lundi 28 avril 2014

தாலி வாங்கவில்லையடி நான்....


சேலை கட்டி நாணம் கொள்ளும்
என் ஞானப் பெண்ணே - உனக்கு
தாலி வாங்கவில்லையடி நான்
நீ என் தாரம் ஆகிவிட்டாய்..!

வாங்கி வந்தேன் மல்லிகைப் பூ
சூடும் முன்பே, தலை சாய்த்துவிட்டாய்
நோயில் வீழ்ந்து பாயில் படுத்தாலும்
நீதானே என் சுவாசம்..!
சமாதிக்குப் போகும் முன்
சொல்லிவிட்டுப் போ...
வெட்டி வைக்கிறேன் ஒரே குழி
இருவருக்குமாய் எனக்கது போதும்..!

dimanche 27 avril 2014

மேகம் இருளவில்லை....


மேகம் இருளவில்லை ஒளிக் கீற்றுகள்
ஆங்காங்கே அலைமோதி
என் கண்ணை பறிக்கின்றன..!
அட அது நீதானா..?
கண்ணை பறித்தாலும் தீண்டத் தகாத
மின்னல் இல்லையடி நீ
மொழி இல்லாக் கவிதையாய் நின்று
வாசிக்கச் சொல்கிறாய் என்னை..!
உன் விழிகளை வாசிக்க வாசிக்க
எத்தனையோ மொழிகள் புலருதடி
அத்தனை மொழிகளிலும்
என் அன்னைத் தமிழே ஆதி மொழி என
உன் விழிகள் ஆணித்தரமாய் சொல்லுதடி
அச்சம் தவிர்த்து அகரம் எழுதுகிறேன்
பள்ளி மாணவனாய் நான்...

samedi 26 avril 2014

வலை வீசி உன்னை பிடிப்பேனா..


வலை வீசி உன்னை பிடிப்பேனா..  
நீ கயல் மீன் அல்லவே,
என் தங்கையே.!
உன் பாச வலையில் சாய்ந்து
அன்பில் திளைத்து ஆர்ப்பரிக்கிறேன்    
இறப்பில் இருந்து மீள
வலையில் சிக்கிய மீன்
அடைக்கலம் கேக்கலாம் !
அன்பகம் வந்து நீ
அண்ணா என்றளைக்கும் நேரமே
நல்ல நேரம் என,
புரோகிதரிடமும் சொல்லிவிட்டேன்
நினைவிற்கொள் என் தங்கையே
கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்துவிட்டேன்..

vendredi 25 avril 2014

ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை....


ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை
ஒவ்வொரு இரவுகள் இறக்கின்றதே
ஒவ்வொரு விடியலும் உறங்கிவிட்டால்
ஒவ்வொரு இரவும் தின்கிறதே
இருப்பது சில நாள் இறப்பது ஒரு நாள்
உயிரும் அதற்கே போராடு
உரிமை வெல்வோம் உலகம் வியக்கும்
உன் நிலை உயரும் வழி தேடு
வாழ்வுக்காகப் போராட்டம்
வானகம் மீதிலும் நடக்கிதடா
வாழ்வோ சாவோ வென்றால்த்தானே
தலைமுறை வாழ்ந்து சிறக்குமடா
தமிழா தமிழா உறங்காதே
தமிழீழத் தாயகம் தாகமடா...

நியம்..


jeudi 24 avril 2014

என் உயிர் ஆனவனே...


என் உயிர் ஆனவனே, உன் நிழல் நான்தானே..
வெள்ள ஒளி தனில் நீ இருந்தால்
உன் பாதடி என்றும் நீங்கமாட்டேன்.!
மரணம் உன்னைத் தொட்டுவிட்டால்
சிதையில் நானும் எரிந்திடுவேன்.!

இயற்கை அன்னை..


இயற்கை அன்னை - உன்னை
என்ன செய்தாள்?
இவள் இல்லை என்றால்...
உன், தாகத்திற்கும் தண்ணீர் இல்லை..!

mercredi 23 avril 2014

முகநூல் ஏணி உயருதடா..!


உலக உறுண்டை சுழரச் சுழர
உறவுப் பாலம் வளருதடா...
உன்னத உலாவில் முகம் மலர்ந்து
முகநூல் ஏணி உயருதடா..!
படிப்பவர் கோடி பார்ப்பவர் கோடி
எழுத்தாளர் எல்லாம் ஏறுகிறார்
ஏற்றம் பெற்று ஏந்தும் கிண்ணத்தில்
போதை அருந்தி திளைக்கின்றார்..!
விடுமுறை போலே விடுதலை வேண்டும்
வீணே வீழ்ந்து கிடவாதே....
தீந் தமிழ் முழங்கு தாயகம் விரும்பு
வாழ்க தமிழ் வளர்க தமிழர் நாடென
பொங்கு தமிழே நீ சங்காரம் முழங்கு...

mardi 22 avril 2014

புல்லட்டு வேண்டாம் தம்பி..


