சாக்கடையில் புனிதன்.. ..
கவர்ச்சிக் கடலில் மனம் ஏறும் தோழனே உன் நாளங்கள் அகற்றிய நாசிக் கூடத்தில்
தூயவன் இவன் இங்கே
சாக்கடை அகற்றி சந்தணமாகின்றான்.. ..
படைத்தவன் கூட வருவதில்லை
கூவத்தில் குன்றிச் சாகும் உன்னை காத்திட
வணங்க இரண்டு கைகள் இருந்தால்
உன்னை காக்கும் கடவுள் இவனே
கோயில் வேண்டாம் சிலையும் வேண்டாம்
தெய்வம் என போற்றவும் வேண்டாம்
தொட்டால் தோசம் என விட்டு ஓடாதே
மனிதனை மனிதனாய்த் தழுவி
யாதி ஒளிப்பை ஏற்றுக்கொள்
நீதிமான் நீயேதான்....
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...