samedi 31 mai 2014

சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை ..

சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை
சொல்ல வந்தாய் நீயும் சொல்லவில்லை
இதுவரை என்னை தொடாத நீ
உன் விழித்துளியால்
என் கரங்களை தொட்டுவிட்டாய்
எனக்குத் தெரியும்
இது நீ போட்ட அறை அரிசி
மறந்துவிட்டேன் உன்னை
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அன்றாவது சொல்வோம் காதலை
தாமதம் இன்றி .!
என்னொருவரின் தாரம் நான்
ரூ லேற் அன்புக்கு நன்றி...

vendredi 30 mai 2014

இராக்காலம் அருகே வந்து ..


இராக்காலம் அருகே வந்து - என்               
னில் ஒளி அள்ளித் தின்றவேளை
நிலவாக என் அருகே நின்ற
நிறம் மாறாப் பூவே...
அருகே உலா இல்லாச் சூரியனை
நினைக்கவில்லை நீ
நீ காணும் சூரியன் நான் என்றாய்
வீழ்ந்துவிட்டேன் உன் காலில்
ஒற்றை கொலுசாய்.!

jeudi 29 mai 2014

கனா காணும் காலங்கள் பதினாறு ..


கனா காணும் காலங்கள் பதினாறு
பனித்திரை விலக்கி அனல்த் திரை
கூட்டுதே பதினெட்டு..!
தொட்டணைக்கும் காலங்கள்
விரகம் மூட்டுதடி
சங்கமம் தேடும் விழிகளுக்கு
நதி மூலம் எது வென
சொல்லிக் கொடு...
 
அட போடா இரவைத் தின்னும் பகலும்
பகலைத் தின்னும் இரவுமாய்
உலகே உறுளுதடா ..!
இதை இல்லை எனச் சொல்பவன் உடலில்
ஜீவன் ஏதடா..

மன மேக மூட்டங்களின் தூறல்..


கட்டுக் கடங்காத காதலின் – மன
மேக மூட்டங்களின் தூறல்
தொட்டணைத்துப் போகிறது
உள்ளத்தை..! 
மண்ணுக்கும் மனசுக்கும் இடையில்
எழுதப்பட்ட ஒப்பந்தம்
கிழித் தெறியப்படவில்லை இன்னும்... 

mardi 27 mai 2014

தேங்காயில் ஒரு தேடல் ..


தேங்காயில் ஒரு தேடல்
அர்ச்சனைச் சீட்டுடன்
ஆலயத்தில் நான்
உடைந்தது தேங்காய்,
இன்று பொற்காலமா.. கற்காலமா..
தேங்காய் உடைத்தும் தெரியவில்லை.!
அடியார்க்கும் அனாதைகளுக்கும் அமுதுண்டு
எந்நிதியும் தருவான் செல்வச் சந்தியான்...

lundi 26 mai 2014

தண்ணீரில் மீனாய் என் கண்ணீர் தொடர்கள் ..


சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டுவிட்டேன்
தண்ணீரில் மீனாய் என் கண்ணீர் தொடர்கள்
உப்புக் கரிக்கிறது உதட்டில்
தண்ணீரிலா.. கண்ணீரிலா..
அதுகும் தெரியவில்லை
 
தொட்டவர் யார்... விட்டவர் யார்...
விடை இல்லை இருவரிடமும்
மழலையில் கட்டிய மணல் வீட்டை
மழை வந்து கரைத்தது அன்று...
மனசுக்குள் நாம் கட்டிய
காதல் மாளிகையை
யார் வந்து உடைத்தது இன்று...

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் அறிந்துவிட்டு ..


ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் அறிந்துவிட்டு
மல்லிகை வாங்கவே  என் மன்னவன் போனான்டி
ஒத்தை ரோஜா போதும் என்றே
அந்த இரகசியத்தை சொல்லிவிட்டேன்...

dimanche 25 mai 2014

முற்பகல் கண்டு முன்னுரை எழுதி ..


முற்பகல் கண்டு முன்னுரை எழுதி
பின்னுரை எழுதும் முன்னே...
பிற்பகலை வருடும்
இரவின் கரங்கள்
இன்ப உரை எழுதி, எழுதியதை
சரி பார்க்கும் முன்னே
இமைகள் இளைப்பாறுகின்றன...
 