மான் ஒன்று கண்டேன் – மலர்
அம்பு தொடுத்துவிட்டேன்
புல்லட்டு வேண்டாம் தம்பி
கல்வெட்டிலிருந்து அழித்திடுவோம்..

கூலி என கேலி கொள்ளாதே...


உனக்கான உலகம் இது உருண்டாலும்
சுழன்றாலும் உன்னை வீழ்த்தவில்லை..
கூலி என கேலி கொள்ளாதே
வாழ்வின் அச்சாணி அதுதானே..
கூலியாய் வந்தேன் கூனலாகவில்லை
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியும்
பட்டுவிட்டேன்….
முதுகில் இன்னொரு கோடு
இனியும் வேண்டாம்….
எடுத்துரைக்க இனி நான் வரமாட்டேன்...

lundi 21 avril 2014

பருவ கால வெண்முகிலே...


பருவ கால வெண்முகிலே - இருள்
கோடியிலே  ஏன் வீழ்ந்தாய் நீ..?
கூந்தலுக்கு வாசம் தரும் பூக்களுக்கும்
என்னிடம் பாசம் இல்லையாம்..!
விதவை என்று சொல்லி
எட்டிப் போகின்றன...!
பூவை உன்னோடு பூவே கோபம்
கொண்டால், பூமி தாங்குமா.?
அந்தச் சாமிக்கும் கோபமா.?
சாமி என்ன சாமி.., அன்பை கொன்று
அழகை தின்கின்ற முதல் ஆசாமியே
அவன்தானே...
தாலி தர யாரும் முன் வருவார் இல்லை
தாசி என்றதும் வரிசையில் வருகிறான்,  
ஆண்மகனாம்..!

வாழ்க்கையெனும் தோட்டத்தில்...


வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வண்ணம் பூத்திருந்தேன்
எத்தனையோ விரல்கள்
என்னைத் தொட்டன..
இருந்தும் ,
காம்புதிராமல் பறித்தவன்
நீ ஓருவனே..!
வியப்பில் விழிகள் பட படக்க
உன்னையே பார்த்திருந்தேன்..
என்னை ஏந்திச் சென்ற நீ
உன் மனைவியின் கூந்தலில்
சூடிவிட்டாய்..!
எதிர் பார்க்கவில்லை நான்
வெக்கித்துப்போனேன்..

dimanche 20 avril 2014

அழகான விடியல் அழைக்கிதடா தமிழா...


அழகான விடியல் அழைக்கிதடா தமிழா
அன்திமப் பொழுதல்ல இதுவென்று...

கிறீஸ்துக்கு பின் 2014...


இரட்சிக்க வந்த இறையே – உன்னை
கடவுளெனக் கண்ட பின்னும்
காட்டிக் கொடுத்தான் யூதாஸ்காரியத்
ஆணி அடித்தொரு சிலுவையில் இறந்தும்
மூன்றாம் ஞாயிறில் உயிர்த்துச் சென்றாய் நீ
மீண்டும் வரவில்லை..!
எமக்கொரு ஆதவன் ஒளி தந்து காத்தான்
இறந்தானோ பிறந்தானோ
புலர்வுக்கு வருவானோ
இடர் காட்டில் நாம் இங்கே
இரட்சிக்க வருவீரோ..?
ஒளி தேடும் இதயம் தினம் நனைகிறதே...

samedi 19 avril 2014

புரட்சி மலராய் ஒளிரும் அன்னை விளக்கே....


புரட்சி மலராய் ஒளிரும் அன்னை விளக்கே
விதியென சொல்வது வேத தத்துவங்கள்
மதியினால் மாத்தி எழுதிய மறக்குலத்தியே
அமைதிப் படையென வந்தே
அராயகம் புரிந்தோரின்
அகிம்சை பொய்யினை
அள்ளி எரித்தவள் நீ...
உணவை திரியாக்கி ஊனை மெழுகாக்கி
இனமானம் காத்து ஈனம் களைந்த
தமிழீழத் தாயே... அன்னை பூபதியே..
மலரே விழிவளி நதியோட
மலருனக்கு மலர் தூவி
நீள நினந்தே தொழுகின்றோம்
நின்னடி போற்றி போற்றி...

vendredi 18 avril 2014

நானும் உன் சினேகிதன் அல்லவா...


