mardi 28 juillet 2015

மனிதருள் மாணிக்கம் அப்துல் கலாமுக்கு ஆத்ம அஞ்சலி....

ஆத்ம விரிச்சிகன் அன்புடை நாயகன் அப்துல் கலாம்

அறிவியல் ஆய்வின் அரசுரிமை நாயகன்

இல்லை என்று இல்லாது இந்தியம் மிகையுற

மரைக்காயர் ஜைனுலாப்தீன் ஆஷியம்மா

ஆளக்கடல் முத்தாய் ,

உன்னை முகிழ்ந் தெடத்து தந்தாளே....

 

இலக்கியத் தாயின் இறையடி எழுத்தே

இளைஞர் கூடலின் இணையடி நட்பே

விரலிசை பாட்டின் வீணையின் தோழனே

பாரத தேசத்தின் கணை உயர் தமிழ் கலாமே

எல்லையில்லா நாயகா பாரதத்தின் பணி முகத் தலைவா

பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா , பத்மவிபூஷன் என

அப்துல் கலாம் உன்னிடத்தில் அற்பணம் ஆனதினால்

விருதுகள் யாவுமே விரலிசை நயம் ஆடிடக் கண்டேன் .....ஈரடித் திருக் குறள் நிறை நீள் வளி நடந்தவா

கற்புடை கவியினில் நற் குழந்தைகளும் ஈன்று

நாடே உன் தாய் வீடாய் வாழ்ந்த மாமேதையே

திருவே, நெருப்பின் சிறகுகளி சுயசரிதை எழுதி

விடை கூறிச் சென்றாயோ ......

அறிஞனே விஞ்ஞான உலகுன்னை அழைக்கின்றது

தடை இல்லை தமிழா ஏவுகணை ஏவலே

தாய்த் தேசம் உன்னை தாலாட்டும் வேளையிது

தங்கமே தவப்புதல்வா அப்துல் கலாம் நீ இளைப்பாறு...
Kavignar Valvai Suyen

lundi 27 juillet 2015

தேசியத் தலைவன் வே. பிரபாகரன் .....

சுயநிர்ணயம் இல்லா சுயம்பின் உறங்கா நிலை உள்ளிருக்க
தன்நிலை இல்லா கொலைகளில் உதிரம் கொப்பளித்தோட
சுவரெங்கும் சுண்ணாம்புச் சட்டை
உறங்காத் தவத்தில் நீறாடை கட்டியிருக்கும் நெருப்பிது
கொடுத்த தலைகளுக்கான விடுதலை கீற்றோடு
வீறு நடை கொள்ளும் விலையாவதில்லை
தமிழீழத்தின் தன்மான விடுதலை....

Kavignar Valvai Suyen
 

dimanche 26 juillet 2015

நீ பருவ நிலா...

நிலாவே நீ தூர நிலா உன்னிருவிழியின் கருவண்டுகள் காந்த நிலா

சின்னத் திடல் நெத்தியிலே செண்ணிறத்து குட்டி நிலா

புன்னகையில் பூச்சூடுகிறாய் நீ பருவ நிலா

நிலாவே உன் காதோர லோலாக்கில்

சிலிமிசம் செய்யும் சிட்டு நான்

உன்னை தொட்டுணர்ந்தேன் நீ பட்டு நிலா

அமாவாசை இருள் அறியேனடி இனி நான்

உலா போகிறேன்

எனி என் வாழ்வில் என்றும் நீயே பறுவ நிலா ...


Kavignar Valvai Suyen

mardi 21 juillet 2015

முகம் பார்த்த கண்ணாடி ....

இதயம் ஒரு வைரம் என்றே இத்தனை நாள்
நினைத்திருந்தேன் ....
அது உடைந்ததும் அறிந்தேன்
அதுகும் ஒரு கண்ணாடி என்று
உடைந்த துண்டுகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு சுய சரிதை சொல்லியது எனக்கு

சிரித்தவருக்காய் சிரித்திருக்கிறேன்
அழுதவருக்காய் அழுதிருக்கிறேன்
சுமை கொண்டோர்க்கு
சுமைதாங்கியாய் இருந்திருக்கிறேன்
உறவென்றும் உற்றார் என்றும்
மனைவி என்றும் மக்கள் என்றும்
தோழன் என்றும் தோழி என்றும்
அனைவருமே முகம் பார்த்த கண்ணாடி
என் இதயம் ....

உடைந்த துண்டுகளை ஒட்டி பார்த்தேன்
ஒட்ட முடியவில்லை
என் இதயக் கண்ணாடியில் ஒவ்வொருவருமே
கல் எறிந்திருக்கிறார்கள்
எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது இதுதாண்டா உலகம்
போதும் உனக்கு வா என்றழைக்கிறது...
Kavignar Valvai Suyen

சங்கமக் கடல் ....

உன்னை, திருடி என் எண்ணக் கோட்டையில்
பூட்டி வைத்தேன்..
என் விழிகளை திருடி உன் விழிகளுக்குள்
நீ மூடிவிட்டாய்!
உன் விழி வாசல் வந்த பின்புதான் உணர்ந்தேன்
நான் கிரகப்பிரவேசம் செய்திருக்கிறேன் என்பதை

உன் வண்ண இதழ்களால் எனக்கு மட்டும்
நீ இரகசியம் சொன்னாய்..
அந்த இரகசியத்தை உனக்கு மட்டும்
நானும் சொன்னேன்!
I love  you ...  I love  you ...
இரு இதயங்களும் நதிகளானது எப்படி
வாழ்க்கை எனும் சங்கமக் கடலில்
ஓடோடி வந்து சங்கமித்துக்கொண்டன
பிரிவினை என்பதே இனி இல்லை
இல்லறம் என்பது இதுதானோ
நல்லறம் காண்போம் என் இனியவளே ....
Kavignar Valvai Suyen

jeudi 16 juillet 2015

அந்த அரியாசனம் ....