ஆயிரம் ஆயிரமாய் அர்த்தங்கள் எழுதி
எழுத்தாணி ஓய்ந்தாலும்
அன்பெனும் பூச்சியத்தின்
அச்சாணி இல்லையேல்
அனைத்தும் வெறும் விட்டங்களே...

பேசாதே.. பேசாதே.. பேசும் நாவிற்கு ..


பேசாதே.. பேசாதே.. பேசும் நாவிற்குத்,
தெரியாது பொய்யும் மெய்யும்.!
உள்ளம் நொந்து காயமானது...
மௌனம் ஒன்றே போதும் போதும்
அன்பே அன்பே இனிய  வாழ்விற்கு
அன்பே ஆதாரம் ....

samedi 24 mai 2014

பள்ளி நினைவோடு பாடப் புத்தகமாய் ..


பள்ளி நினைவோடு பாடப் புத்தகமாய் - உன்
னைச் சுமந்தேன்.! என்னை ஏன் மறந்தாய் நீ.?
உள்ளம் அதில் வெள்ளம் புகுந்ததடி
காதலுக்குத் தடை.!
அதைத் தாண்டித்தான் வந்தேன்
தாமதம் ஆனதடி...

vendredi 23 mai 2014

தேனே தேனே என ..


தேனே தேனே என – என்
னை தேடுகிறாய் நீ அனுதினம் 
மலர்கள் என்னை
சிறை வைத்திருக்கிறன.!
மன்மதனே இதழில் கொடு முத்தம்
விடியும் வேளை மலர்கள் எல்லாம்
உனக்கே காதல் கடிதம் எழுதும்.!

jeudi 22 mai 2014

நாளிகை கடந்துகொண்டே இருக்கிறது..


நாளிகை கடந்துகொண்டே இருக்கிறது..   
ஆனாலும் நீயும் நானும் சந்தித்த
முதல் சந்திப்பின் அந்த நொடிப் பொழுது
வாடகையும் தர மறுத்து
என் நெஞ்சுக்குள் குடியிருந்து
உரிமை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது..

ஒரு முறைதானே வாழ்க்கை..


ஒரு முறைதானே வாழ்க்கை உனக்கும் எனக்கும்
இதற்குள் எப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற
இடை வெளி இருவருக்கும்..!
பிறப்பில் அதிசயம் இல்லை
இறப்பில் மாற்றம் இல்லை
ஆணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும் என
இரு யாதிகளே இவ்வுலகில்
இரண்டும் கெட்டான் நிலையில்
இத்தனை ஜாதிகள் எப்படி முளைத்தன.!
வீதிகளிலும் ஜாதிப் பெயர்கள்
விஷ விதையாக தூவப்பட்டிருக்கின்றன
அனைத்தும் வீழ்ச்சிக்கே என்பதை
எப்போதுதான் நீ உணர்வாய் மனிதா...

mercredi 21 mai 2014

என் இதயம் தொலைந்து காலாவதியாகிவிட்டது..


என் இதயம் தொலைந்து காலாவதியாகிவிட்டது
தபால்காரன் காலத்தில் தொலைந்தது.!
இன்று உன்னிடம் இருப்பதாக
,மெயிலில் அறிவித்திருக்கிறாய்.!
பறவாய் இல்லை ...
அதை நீயே வைத்துக்கொள்..
மாற்றூடாய் உன் இதயத்தை
என்னிடமே தந்துவிடு..

விண் மேகம் தந்த மழைத் துளிகளே...


விண் மேகம் தந்த மழைத் துளிகளே ...
என்னைத் தொட்டு வீழ்ந்த
உமது எண்ணிக்கையில் ,
அவளின் செல்போன் இலக்கங்களை
பதி வெடுத்து வைத்திருந்தேன்..!
வெள்ளம் வந்து என்னை அடித்ததால்
தொலைத்துவிட்டேன் இலக்கங்களை..!
ஓடும் வெள்ளத்தில்  முக்குளித்து
பொருள் தேடும் செடி கொடிகளே    
அவளின் இலக்கங்களை,
கண்டெடுத்தால் தந்துவிடுங்கள்
குடைக்  காவல் விட்டு
அவள் வெளியே வருவதற்குள்..

mardi 20 mai 2014

சுருதி ஏத்தி சுரங்கள் பாடு..


