lundi 10 novembre 2014

யன்னலை திறந்தேன் ..


யன்னலை திறந்தேன் குளிர் நங்கை ஓடி வந்து
கெஞ்சினாள் கொஞ்சினாள் என்னை
சட்டென மூடிவிட்டேன் யன்னலை

தினம் தினம் இவளோடுதான்
ஈர் நான்கு மணித்துளிகள்
கை கோர்த்து நடக்கிறேன் வெளியே
இவள் கொடுத்த முத்தங்களின் ஈரம்
என் கன்னங்களில் இன்னும் காயவில்லை

மழைக் காலம் அல்ல ஐரோப்பாவில்
பனிக் காலம் இவ் வேளை
ஈர் இரண்டு மாதங்கள் சன்னியாசம்
போய்விடல்லாம் என நினைக்கிறேன்
வெயில் காலத்தில் இவள்
வெளி நடப்பு செய்துவிடுவாளே
கூதலும் வேண்டாம் குளிரும் தேவை
கூடிக் குலவுகிறேன் குற்றம் இல்லை
ஊடலும் கூடலும் எங்கள் காதல் நாடகம்
விவாக ரத்து கேட்பதில்லை இயற்கையாள்....

Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. விவாக ரத்து கேட்பதில்லை இயற்கையாள்....
    உண்மை தான்.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  2. சகோதரி வேதா - இயற்கையாள் இனியவள் துறவிக்கும் மனையாள் பிரிந்தாலும் ஜீவனாம்சமும் கேட்பதில்லை இவள்... உண்மை நிலையின் ஆதாரம் தந்தீர்கள் நன்றி...

    RépondreSupprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...