பூவே, பூக்களெல்லாம் உன் கூந்தலை
அலங்கரிக்கும்போதில்  
பட்டாம் பூச்சி நான் பாத்திருப்பேனா...   
பூச்சூடும் உன் கூந்தலில்   
எனக்கும் ஓர் இடம்   
பூக்களோடு தந்துவிடு..  
நானும் உன் சினேகிதன் அல்லவா...

jeudi 17 avril 2014

வெற்றுக் காகிதமடி நான்....


போதும் உன் பார்வை கொல்லாதே என்னை
வெற்றுக் காகிதமடி நான்....
கைவரி வளையல்கள் குலுக்கி
புன்னகையில் பூ மழை தூவி
புதுக் கவியே வருகவென
விழி வீசி அழைக்கிறாய்
பித்தன் நானடி..!
சத்தியமாய் உன்னிடத்தில்..!

ஆயிரம் யன்னல்கள்..!


மாடிவீட்டு யன்னல்ச் சட்டையில் ஏழு நிறங்கள்.. 
வறுமைச் சட்டையின் கிழிசல்களில்
ஆயிரம் யன்னல்கள்..!
காத்தில்லை என்றால் நீயா நானா
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
யாருக்கும் புரியவில்லை..!

mercredi 16 avril 2014

வெய்யிலாய் நானும் வெண்நிலவாய் நீயும்...


வெய்யிலாய் நானும் வெண்நிலவாய் நீயும்
பன்முகக் கீற்றின் பட்டொளியில்
நமது மலர்ச் செடிகள்...
கோடை கண்டும் எரியவில்லை
வாடை வந்தும் வாடவில்லை
பிறந்த வீடென்றும் புகுந்த வீடென்றும்
நிறமாற்ற பேதம் இல்லை
இன்று வீழ்ந்தாலும் நாளை வீழ்ந்தாலும்
நமக்கென்ன கவலை
நிழலுக்கும் பஞ்சம் இல்லை...

தேனீக்களே உமக்கேன் கோபம்..


இதழுக்கு இதழ் கொடுக்கும் முத்தம் இதமானது
அதை வாங்கி நானும் கொடுக்க வந்தேன்
தேனீக்களே உமக்கேன் கோபம்..

mardi 15 avril 2014

ஏய்.. என்னாச்சு..


ஏய்.. என்னாச்சு.., கொடுத்துப் போ..
இல்லையேல் எடுத்துப் போ..
இரண்டும் இல்லை என்றால்,
எதற்கு நீ..? 
வெறும் வெத்துவேட்டு..!

அவனே என் முழு நிலா...


விண் வீதி செல்லும் பாதி நிலாவே..
விடியா இரவில் நான்..
எங்கே மறைந்தான் என்னவன்..
விண்ணில் நீ விளையாடிவிட்டு
அழைத்துவா அவனை,
அவனே என் முழு நிலா...

என்ன பிழை செய்தோமடி மலரே..?


என்ன பிழை செய்தோமடி மலரே..?
அடுத்தவர்க்கே அர்ச்சனையானோம்
பூசை முடிந்ததும் புழுதியிலே
வீசிவிட்டார்...!

lundi 14 avril 2014

ஒரு நாள் துலைந்தாள் என்னுயிர்த் தோழி...


ஒரு நாள் துலைந்தாள் என்னுயிர்த் தோழி

எங்கும் தேடினேன் கிடைக்கவில்லை..!

அம்மா சென்னாள்,  இன்று அமாவாசை...!

dimanche 13 avril 2014

சித்திரை ஒன்று தமிழர் புத்தாண்டாம்...


சித்திரை ஒன்று இன்றென்று – அதி
காலை தட்டப்படுகிறது கதவு
தமிழர் புத்தாண்டாம்
நாள் காட்டியும் சொல்கிறது
உண்மைதான் போலும்..!

என்ன சத்தம் அங்கே...?
ஓர் சிலர்..
சீனவெடி கொழுத்துகிறார்கள்..!
இன்னும் சிலர்..
பகட்டாடையோடு செல்கிறார்கள்..!
வீரப் பிரதாபம் கொள்ளும்
போர்த் தேங்காய் அடிக்கவில்லை
காரணம்,  
யுத்த நெஞ்சுரம் கொண்ட மண் வாசம்...

செம்மொழி தமிழ் என்றான் செரிக்காத ஒருவன்
ஆறறைகோடி தமிழன் இருந்தும்
அம்மொழியே அம்மணமாய் கிடக்கிதடா
ஆறடி நிலமும் சொந்தம் இல்லாத் தமிழா
உனக்கொரு நாடு வேண்டுமடா
அன், நாள் காணும் பொன்நாள் எதுவோ
அதுவே தமிழரின் புத்தாண்டென கொள் நீ
புது யுகம் காண புயலாக எழு எழு
அனல் மின் அல்லடா அணுவுலையே நீதானடா...

