றெக்கை கட்டி பறந்திடிச்சே என் தங்கைக் கிளி
நெஞ்சம் கூடு விட்டு கூண்டில் ஏறிநீதி முறை தேடுதேடி அன்புக் கிளி
இது உறவின் யாலமோ உலகின் கோலமோ
உயரப் பறந்து உயிரை எடுக்கும்
உணர்ச்சிக் கோலமோ.. ..
நினைந்து பார்க்கிறேன் நீண்ட இரவை கொல்கிறேன்
உயர்ந்த மனிதன் உலகில் இன்று எவரும் இல்லையே
பறந்து போகும் மேகம் கூட என்னை வருத்திச் சிரிக்கிதே
கிளியே நீ சிரித்துப் போகிறாய் உரிமை எரிந்து போச்சுதே
நீ தங்கை அல்லடி தயக்கம் கொள்கிறேன்
தர்மம் என் தலையை கொய்து கடலில் போட்டுதே.. ..
Kavignar Valvai Suyen
''..இது உறவின் யாலமோ உலகின் கோலமோ
RépondreSupprimerஉயரப் பறந்து உயிரை எடுக்கும்
உணர்ச்சிக் கோலமோ.. ..
நினைந்து பார்க்கிறேன் நீண்ட இரவை கொல்கிறேன்
உயர்ந்த மனிதன் உலகில் இன்று எவரும் இல்லையே...'''
அமைதியடையலாம்.
ஆண்டவன் துணையிருப்பார்.
வேதா. இலங்காதிலகம்.
சகோதரி வேதா.. ஆண்டவனுக்கும் அடியவனுக்கும் இடையே தூபம் போடும் தீயவனே, தீதுதனில் தீபம் ஏற்றி ஏய்க்கின்றான்... ஆதவனை தொட்டால் அழிவேன் என்றே.. ஆண்டவனைச் சொல்லி அனைத்தும் செய்கின்றான், எங்கே அந்த ஆண்டவன்...
Supprimer