vendredi 20 mars 2015

தெய்வத்தை தேடுகிறேன் ..


உலகை காட்ட கதிரவன் வருகிறானாம்
கைத் தடியோடு போகிறேன்..
கருமையே வெறுமையாய்
எங்கும் விரிந்து கிடக்கிறது
ஐம்புல வாசலில் ஒன்று
திறக்கப் படவில்லை என
யார் யாரோ சொல்கிறார்கள்!
 
ஏதேதோ என்னை ஆழ்கிறது
ஏதும் தெரியவில்லை
எட்டிட முடியவில்லை
புலன் ஐந்தையும்
ஒரு நிலை கொள்கிறேன்
கண்களை காணவில்லை!
 
உடன் பிறந்தோரிடமும்
உயிர் உள்ளோரிடமும்
பாவித்த கண்களையே கேட்கிறேன்
உயிர் பிரிந்து போகும் வேளையில்
தீ தின்பதை தந்துவிட்டுப் போங்கள் என்று
என் தவ வலிமையில்
நான் காணும் தெய்வம் உண்டெண்றால்
எனக்கு விழி தரும் இறையே
முழு முதல்த் தொய்வமாகும்
இந்த உலகை காணும் முன்
என் இறையே...
உன்னையே முதல் காண்பேன்..
Kavignar Valvai Suyen

mercredi 18 mars 2015

முன்னோர் அருகே ஓரிடம்...


இளைப்பாறிக் கிடந்தேன் ஓர் நாள்  முற்றத்தின் மடியில்
முன்னோர் அருகே ஓரிடம் கிடைத்தது எனக்கும்
சம்பாசனை  ஒன்று அருகே கேட்டுட
காதை, கொடுத்தேன்..
 
படைத்தவன் படைத்த கூடுருக்க
பதவிக் கதிரை மேலிருந்து
இரும்பறையில்
களஞ்சியக் கொள்ளை இட்டு வைத்தேன்
எதையும் எடுத்து வரவில்லை இங்கே
தன்னை, தனிமையில் தள்ளிவிட்டார்களே
என்றார் முதலாம் அவர்!
 
அட போங்க சாமி, எத்தனை நாள் கூவியிருப்பேன்
உங்கள் வாசலில் பசிக்கு உணவு தாருங்கள் என்று
கண்டுக்கவே இல்லை நீங்கள்..
குரல்வளையை பிடுங்கி விடுவேன் என்று
என்னைத் துரத்தியது உங்கள் வீட்டு நாய்
அந்த நாயின் வாயில்
எலும்புத் துண்டம் இருந்தது!           
 
கொடுத்து வைக்கவில்லையே நான்
எதையும் உங்களிடம்
திருப்பித் தாருங்கள் என்று கேட்பதற்கு
கோபம் இல்லை வந்துவிட்டேன்..
உங்களின் பிருதுக் கென்று ஒரு பிடி
அமுது வைத்திருக்கிறார்கள்
எடுத்துத் தர என்னாலும் முடியவில்லை
புதியவரிடம் சொல்கிறேன் எடுத்துத் தருவார் அவர்
என்று என்னை பார்த்து பரிந்துரைத்தார் இரண்டாம் அவர்!
 
இரக்கத்தின் அயல் வீட்டுக்காறன் நான் என
என் விலாசத்தை அறிந்தவரோ இவர்
அவருக்காக அந்த ஒரு பிடி அமுதை
எடுத்துக் கொடுத்திட முனைந்தேன்
என்னாலும் முடியவில்லை!
வெட்கம் என்னை ஆட்கொள்ள அறிந்தேன்
நானும் இப்போது மண் அறையில் என்று...
Kavignar Valvai Suyen

mardi 17 mars 2015

ஒரு நாள் நிலாவுக்கு பிரியாவிடை ..


கண்ணாடிக் கண்ணுக்குள்
கலையாத பேரின்பம்
விதவை என்றும் விடோ என்றும்  
தொடாமலே தொட்டணைத்துத் துடிக்கிதடி
சிரிக்க மறந்த என் சிந்தனையைச் செதுக்கி
புன்னகைப் பூ சூட்டுகிறாய் பூவே...
என்னைப் போல் நீயும் உதிரா மலரானானால் வா
வளர்பிறையாய் முளைத்து முழு மதியாவோம்
இளமைக்கேது முக்காடு முதுமைக்கே சாக்காடு
இருளான அந்த ஒரு நாள் நிலாவுக்கு
பிரியாவிடை கொடுப்போம்...
Kavignar Valvai Suyen

dimanche 15 mars 2015

அவனை காணவில்லை...


