jeudi 31 décembre 2015

பருவம் மாறா வரிசம் பதினாறு ...

பருவம் மாறா வரிசம் பதினாறு வா என்றே என்னை கொஞ்சும் வேளை
முத்தம் இட்ட நாள்களை வெட்டிவிட்டு போகிறாள்
முன்னூற்றி அறுபத்திஐந்து நாள்கள் என்னோடு வாழ்ந்த முன் கோபக்காறி
ஆண்ட் டாண்டாய் அழகு தேவதை என்னை அரவணைக்கிறாள்
கொஞ்சிப் பேசுகிறேன் கொஞ்சம் அஞ்சியே வாழ்கிறேன்
சிரிக்க வைக்கிறாள் என்னை அழவும் வைக்கிறாள்
அழுத விழிக்குள் கொதிக்கும் செவ்வானம் கண்டால்
அமுத மழையால் என்னை சில்லெனவும் தழுவுகிறாள்
வயசு பதினாறு என்றோ என்னை கடந்து போனதுன்டு
வரிசம் பதினாறு வந்தென்னை வளைக் கரங்களால் அணைக்கிறது
பவளப் பாறை மீன்கள் போலே பாடி ஆடுகிறேன்
பச்சை வெல்லம்  தொட்டுக் கொஞ்சம் சுவைத்து வாழுகிறேன்
இளமை நாள்களின் இனிய ராகம் இதயம் தொடுகிறதே
வரிசம் பதினாறே உன்னோடு நான் ஆடுகிறேன் ஆனந்த ஊஞ்சல்....
Kavignar Valvai Suyen

திருப்பிக் கொடு அது இனாம் அல்ல ...

அன்பென்பது ஆற்றாமை அல்ல அழகென்பதும் ஊற்றல்ல
இருந்ததை தந்துவிட்டேன் உன்னிடமே 
திருப்பிக் கொடு அது இனாம் அல்ல ...
Kavignar Valvai Suyen

lundi 21 décembre 2015

நவீன ஹரிச்சந்திரன் ....மெய்யெனும் ஒற்றைச் சொல்லே உலகின் உயர் வேதம் என
பொய் உரைத்திடாமல் பொழுதை கழித்திருந்தேன்
இதை எடுத்துரைத்திட நான் கொண்ட கொள்கைக் கோலம்
மரணத்திலும் தீராத மன்னிப்பில்லா மாகா பாதகம் ... ....
மது மாது சூதென மோகம் கொண்டு
தீய துணை மஞ்சம் கிடந்து
புல்லாகி பூடாகி புழுவாகி போனவன் நான்
இல்லை என்று பொய் சொல்லவில்லை
மெய்யினை காத்தேன் ....
சொத்து சுகம் புறம் எரித்த விஷ யந்தெனக் கண்டு
சொந்த பந்தம் விலகி விட்டகன்றும்
முடி இல்லா மன்னவனாய் முள்ளிருக்கும் ரோயாவின்
தாழம் பூ வாசமே சுகந்தமாய் கிடந்தேன்...

வரவின்றி செலவு செய்து செலவுக்கும் பணம் இன்றி
செய்வ தறிந்தும் அறியா புலையன் ஆனேன் நான்
தீயினை சாட்சி வைத்து தாலிக்குள் தனை நிறுத்தி
தாரமாய் வந்தவளை ஏலத்தில் விற்ற பாவி நான்
அரசாளப் பிறந்தவனை அடிமை யென ஆக்கிவைத்து
கொடு நாகம் தீண்டி மாண்டு மயானம் வந்தவேளை
பிணக் கூலி கேட்டு உதைத்த உணர்வற்ற
சுடலையன் நான்.. ...
விதி எனச் சொல்லி வீண் வாதம் இனிச் செய்யேன்
ஹரிச்சந்திரன் எனும் நாமம் மெய்யுக்கு உவமானம்
நம்பிக்கைத் துரோகத்திற்கு நானே அவமானம்
பிடி சாம்பல் ஆகிவிட்டேன், இனி
முடி ஆண்டு ஏது செய்வேன்
ஈசனே இனி எங்கே உனை நான் காண்பேன் ...Kavignar Valvai Suyen

samedi 19 décembre 2015

இன்னும் என்ன தேடுகிறாய் என்னிடத்தில் நீ…..அதி காலை துயில் எழுப்பி அன்பு பரிசு அள்ளி இட்டாய்
ஈரம் இன்னும் காயவில்லை தித்திப்பு தீரவில்லை
மாலை மஞ்சள் குளிக்கவைத்து
மன்மத பாணம் எய்கின்றாய் 
தொட்ட குறை விட்ட குறை என 
ஏதாச்சும் விடலையே நீ 

இன்னும் என்ன தேடுகிறாய் என்னிடத்தில் 
அந்தி வந்த அருந்ததியும் நாணுகிறாள்
ஆறாம் மீன் கார்த்திகை மாதரும்  
காந்தர்வம் கொள்கின்றார்
                        
வெண் சாமரை வீசி வீசி 
வேடம் தாங்கல் ஆளும் வேந்தே
தோகைக் குழல் நீரலையில் 
தெப்பக் குளம் ஆச்சேடா  
மஞ்சம் கொண்ட பள்ளி அறை
ஆறு கால பூசை ஆச்சு 
அர்த்த இராத்திரி நேரம் இப்போ
பூத் திரியும் வேர்த்திடுச்சு
எனை ஆளும் மன்மதா 
மகராசன் நீதான்டா 

பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...