jeudi 27 juillet 2017

மது!!


வாழ்ந்து பார்த்தேன் வாழ்வும் வளமும் எதிலும் சுகம்தானே
ஏனோ வீழ்ந்தேன் மடமை யினாலே மதுவின் மடிமேலே
மயக்கம் தீரலையே மனசும் ஆறலையே !

உன்னை தொட்டேன் நான்தானே மதுவே  
என் உள்ளம் புகுந்து ஆட்டுகிறாய்
குணமும் கெட்டு உறவும் விட்டு
ஊதாரியாகி சிரிக்கின்றேன்
தெரிந்தும் நானே நடிக்கின்றேன்
ஈகோ தானே என் கிரீடம்
ஆணவம் எனது சிம்மாசனம்
நல்லவன் தானே நானும் உன் துணை இல்லாமல்
மதுவே மதுவே எனக்கு நீயேன் மந்திரியானாய்
வீதியில் வீழ்ந்தும் சகதியில் புரண்டும்
ஊரார் சிரித்திட ஏனோ வாழ்கின்றேன்

ஏன்தான் துயரம் ஏனோ மயக்கம் எனக்குள் பூகம்பம்
உயிரும் உறவும் பட்டிணிச் சாவில் துடித்தாலும்
ராச்சியம் இல்லா ராஜா நானே பரியில் போகின்றேன்
குடிப்பவனே என் கூட்டாளி
பெருங் குடி மகனாய் ஊதாரி
தூயவனா நான் கொடியவனா மதுவின் காதலனா
கட்டிய தாலியும் கம்மல் வளையலும் அடகுக் கடையிலே
அவள் கலங்கியே அழுதும் காணா இன்பம்
வோதை மயக்கத்திலே
வீதியில் சீதையின் வார்த்தை கேட்டேன்
தீயில் குளித்திட தினம் தினம் உதைத்தேன்
தீயில் குளித்து தீயாய் எரிந்து தூயவள் போணாளே
மதுவே மதுவே என்னை குடித்திடு
மயக்கம் வேண்டாம் மரணம் வேண்டும்
இழி நிலை வாழ்வு இனியும் வேண்டாம்
என்னை நீயே கொன்றுவிடு....

பாவலர் வல்வை சுயேன்

mardi 25 juillet 2017

காத்திருக்கேன் கண்ணா !!!

எனக்குள்ளே எனக்குள்ளே
என்னாச்சு என்னாச்சு
ஆசைத் தூறல் மெல்ல மெல்ல   
விரகம் மூட்டி கொல்லுதே
மாதென் செய்வேன் மன்னவா
மனு நீதி காத்திட வா வா நீ வா
விடியலும் உட் புகாமல் யன்னலைச் சாத்து
கரு விழி நான்கும் கலர்ப் படம் காணட்டும்
இதழ் ரசம் தானே இரவுக்கு ஆகாரம்
நான்கு இதழ்களால் நான்மறை எழுதுவோம்
காலங்கள் கரையுதே காத்திருக்கேன் கண்ணா

பாவலர் வல்வை சுயேன்

lundi 24 juillet 2017

பிடி சாம்பலே மேனி !!

வாழ்ந்து வெல்லவே வாலிபம்
வாழ்ந்ததை நெய்யவே வெள்ளி முடி
மழலை பருவ மாலை கட்டி
மீழ் நினைப்பில் தோளில் இட்டேன்
துளித் துளியாய் விழித் துளிகள்
தூறல் உதிர்வில் எத்தனை முகங்கள்
பட்ட கடன் இன்னும் தீர்க்கலையே
பாடை விரிப்பில் ஆயுசின் அணைப்பு

பெற்றவர் உறங்க விரித்த படுக்கை
பிள்ளை எனக்கும் பெருமிதமே
மரண அறிவித்தல் ஊரார் செவியில்
விறகுக் கட்டில் சுடலை கோடியில்
திறந்த விழிகளை மூடிவிட்டு
கூடி வந்தோரும் குறுகியே சென்றார்
ஆறத் தழுவிய அக்கினியே
உனக்கும் ஆறாப் பசியே
நீ அள்ளித் தின்று செரித்தது போக
பிடி சாம்பலே மேனி
அஸ்த்தி என அதையும்
கரைத்திட்டார் சமுத்திரத்தில்

பாவலர் வல்வை சுயேன்

dimanche 23 juillet 2017

பள்ளிக்கு போய் வா கண்ணே !!!

பள்ளிக்கு போய் வா கண்ணே
பொழுது போகும் முன்னே  
புன்னகைத் தோட்டத்தின் வைரம் நீ
ஐந்தில் அகரம் எழுது சிகரம் உன் னடியில் !!
நாளைய உலகின் ராணியும் நீயே மேதினியை கற்றுவா
மேன்மையும் தாழ்மையும் போதனை தரும் விருட்சமே !!!

பாவலர் வல்வை சுயேன்

samedi 1 juillet 2017

தீயே நீ செய்த பாவம் என்ன !!!

அன்பெனும் அறிவுடமை உலகளாவி
அழி நிலை உற்று அரிதாகி தாழ்வுற
பேதமை பெருஞ் சுவர் மேவி எழுகிறதே

குணம் எனும் குன்றேறி உயர் நிலை உற்றோரும்
கொடு நிலையாலே தாழ்வாகி சிதையென வீழ்ந்திட
பற்று நிலை தாளாது தகித்து நீ மௌனித்தும்
சிதைவினை நோக்காது நொந்த மனம் நோக்கியே
சிதை மூட்ட உன்னையே தேடுகிறார் !
தீயே நீ செய்த பாவம் என்ன !!

பாவலர் வல்வை சுயேன்

தளம்புதடி என் மனசு !!

தண்டை கால் கொலு சொலித்து
தண்ணீர் எடுக்க வந்தவளே
தண்ணீர் குடம் போல்
தளம்புதடி என் மனசு
தப்பாக எண்ணாதே

உன் மூக் குத்தியாகவேனும்
என்னை நீ சேர்த்துக்கோ
உன் சுவாசக் காற்றில்
உயிர் வாழ்வேன் நானும்...

பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...