நெஞ்சம் இழந்த புன்னகை குருதி கொப்பளிக்கும் காயம்
அங்கம் எனும் மேனியில் உழுத வரப்புகளாய்
கொத்தணிக் குண்டுகள் குதறிய கோலம்
 
காலம் எது காலம் எது கண்ணுறங்கி நாளாச்சு
போதைக்கும் மாதுக்கும் சோடைபோன உறவாச்சு
ஜடங்களான  ஜடங்களின் வருகையில்
மரணக்குழியும் மயான விறகும் விறைப்புற்று எரிகின்றன
ஆழ்வோமா அந்த அரியாசனம்
தணியாதோ எங்கள் விடுதலை மோகம்...
Kavignar Valvai Suyen

mardi 14 juillet 2015

இசை மா,மேதைக்கு என் இரங்கல்...


மெல்லிசை மன்னா எங்கள் அண்ணா
எம் எஸ் விஸ்வநாதா...
சுரங்களை நீ மீட்டினாய்
உன் ஐந்து விரல்களிலும்
அபினயம் ஆடிய
ஏழு சுரங்களும்
உன்னைத் தேடுகின்றன
இசைக்குயிலே
உன் உயிரெனும் பாடல்
எம்மோடுதானே உன் உடல் கூடு
மௌனம் கொண்டதேன்....
தீயே உனக்கு தீராத பசியோ
நீ தின்னும் உடல் எத்தனையோ
எனக் கேட்டவனே
அதனோடு இன்று ஐக்கியம் ஆகிவிட்டாய்
மறவோம் மறவோம் இசை மா,மேதையே
மரணிக்கவில்லை நீ மெல்லத் திறந்த கதவில்
ஒவ்வொரு பாடலிலும் எமை நீ ஆழ்கிறாய் ...
Kavignar Valvai Suyen

samedi 11 juillet 2015

சிகரம் ஏறும் சித்தெறும்பு நான் .....


உன்னிரு விழி  இரண்டும் பொய் யல்ல தேனே
கண்ணாம் பூச்சி களிப்பில் என்னை காட்டுதடி
உன் வாஞ்சை கண்ட விண் மீன்களும்  
உன் னழகு ஒளியில் வெக்கிப் போச்சுதடி
இரவுக்கு அது வேண்டும் பகலுக்கும் நீ வேண்டும்
காந்த மலரே முடாதே விழியை
உனக்குள் பிடித்த என்னை திருப்பித் தந்துவிடு
சிகரம் ஏறும் சித்தெறும்பு நான் 
இன்னும் , அதன் அடிவாரத்தில் !
                                                                           
விழியால் நீயும் எழுது கவிதை
விடிந்தாலும் அழியாது
உன் ஓரப் பார்வை அறிவேன்
அதன் வாசகம் வரைவேன்
நானும் நீயும்தானே இங்கு
அந்த அலைகளிடம் மெட்டெடுத்து
மீட்டுவோம் அனுராகச் சுரத்தில்
அந்தி நேரத் தென்றல் பாட்டு..
Kavignar Valvai Suyen

vendredi 10 juillet 2015

முத்தக் கணக்கை வையாதே ...


பருவக் கோலம் பற்றி எரிகிறேன்
வாலிப முறுக் கென்னை
கெஞ்சுதடி கொஞ்சுதடி
கொஞ்சமேனும் கொஞ்சலாமே
விஞ்சேன் அஞ்சாதே
தணித்திடு ஏஞ்சலே என் தாகம் நீதானே..
 
நித்தம் தருவேன் மொத்தம் அறியேன்
ஆசை கொண்ட பித்தன்
அவனியில் எவனில்லை
மன்மத பாணம் தைத்திட வீழ்ந்தேன்
முத்தக் கணக்கை வையாதே
கொடுக்கவா எடுக்கவா
இருட்டறை கூடு இன்ப சுரம் மீட்டுதடி
பூட்டிய கதவுக்குள் நீயும் நானும்தான்
சம்சாரம் இல்லா சன்னியாசியும்
விதி விலக்கல்லடி ...
Kavignar Valvai Suyen

mardi 7 juillet 2015

தன்மானச் சிகரம்....

உடல் பொருள் அனைத்தும் தந்தான்
நீ என்ன செய்தாய் அதற்கு....

vendredi 3 juillet 2015

காலத்தை வென்றுவிடு....


கால நதியின் நீர்க் குமிழி நீ ….
ஓடும் மேகமும் மாறும் உலகும்
காத்திருப்பதில்லை உனக்காக
ஒரு கரை உனது ஜனணம்
மறு கரை உனது பயணம்                        
வாழ்க்கை யெனும் ஓடம்
உன்னை அழைத்துச் செல்கிறது
மறு கரை சேரும் முன்
காலத்தை வென்றுவிடு.
Kavignar Valvai Suyen       

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...