mardi 27 février 2018

கர்வம் களைந்திடு !!!


இம்மாம் புவியில் அவரவர் பால்
தற் புகளும் தறி நிலையும் கூட்டி
சுயநல சூதொடு
தீண்டாமை மெருகேற்றி 
தேரேறும் மானிடா 
கருவும் கருவறையும் 
தெருவும் ஒன்றடா 
கர்வம் களைந்திடு 
நிலையில்லா வாழ்வில் 
நின் வாழ்வும் கனாக்காலமே

பாவலர் வல்வை சுயேன்

samedi 24 février 2018

காதலால் கனிந்தேன் அபிராமி !!!


புன்னகையாலே பொன் நகை மிரள
சிந்துகிறாய் முத்துச் சிதறல்
உன் கண் நகை வாங்கி
வரி வளை எழுதி
கனிந்தேன் அபிராமி
நின் கழல் போற்றி போற்றி

நெரிஞ்சி காட்டில் குறிஞ்சி நீயடி
பிறவி பெருங்கடல் நீந்துவார் நீந்த
அடி முடி காண்டேன் என
தாளம் பூவொடு
பொய்ச் சாட்சி தருவேனா

வாழ்வென்றும் தாழ்வென்றும்
வாசலில் கோலங்கள்
கூண்டேறி நின்றாலும்
காடேகும் போதிலும்
சொல்லும் நா உன் நாமம்
கணமும் மறவேன் தாயே
தோல்வி நிலையென துவளேன்
கூட்டிப்போ உன் திருவடிக்கே
தாழ்விலும் உயர்வுண்டு
கனிந்தேன் அபிராமி
நின் கழல் நினைந்தடி 
போற்றி போற்றி போற்றி

பாவலர் வல்வை சுயேன்

lundi 19 février 2018

பசியில் அழுகிறான் இளையவன்!!!

தொட்டுத் தொட்டு பட்டு வண்ணம் எங்கிறீர்
பட்டுச் சட்டை கேட்டேன் தரவில்லை
கூடி விளையாட ஒண்ணுக்கு மூணு
தம்பி பாப்பா பெற்று தந்திருக்கிறீர்கள்
பொம்மை கேட்கிறாரர்களே
அவர்கள் விளையாட
என் செய்வேன்...
கொடுத்து விளையாட
என்னிடம்
பளைய பொம்மையும்
இல்லை
நீங்கள் வாங்கித்தரவில்லை
ஆனாலும் நீங்கள்
மிகிந்த சந்தோசத்தில் இருக்கிறீர்கள்

ஆறுமாதத்தில் அடுத்து பிறக்கப் போகும்
தம்பியோ தங்கையை நினைந்து!
கட்டுப்பாடு
உணவுக்கும் உடைக்கும்தானா
உங்களுக்கில்லையா .....?
பட்டுச்சட்டையும் வேண்டாம்
பட்டு வண்ணமும் வேண்டாம்
பெற்றவர்கள் நீர்தானே
எம்மை பட்டிணி போடாதீர்கள்
பசியில் அழுகிறான் இளையவன்

பாவலர் வல்வை சுயேன்

dimanche 4 février 2018

ஊடலும் கூடலும்...

யன்னலை திறந்து மெல்ல வெளியே எட்டிப் பார்த்தேன், குளிர் நங்கை ஓடிவந்து கொஞ்சிணாள் என்னை ஊடலும் கூடலும் எங்களின் காதல் நாடகம் இவளிடம் எப்படி விவாக இரத்து வாங்குவேன்

பாவலர் வல்வை சுயேன்

samedi 3 février 2018

பல்லுக்கு முத்தழகு....

பல்லுக்கு முத்தழகு நாவிற்கு சுவையழகு கல்விக்கு அறிவழகு பாவிற்கு தமிழழகு அன்புக்கு அடிபணிந்தால் ஆனந்தம் பேரழகு உள்ளத்தை தந்துவிட்டேன் உயிரே நீ அழகு

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...