ஒவ்வொரு விடியலிலும்
அவன் இல்லை என்றால்
உலகே இருண்டுவிடும் எனக்கு
இன்று ஏனோ அவனை காணவில்லை
யாழ் நகரில் எழுந்த கரிய புகை வந்து சொன்னது
இனச்சுத்தி யாளரால் உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டதென்று..
Kavignar Valvai Suyen

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. நேக்கி...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. நா. நேக்கி

16.03.2015 திங்கள் பி.ப 14.00 மணியிலிலிருந்து 18.00 மணிவரை உலகத் தமிழரின் எழுகை... U N O - GENEVA

mercredi 11 mars 2015

செல்லரித்த வாழ்க்கை ...


பூட்டப் பட்டன இதயக் கதவுகள்
திசைமாறிய பறவைகள்,
பாலைவனத்தில்..
திரும்பவில்லை.!
காதலால் உளன்று கடமை நின்று
கண்ணியம் இங்கே சாகிறதே
கட்டுப்பாடெனும் வேலிக்குள்
முள்ளும் உண்டு மலரும் உண்டு
முகம் பார்க்கும் கண்ணாடியில்
விம்பம் அழுது தீர்த்தாலும்
செல்லரித்து போகிறது வாழ்க்கை ...
Kavignar Valvai Suyen

mardi 10 mars 2015

எதை மறப்பேன் என்னவளே...


நினைவில் உதிரா நிழல் நீயடி
இதயக் கூட்டின் சுவாசம் ஏதடி
நாளை உதிர்வேன் என அறிந்தும்
காலை மலராய் கண்யாடை செய்கிறாய்
எதை மறப்பேன் என்னவளே
என்னுயிர் நீதானே...
Kavignar Valvai Suyen

கலையாதே கனவே ஏழைக்கும் நீ சொந்தம்....


சந்திக்காத சந்ததியாய் காசும் மனசும்
பொழுது விடிந்தாலும் விடியாத
போக்கத்த பிழைப்பாய்
எழையை கண்டதும் கண்ணீர் வடிக்கிறது 
அறிவுக் களஞ்சியச் சாலைகளின், கதவுகள்...
 
கல்வியே கண்ணெனும் களஞ்சிய விளக்கு
ஏழைக்கு எட்டா இருளாவதோ
தாயெனும் சுமைதாங்கி
சகதிக் குழாய் வாழ்விருந்து
தலை சீவி பொட்டுட்டு
பள்ளிக்கு போ என்கிறாள் பிள்ளையை
 
களஞ்சிய விளக்கின் ஒளியிருப்பு
நாளை இவளது சினேகமனால்
இவள் வாழ்ந்த இருள்ச் சாலைகளில்
தெருக் கம்ப விளக்கெழுந்து
நிலாக் காலம் தரும்
சேரி ஓரச் செந்தாமரைகள் சகதி விட்டு
செங்கோட்டு வீட்டில் நிழல் கொள்ளும்
இல்லார்க்கு இல்லை எனும் நிலை இல்லாது
அனைத்தும் அரச கொடுப்பாய் ,
அங்குரார்ப் பணம் செய்வாள் இந்த மாதரசி.
Kavignar Valvai Suyen

dimanche 8 mars 2015

vendredi 6 mars 2015

இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம் ...


இனப் புயல் இங்கு வனப் புயலானதடா தம்பி – தினப்
புயலாலே அகதியாய் இன்னும் அலைவதேனடா
மூடக் கொள்கையில் இன்னுமா நீ உன்முதுகை பாரடா
கேழ்விக் குறியாய் வளைந்த வாழ்விற்கு நீதி தேடடா
தீண்டாமை சொல்லி யாதித் தீயிலே தீய்ந்து போகிறாய்
சுதந்திர வாழ்வை சுறண்டலில் தொலைத்து  
சிறையில் தேடுறாய்...
 
