலாகவே உலா போவோம் வா

புனித உலகம் அழைக்கிறது


பாவலர் வல்வை சுயேன்

lundi 20 mars 2017

நீ உயர்ந்தவனா தாழ்ந்தவனா !!!

துயர் குறைப்பு குறுஞ் சாலை விழிதனில்  
அரிவிடும் துளியில் மெல்லிய நீரோட்டம்
குடும்ப மாலையில் கதம்பப் பூக்கள்
காய்ந்தாலும் அது கற்பூர வாசம்
பச்சிலையும் நிறம் மாறி
சருகான போதும்
துளிர்த்தே நிலைக்கிறது மரங்கள்
இச்சை உள்ள மனிதன்
அச்சம் இன்றி உலா வர வர
நாளிகை முட்கள் நகர்ந்தோடி
நாட்கள் வந்து போகின்றது  
நீ உயர்ந்தவனா தாழ்ந்தவனா
உன் னுயிர் கட்டை எரிந்து நீறானாலும்
வாழ்ந்த நாட்கள் வரி எழுதி வாசகம் சொல்லும்
நீயே சொல் யார் நீ...

பாவலர் வல்வை சுயேன்jeudi 16 mars 2017

நன்றி தந்தோம் நாம் உமக்கு ....


இயற்கை எனும் இளைய கன்னி

மஞ்சளரைத்து கன்னம் பூசி

நெஞ்சம் கிள்ள

வானம் விட்டு வந்த மழை

தோரணம் கட்டி பன்னீர் தெழிக்க

வாசலெங்கும் பந்தலிட்டு

வான வில்லாள் புருவம் தீட்ட

வரவேற்பு வாசலிலே

மலரெனும் மங்கையர் கூட்டம்

குங்குமமும் சந்தணமும் தந்து

வாழை இலை பரிமாறி

விண்ணவரும் வந்திங்கு வாழ்த்துதிர்க்க          

மாங்கல்யத் திருநாள் திரும்பி வந்து

தித்திப்பு முத்தம் தந்தது எமக்கு

நன்றி தந்தோம் நாம் உமக்கு ....பாவலர் வல்வை சுயேன்

lundi 13 mars 2017

கர்ணன் அல்ல நான் !!!


கொடுப்ப தெல்லாம் கொடுத்து

கோடை தானுற்று

வறண்டதடா என் கை தம்பி

கர்ணன் அல்ல நான்

ஏழை குடி மகனே !!

என் பெயர் சொல்லும் வாழையடி வாழைக்கும்

வாக்கால் கட்டி நீர்ப் பாச்சவேண்டும்

நெடு வயல் நிறைப்பதற்கல்ல

என்னுயிர் பயிர்களும் உறவோடு வாழவே !!பாவலர் வல்வை சுயேன்

mercredi 8 mars 2017

இருப்பது கூடொன்றே காடு செல்ல !!


யாரோ ஒருவன் மீட்டுகிறான்

யாரோ ஒருவன் யாசிக்கிறான்

யாரோ ஒருவன் உன் உழைப்பில்

உருவம் பெருத்தே வாழுகிறான்

இதுவரை உன்னிடம் என்னவுண்டு

அவனிடம் வாழ வீடுண்டு

நாடு நாடென நாடியோரே

நலம் கெட புழுதியில் வீழ்த்திவிட்டார்

அள்ளிக் கொடுத்த வெள்ளிப் பணம் எல்லாம்

அவனவன் திண்டே தீர்த்தாச்சு !!

இன்னும் என்னடா சுறண்டுகிறான்

இருப்பது கூடொன்றே காடு செல்ல !!!பாவலர் வல்வை சுயேன்

mardi 7 mars 2017

மகளிர் தின வாழ்த்துகள் ...

மகளிர் தின வாழ்த்துகள் ...
08.03.2017
உலகம் போற்றும் மகளிர் தினம்
உன்னதம் உற்று உயரந்தே வாழ்க ...

dimanche 5 mars 2017

அன்பு மலர்கள் !!!

உன் பாதம் நோகும் என்று
நீ வரும் வழியில்
மலர்கள் பூத்திருக்கின்றன !         

இதயமே இதய ரோஜாக்களில்
இதழ்கள் சிதைந்திடாமல்    
காதலை காதலால் கசிந் துருகி
கனிவு செய்வோம்
வாழையடி வாழையும்
நம் பெயர் சொல்லும் வாழ்வோம் வா !!

பாவலர் வல்வை சுயேன்

ஊனம் கொண்ட தமிழா ....


(பண்பாடு - 12)
உலகம் போற்ற உயர்ந்த தமிழா
உந்தன் தெய்வம் எங்கேயடா
அவனை நினைத்து ஒரு துளி கண்ணீர்
நீ சிந்த இன்னும் எத்தனை நாள்
உனக்கு வேண்டும்
ஊனம் கொண்ட தமிழா...


உனக்குள் இருக்கும் இருளை போக்கு
தானாய் விடியும் தமிழீழம்
தேசியத் தலைவன் இறைவனானான்
இன்னும் நீ இருளில்லடா
விழி இருந்தும் குறுடன் நீயே
விடியலை எங்கே தேடுகிறாய்
விதைத்த விடுதலை வீணோடா
உனக்கே விலங்கை நீ பூட்டுகிறாய்
எழடா எழடா தமிழா எழு எழு
உந்தன் தேசம் உன்னை நம்பி
உன்னால் முடியும் என்றுதானே
உன்னிடம் தந்து இறைவனானான்
தமிழினத் தலைவன் அவனே பேரொளி

பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...