dimanche 29 mars 2020

அலாரம் அடிக்கிறது !!!


கடமை எண்ணி கடிகாரமாய்
ஓடிக் கொண்டிருந்தேன்
கனதியான வாழ்க்கை !

ஓய்ந்தாலும்
என்னை எழுப்பிவிடும் கடிகாரம்
ஓர் நாள் என்னை எழுப்ப மறந்து
அது ஓய்ந்திருந்தது
அடித்துவிட்டேன் அதனை

ஆனால் இன்றோ
அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது
முற்றாக ஓய்ந்துவிட்டேன் என்பதை
அறியாமலே அது!

அழைப்பாணை இன்றி
என்னை அழைத்து வந்த இயமன்
கடிகாரத்தை பார்த்து
சிரித்துவிட்டே வந்தான்

பாவலர் வல்வை சுயேன்

vendredi 27 mars 2020

அகிலம் யாரிடம் !!!


இறைவனுக்கும் மனிதனுக்கும்
மீண்டும் ஓர் யுத்தம் !
கற்பூர தீபத்தில்
கடவிளின் தூதன் எங்கிறான் ஒருவன் !
சொப்பனமோ, சொற் பதங்களாலே
கடவிள் இல்லை எங்கிறான்
இன்னொருவன் !

வல்லரசும் நல்லரசா கேழ்விகள் மீதம்
பொஷ்பரசும் வைரஸ்சும்
கொல்லுதே இவ்விடர் காலம்

இறைவன் படைப்பா கொரோனா
இதுவரை கண்டதில்லை உலகு
கொல்லாமல் கொல்லும் கொரோனாவை
இல்லா தழிப்பவன் எவனோ
அவனே இன்றெமக்கு
நேர் காணும் இறைவன்

சித்திரகுப்தனும் ஏட்டை துலைத்தான்
இயமனும் இரங்கி கயிற்றை துலைத்தான்
அகில உலகே கோரோனாவின் கொலை வெறியில்
இன்றுருப்போர் இங்கே நாளை இருப்பாரோ
யாருக்கும் தெரியவில்லை

பாவலர் வல்வை சுயேன்

samedi 21 mars 2020

கொரோனா !!!


கொல்லாமல் கொல்லுறியே கொரோனா
அகிலம் கூறு போட்டு மூடுதே கொரோனா
வாழப் பிறந்தோ ரெல்லாம் சாகிறார்
வாழ வழி இன்றி முடங்கிறார்

கை கொடுத்தால் கொரோனா
கன்னம் தொட்டால் கொரோனா
மூச்சில் நுளைந்தே பேச்சை நிறுத்தி
முகம் காட்ட மறுக்கிறியே கொரோனா

யாதி சொல்லும் கொரோனா
நீதி கொல்லும் கொரோனா
மதம் ஏறி மன்னுயிர் கொல்லும் கொரோனா
இனச்சுத்திக் கொலையில் இனிதுறும் கொரோனா
உன் முன் பிறந்தே.., எம்மை கொல்லுதே கொல்லுதே
மருந்தில்லை இதற்கு விருந்துண்டு வீணர்க்கு
பாவ புண்ணியம் பாராதே பாரினில் இவர் எதற்கு

அஞ்சுது துஞ்சுது உலகே இப்போ
அஞ்சாதார் இல்லை அவனியில் உனக்கு
மிஞ்சி எஞ்சி அஞ்சுவோரை அஞ்சாது வாழவிடு
மருந்தில்லா உன்னால் மடியாதோ மாதுயர் இங்கு

ஒரே யாதி ஒரே இனம் ஒரே தெய்வம் என
யெகம் யாவும் உனைப் போற்றி அகம் ஏற்றி
அகவை தொழுவோம் கொரோனா

பாவலர் வல்வை சுயேன் – 21.03.2020

mardi 10 mars 2020

என்ன செய்யப் போகிறாள் !!!