கோடு போட்டு வாழ கூசுதடி நெஞ்சம்...


கொல்லாமல் கொல்லும் கண்ணே
நீ., தாழம் பூ நாகமடி...
மெய்யான அன்பை பொய்யாக்கி
விலைக்கே வித்துவிட்டாய்...!
மணல் வீடு கட்டவில்லை நான்
மழை கண்டு துடிப்பதற்கு
மாளிகை கட்டவில்லை
யுத்தம் கண்டு அஞ்சுதற்கு
ஆராதனைக்குரியவளே
நீயும் நானும் இணைந்து கட்டியது
காதல் கோட்டையல்லவா..
ஏன் தகர்த்தாய்..?
கோடு போட்டு வாழ கூசுதடி நெஞ்சம்
கூடுவிட்டு ஆவி போனால்
கூடும் இடத்தில் காண்போம் சமரசம்...!

என் வீட்டு முற்றத்தில் பூவை நீ கேட்டுப்பார்...


என் வீட்டு முற்றத்தில் பூவை நீ கேட்டுப்பார்
என் நெஞ்சின் சிறகிற்கு வண்ணங்கள் ஏதென்று
உன் பேரைச் சொல்லுமே...
வெண்மை அன்புக்கு ஆருயிரே...

samedi 12 avril 2014

முக நூலாய் நீயும்...

முக நூலாய் நீயும் – அதன்
கதிர் ஒளியாய் நானும்
தொடர் நேர தொலை அலையில்
துணை சேர்ந்து மகிழ்வோமே என்றும்..

கலா அழைக்கிறாள் என்னை....


நிலாவுக் எழுதிய - காதல்
கடிதங்கள் எல்லாம்
காலாவதியாகிப்போனதடி
நீலாம்ஸ்ற்றோங்
நிலாவை தொட்டதினால்.!
உலாவில் தினம் வரும் காதலியே...
நம்  காதல் காலாவதியாகம் முன்னே
உன் அண்ணன் சில்வெஸ்ற்றலோனிடம் சொல்லு
கலா அழைக்கிறாள் என்னை கல்யாணம் செய்வதற்கு
கலாவிற்கு அண்ணன் இல்லை என்று..!

vendredi 11 avril 2014

நதியும் கரை தாண்டி ஓடுகிறது....


விதி, என்றார் முன்னோர்கள்
கண்ணுக்குத் தெரியவில்லை..!
நதி என்றார் உண்மைதான்
அகிலம் அறிகிறது....
காட்டு வெள்ளம் புகுந்ததால்
நதியும் கரை தாண்டி ஓடுகிறது
ஆனாலும் இரு கரை இன்னும் இருக்கிறது
நேற்று பிறந்த நான் கூற்று கூறமுடியுமா..?
உன்னை என்னை மீறிய அருவம் மட்டும்
அசைகிறது புலப்படவில்லை
நான், நான் என்று வாழ்ந்தவர் யாரும்
ஏன் என்ற கேழ்வியை கேட்காமல்
இறந்ததில்லை...
விதியும் மதியும் இரண்டுதான்..!
இரண்டுக்கும் இருகரை நீயும் நானும்தான்
இணையின்றி எப்போதும் எனியும் எவரும்
தனித்துவம் கொண்டதில்லை, கண்டபின்
நீயும் ஞானிதான்...

jeudi 10 avril 2014

ஏதிலியாம், என்னை ஏளனம் செய்கிறார்கள்...


வண்ணக் கலவைகளை எண்ணச் சிந்தனையில்
இன்னும் எத்தனை நாள் குளைத்தெடுப்பேன்..
நாடுளந்து நாடு நாடாய் அலைந்தும்
புகலிடம் என்னும்
புகுந்த நாட்டிலும் கிடைக்கவில்லை..!
ஏதிலியாம்,
என்னை ஏளனம் செய்கிறார்கள்
நம்பிக்கை இருந்தது
தாய்த்தேசம் திரும்புவேன் என்று
இன்று ஆளுக்கொரு பக்கமாய்
ஏதேதோ உளறுகிறார்கள்
அவரவர் வேலிக்கே
தாழ்பாள் இடுகிறார்கள்..!
விடுதலை என்ன விலை மலிவா..?
எல்லோரும் கடையில் வாங்கிக்கொள்ள.!
ஏன் மறந்தாய் என் உறவே
நான் இன்னும் சிறையில்
இன்னுமா நீ நித்திரையில்
கேழ்வி கேக்கிறது உன் தாய்த்தேசம்..
உன்னை, என்னை, நாளை நம் பிள்ளைகளையும்...

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...