உலக மேடை உருழுது.. உருழுது..
இறுதி மூச்சு எப்போ தெரியல..
சுருதி ஏத்தி சுரங்கள் பாடு..
நீயோ.. நானோ.. முன்னே பின்னே..
 
அம்மா அப்பா பொம்மைகள் செய்ய
இறைவன் உசிர கொடுத்தான்டா...
பாசம் மோசம் வேசம் தான்டா..
வெந்து நூலாய் போனேன்டா..
உறவும் உசிரும் ஒன்றே என்று
கொள்ளை போனது உள்ளம் தான்டா...
 
உறவை பிரிச்சு வரவை பாக்கிரார்
வங்கி வைப்பில பாசம் கொள்ளுரார்
ஏரிக் கரையும் எரியுதடா
நீரில் மீனே அவியுதடா
சரணம் சேரா பல்லவி கூட
மரணக் குழியில் போச்சேடா...
 
ஆறில்ச் சாவு.. நூறில சாவு..
உசிரின் இருப்பிடம் எங்கே தெரியல
கூட்டிப் பார்த்தேன்
கழித்தும் பார்த்தேன்
சம நிலை ஏதும் சரியா தெரியல
உசிர கொடுத்தவன் எங்கே இருக்கான்
ஏன்டா கொடுத்தான் எனக்கு புரியல
கருணை கடவுள் வருவானா முன்னே..
தேடி பார்க்கிறேன் கிடைச்சா, சொல்லடா....

நிந்தனை செய்யுது மாப்பால்..


நற் சிந்தனைக்குரியது தாய்ப்பால் - என்னை
நிந்தனை செய்யுது மாப்பால்..

lundi 19 mai 2014

தென்றலை தேடினேன் ஒரு நிமிடம்..


தென்றலை தேடினேன் ஒரு நிமிடம்
உன் கூந்தல் அவிழ்ந்தவேளை
என், காதோரம் அதன் சலனம்.!
உன் கூந்தலுக்குள் ஏனடி
சிறை வைத்தாய்..
தஞ்சம் கேட்கிறது தென்றல்,
என்னிடம்.!
நீறுக்குள் தானடி நெருப்பு
உனக்குள்ளுமா..?
அஞ்சுகிறேன் நான்
அணைத்துவிடு தீயை.!

dimanche 18 mai 2014

வற்றாத நெஞ்சக் குருதி...


வற்றிய விழி மடல்களை உடைத் தோடுகின்றன
வற்றாத நெஞ்சக் குருதி...
அபயம் அபயம் என்ற அபலக் குரலோடு
முள்ளி வாய்க்கால் ரெத்தக் கடல் அலை வந்து
நெஞ்சை பிழிகின்றது... 
தாய் வயிற்றுச் சிசுக்களும்
கருவறைக்குள் வைத்து அறுக்கப்பட்ட
அந்த குருதி நாள்..!
நெஞ்சுக்குள் குடி இருந்து கனக்கின்றது நெஞ்சம்..
கட்டுக் கடங்குமா கானகத் திவலைகள்
ஐந்தாண்டு நினைவென தொட்டு நிற்கிறோம்
அந்த மே, பதினெட்டை இன்று .!
 
சொல்லி அழுகிறோம் விம்மி வெடிக்கிறோம்
அவலக் குரல்கள் அடக்கப் பட்டு
அந்திம இருளுக்குள் இன்றும்
புதைக்கப் படுகின்றன..
ஒரு திரி விளக்கேற்றி
இளந்தோரை நினைந்திட வளி இல்லை..!
எங்கள் குரல் வளைகளை, முள் வேலிக் கரங்கள்
நெரிக்கின்றன, மாய்கிறோம்..!
 