மானம் ஒன்றுதான் மரபுப் போர் உடை
மசக்கையாலே நீ மாற்றான் கால் நிலை
அகரம் எழுதி அறிவைச் சேர்த்த
அழகு ஈழமடா
உலைக்களத்தாலே உருகிக்கிடக்கிதே
உன் உறவின் ரெத்தமடா
கடித்தால் பறிக்கும் கழுத்துக் குப்பியே
மானச் சேலையடா
பூவரசம் வேலிக்குள் புலுணிக் குஞ்சுகள்
புலியாய் மாறி புனர் ஜென்மம் எடுக்கலையா
உலக வானில் தமிழனின் சான்றாய்
புலிக்கொடி உயரலையா
கனிந்த பழம்தான் தமிழரின் ஈழம்
கையில் கிடைக்கும் காலம் இது
இணைக் கரம் பற்றி விடிவினை தேடு..
 
சமர்க்களம் ஆடிய வேங்கைகளாலே மலர்ந்தது ஈழம்
அது வஞ்சனைக் கொடியவர் வாரி இறைத்த
கொடும் தீயினில் வீழ்ந்து இருண்டது மீண்டும்
நம் சந்ததி வாழ சரித்திரம் படைப்போம்
சாயம் வெழுக்கவில்லை துணிந்தே வெல்வோம்
கிழக்கை தோண்டிட ஒன்றாய் வாடா
நன்றே விடியும் நாளை நம் தேசம்
உலகப் பந்திலே தமிழனின் காலம்
வாடா தம்பி வாடா...
இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாகமடா..
 
Kavignar Valvai Suyen

mardi 3 mars 2015

ஏழை நூலில் ஆடும் செல்வா,,,


கண் மணியே கண்ணுறங்கு... கதிரவனே கண்ணுறங்கு...
ஏழை நூலில் ஆடும் செல்வா,,, என் செல்வமே நீ உறங்கு...
அரசு தந்த அரிசி கிள்ளி கஞ்சிக்கலயம் வச்சிருக்கேன்
குறுனலோடு கூழாங் கற்களும் குதித்தவியுதே பொறுத்துறங்கு
கண் மணியே கண்ணுறங்கு...
 
வகிடெடுத்த வாழை மீனை  அம்மி அரைத்து குளம்பாக்கி
வசஞ்சு ஓடும் வஞ்சிரன் மீனை பொரித்து மெல்ல பொடியாக்கி
வாய் அமுது ஊட்டத்தானே தாய் மனசு ஏங்குது
மழலை உன் வதனம் பார்த்து வான் நிலவும் ஒழியுது
ஏழை நூலில் ஆடும் செல்வா என் செல்வமே நீ உறங்கு
 
நீண்ட நாள் அழுதுவிட்டேன் விழி நீரும் முடிஞ்சுதடா
கார் முகிலாள் கொட்டுகிறாள்  உன் அமுத வாயில் துளி முத்து
சாமம் இப்போ மூன்றாச்சு ஊரும் உறங்கி நேரமாச்சு
முத்த மழை துளி குடித்து தூளியிலே நீ உறங்கு
கண் மணியே கண்ணுறங்கு... கதிரவனே கண்ணுறங்கு...
ஏழை நூலில் ஆடும் செல்வா,,, என் செல்வமே நீ உறங்கு...
Kavignar Valvai Suyen

பித்தன் நானடி...


போதும் உன் பார்வை கொல்லாதே என்னை
வெற்றுக் காகிதமாய் கிடந்த என்னை
கைவரி வளையலிட்டு
புன்னகை பூத்தூவி
புதுக் கவியே வருகவென
விழிகளால் அழைக்கிறாய்..
பித்தன் நானடி சத்தியமாய் உன்னிடத்தில்
என்னை எழுத வைத்தவள் நீதானே....
Kavignar Valvai Suyen

dimanche 1 mars 2015

ப்பைர்,ச் சுவாலை...


ஆனதைச் செய்ய மறந்து
ஆசை எனும் ஓடையில்
தடங்களை,
தொலைத்துவிட்டேன்...
நான் குடைக்குள்
நீ மழையில்... 
ப்பைர்,ச்  சுவாலை கண்டு
தீயணைக்கும் பிரிவனரும் ஓடோடி வருகிறார் 
அவர்களுக்கும் தெரியவில்லை போலும்
உன்னை அணைக்க தண்ணீர் தேவையில்லை என்று...

Kavignar Valvai Suyen

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...