 வான வில்லே வர்ண யாலமே
ஏழு நிறங்களும் உனக்குள்ளே
அதை தொட்டெடுத்தே
ஏதோ வரைந்தேன்
ஓவியன் என்றார்

பாடும் குயில்களே பண்ணிசை புள்ளினங்களே
உங்களின் குரல் எடுத்தே ஏழு சுரம் இசைத்தேன்
பாவலன் என்றார்

ஏய் வானமே....,
வெறுமைக்குள் நீலம் தருகிறாய்
உன் ஞானம்
ஆழ் கடல் நீரை குடித்து
உப்பின்றி மழையாய் தருகிறாய்
விஞ்ஞானமா அஞ்ஞானமா
விண்ணேறிய விஞ்ஞானம் வீழ்ந்து கிடக்கிறது
உன் சூச்சுமம் அறிய காலடியில்

உன் துகில் வில்லெடுத்தே பருவம் பூட்டி
எய்துவிட்டாள் ஒருத்தி வீழ்ந்துவிட்டேன்
ஆறறிவும் ஏழாகலாம்
எட்டா வானமும் கிட்டலாம்
இவள் உள்ளத்தில் இருப்பது
உப்பா இனிப்பா..., சொல்
என்ன செய்யப் போகிறாள் என்னை

பாவலர் வல்வை சுயேன்

vendredi 6 mars 2020

உள்ளத்தில் திருவிழா !!!


ஊரெங்கும் ஒளி விழா உள்ளத்தில் திருவிழா     
பூங்குயிலே பார்த்தாயா பூவரசம் பூ பூத்திடிச்சு
வளைந்தேனே வில்லாய் வரி வளையல் ஒலி கேட்டு
வாலிபம் தோற்றதோ வஞ்சி இவள் கன்னம் கொஞ்சத்தானே

மெட்டி ஒலி யதி போட கொலுசு மணி சுரம் மீட்ட    
புது மனை விழாவோ புரவியின் ஒலியோ
மயிலே என் மாறாப்பில் வீராப்பு இல்லையே
உனைக் காண்டு நாணித்தான் மடிமீது சாயுதே

தொட்டணைத்த தென்றலோ பல்லாங் குழி ஆடுதே    
எட்டி நின்று விழி தாவி என் மேனி மேயுதே
கார் கூந்தல் மேகமோ உனை கண்டு மயில் ஆடுறேன்
மழைச் சாரல் தூவுதே இறகிற்குள் மூட வா

மாயமான் கண்டே மயங்கினாள் சீதா                                     
கணையாழி துலைந்தே மறந்தான் துஷ்யந்தன்
இலக்கியத் தொடர் எழுதி இன்புறும் காதலே
வாசிப்பின் நேசிப்பில் வான் மழை தோற்கிதே

அறுகுக்கும் பொசிந்திங்கு அரியணை காண்போமே      
உருகுது உருகுது உளம் ரெண்டும் ஒன்றாணோம்
அருவியை போல் குதித்தோடி ஆசையும் நீளுதடி
இரவுக்கு விழி இருந்தால் இமை இரண்டும் மூடுமடி

பாவலர் வல்வை சுயேன்

dimanche 1 mars 2020

என்னை உனக்கு தெரிகிறதா !!!


 என்னை உனக்குத் தெரிகிறதா - நான்
அவனில்லை என்று சொல்லமாட்டேன்
ஐந்தில் என்னோடு
ஆரம்பப் பள்ளி வந்தாய்
அன்று நீ போட்ட சட்டை ஆரஞ்சு நிறம்

பத்தில் பல்லாங்குளி விளையாட
வா என்பாய்
அந் நாளில் எனது ஆர்வம்
தோளர்களோடு
கிட்டிப்புல்லு விளையாடுவதும்
நாற் கல்லு பந்திலும்தானே

பதினைந்திற்கும் இருபதுக்கும் இடையில்
இடியோடு முழக்கங்கள் இருவருக்கும் நடுவில்
இருவருமே,
எதை கண்டும் அஞ்சுவதில்லை

உனது அண்ணனும் அப்பாவும்
என்னை பார்த்து முறைப்பார்கள்
எதற்கென்று தெரிவதில்லை
அவர்களிடம் உதை வாங்கும் போதுதான்
தெரிந்துகொண்டேன்
உன்மேல் நான்கொண்டது காதல் என்று

உன் இருப்பிடத்தில் பல இடமாற்றங்கள்
சித்தி வீடென்றும் அத்தை வீடென்றும்
இரகசிய கூண்டுக் கிளியாய் நீ

நீ இருக்குமிடம் தேடினேன் தேடினேன்
என் கால்கள் ஓயவும் இல்லை
தேடினேன் தேடினேன்
என் தேடல் தோல்வி காணவும் இல்லை

வென்றுடுவேன் இனி எமது வாழ்வை
இன்று நான் உயர்ந்த உழைப்பாளி
உன் வீடு வந்தே
உன்னை பெண் கேட்பேன்
இனி இல்லை என்று சொல்வாரா
உன் அண்ணனும் அப்பாவும்

நாம் யார்க்கும் குடி அல்லோம்
இல்லறம் கொள்வோம்
இயமனுக்கும் அஞ்சோம்

பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...