இன்னும் எத்தனை ஆண்டுகள்
சிறை இருந்து சிதைவோம் 
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இனப் படு கொலையாளரிடம்
இன்னுயிர் இழப்போம்..?
உலக நீதியே, இன்னுமா உன் தாமதம்
தளராமல் எழுகிறோம் உன் வாசல் வருகிறோம்
தட்டிய கதவு திறக்கப் படவில்லை இன்னும்..!
நாம் இழந்த உறவுகளின்
இன்னுயிரை மீட்டுத் தருவாயா..?
இல்லை, சுய உரிமை தன்னாட்சி எமதே என
முன் மொழிந்து, எம் சுதந்திரத்தைத் தருவாயா..?
காத்திருக்கிறோம் இலவு காத்த கிளியல்ல
தமிழன் ஈழம் வெல்லும் புலிகளே...

vendredi 16 mai 2014

அன்றலர்ந்த தாமரையின் ஆருயிர்த் தோழனே..


அன்றலர்ந்த தாமரையின் ஆருயிர்த் தோழனே - தினம்
நீராடும் தோழியின் கொடி இடை நீ வருடுவதால்
இதழ் மலர்ந்து முத்தம் தருகிறாள் உன் தோழி..!
கொண்டவனின்  துணை அற்று, விழி நீர் வறண்டோடி 
நின்று லர்ந்து வீழ்ந்துவிட்டேன் மணல் காட்டில் நான்..!
தண்ணீரே, நீ இல்லையேல் தாமரை உதிர்கிறாள்..
கண்ணீரே, உன்னை உதிர்த்தே நானும் காய்கிறேன்..
மடல் திறந்த இதழ்களை, விண்ணும் மண்ணுமே
காயம் செய்கின்றன..!

jeudi 15 mai 2014

தடை என்கிறாய் தூறலுக்கு..!


அடை மழை கண்டு குடை கொண்டுவந்து
தடை என்கிறாய் தூறலுக்கு..!
மரம் செடி கொடி எல்லாம்,
அதற்காகத்தானே காத்திருக்கிறது..!
விடை என்ன சொல்லப் போகிறாய் நீ..?
எதுவானாலும் அது
எல்லோருக்கும் பொதுவே
அன்பு மழை பொழியும்
ஆகாச மேகம்தானே உன் மனசும்...

mardi 13 mai 2014

வல்வை முத்துமாரி...


இராக நதியின் இசைச் சங்கமம்.....
வல்வை முத்துமாரி அம்மனின் திருவிழா கோலத்தை முன்னிட்டு, ஊரிக்காடு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற தாக சாந்தி நிலயத்தின் தீர்த்தோற்சவ சிறப்பு நிகழ்வுகள்..

காலம் 14.05.2014 புதன் கிழமை இரவு 7,மணி இடம் சிதம்பராகல்லூரி மைதானம்  வடமாரச்சி மண்ணில் முதல் முறையாக 2006ம், ஆண்டின் இசைக்கான தேசியவிருது பெற்ற எஸ். பி. ரூபனின் ராகநதி இசைக்குழு வழங்கும் இசைச்சங்கமம்.
அனுசரணை – அசிற்மணியம் குடும்பம்..

மேலும் வல்வைப் புகழ் - சாமி குழுவினரின் பொம்மலாட்டமும் இடம் பெறும்,
இங்ஙனம் ஊரிக்காடு இளைஞர்கள்...

lundi 12 mai 2014

நல் மனத் தோப்பிலே....


நல் மனத் தோப்பிலே  
புள்ளினங்களின்
புன்னகை பூக்காடு
தூசு பட்டாலும்  
மாசு பட்டுவதில்லை
பருவ காலங்களின் தூறலில்
தூய்மை கொண்டு
பூத்துக் குலுங்கி  கனிகின்றன
கை தொழுகிறேன் இறைவா
உன் கருணை முகம் பார்த்து..

dimanche 11 mai 2014

அன்னை ஓர் ஆலயம் ...


அன்னை ஓர் ஆலயம் ...
அவளின் நினைவுகளே
நான் வணங்கும்
தெய்வீகம்...

samedi 10 mai 2014

சுமை தாங்கும் பாச விளிமியங்கள்..


புலம் பெயர்ந்து எங்கோ ஒளிரும்
தூர விளக்கானாலும்
சுமை தாங்கும் பாச விளிமியங்கள்
தரை புற்களின் தலை தடவும்
பனித் துகில்களாய்
ஒத்தடம் தருகின்றன...
மீண்டும் தளைக்கிறோம் நாம்...  

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...