dimanche 28 janvier 2018

சுமங்கலியாம் அவள்....

உதய வாழ்வென்றே உளமாற நினைந்திருந்தேன்
அந்திமம் என்றே அஸ்தமனத்தில் தள்ளிவிட்டார்
வானவில் வந்து அழைக்கின்றது
வர்ண ஆடைகள் பறிக்கப் பட்டன
பொட்டோடு குழலாடி பூவோடு வாழ்ந்திருந்தேன்
பொழுதாக வில்லை பொழுதாகி போச்சென்றார்
பதி பிரிந்தால் விதியெனச் சொல்லி
மலர்ந்தும் மலராமல் உலர்ந்தேனா
சுமங்கலியாம் அவள்
அமங்கலி எங்கிறாள் என்னை

தாவாரச் சாரல்கள் வந்து வந்து நனைக்கின்றன
துளிர்க்கிறேன் துவள்கிறேன் இளமை ஊஞ்சல்
இன்னும் இறக்கவில்லை
யன்னல் ஓர நிலா வந்து
என் முகம் காண்கயில்
ஒரு வாசகம் பேசத் துடிக்கிறேன்
வெள்ளைப் புடவை தந்து வேர் அறுத்தோர் அருகே
தூறலே நீ ஏன் இன்னும் மண்ணுக்கு வருகிறாய்
மலர்களுக் கென்றோர் மனம் மறுக்கப் பட்ட உலகிது
விண்ணுலகம் அழைத்துப் போ நானும் வாறேன்            

பாவலர் வல்வை சுயேன்

mardi 23 janvier 2018

சூதறிந்தால் தாழ்வறியாய்....

தத்தித் தாவும் முல்லை செல்வங்களே
இறக்கை துணை உமக்கின்னும் போதாது
கழுகுகள் வட்ட மிடுகின்றன
அந் நாளில் பயம் அறியா குஞ்சே நானும்
அன்னையின் அரவணைப்பில்லையேல்
அகிலத்தை இளந்திருப்பேன்
உயர்ந்தோரே உறவென்பார்
உன்னுயிருக்கே வாள் வீசி
உடல் வளர்ப்பார் உறவென நம்பாதே
சூதறிந்தால் தாழ்வறியாய் தகம் உயர்வாய்


பாவலர் வல்வை சுயேன்

vendredi 19 janvier 2018

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற
எண்ணச் சிறகை விரித்து வந்தேன்
இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது
மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்தி
என்னை தொட்டு மண்ணை தொட
மரணத் தேதி தொலை தூரம் இல்லை
என கண்டே தெழிந்தது மனசு
ஓய்வூதியம் இல்லா ஓய்வுக்கு
விழிகளால் ஒப்பம் இட்டேன்
கழற்றி போனது தன் இறக்கையை
எண்ணங்கள் ....

பாவலர் வல்வை சுயேன்

jeudi 18 janvier 2018

ஏகாந்தனே உன்னை மறவேனே....


கருவறை கிடந்து கால் நடையென தவழ்ந்து
ஈரடி எழுந்து கூடலும் ஊடலுமாய்
கடுகளவே ஆயினும்
கடல் மடி நினைந்து
ஆசா பாசமும்
அடிபணி வாழ்விலும்  
நரை திரையாகி
கானக இருளில்
மூன்று காலூன்றி
நீழ் துயில் கொள்ளும் காலமும்
நின்னடி தொழுதே காடேகி செல்வேன்
ஏகாந்தனே உன்னை கணமும் மறவேனே

பாவலர் வல்வை சுயேன்

lundi 15 janvier 2018

எங்க ஊரில் சங்கத் தமிழ்...

சங்கத் தமிழ் எங்கே இல்லை சொல்லு பாக்கியம்
அட அது எங்க ஊரில் பொங்கி வழியிதே
அள்ளிப் பருகேன் பெரும் பேரானந்தம்...
வா வா மடியில் ஆடு ஊஞ்சல்
ஆனந்த வரவிருக்கு
அன்பே என் ஆயிரம் கனவுக்குள்
அழகி உனக்கே அரியணை காத்திருக்கு
     
மெட்டுக் கட்டி தொட்டில் லாட்ட கட்டில் காத்திருக்கு
நிலாவும் வளர்ந்து பௌர்ணமியாக கதிரவன் ஒளி இருக்கு
மஞ்சள் குழித்த மாலை பொழுதை அந்தி தந்திடிச்சே
ஆதவன் ஒழிகிறான் அந்தப் புறம்
அன்பே வாயேன்டி
கூடி வாழ திரவியம் தேடு அலை கடல் அழைக்கிறது     
அந்தி குழித்தவன் அழிவதில்லை திரை கடலேறி
அள்ளி வாடா திரவியம் ஆனந்த வாழ்விருக்கு

ஊரே கூடி வாழவும் உறவை கூட்டி மகிழவும்
உழைக்கும் கரங்களில் வலுவிருக்கு
எந்தை உந்தன் முன்னோரும்
அப்பன் ஆத்தா பாட்டனும்
வாழந்து தந்த நிலம் இது
வாழ்ந்து கொடுப்போம் வல்லவர் கையில் வல்வை
பணமும் குணமும் பிரிவினை இல்லா பரிந்துரை செய்தே
ஒளி நிலா கூட்டி விழி உலா போவோம் வாடா வாயேன்டி


பாவலர் வல்வை சுயேன்

vendredi 5 janvier 2018

பெய்யட்டும் மழை...

ஏழேழு ஜென்மமும் உன்னோடென்பார்
காதலும் காமமும் நிறை கண்ட நிலை
மாறும் முன்னே ஏழெதற்கு
ஏன் இந்த ஜென்மமும் என்பார்
பொய்யுரையில் தானே தினம் இங்கே
எழுதுகிறார் வாழ்க்கை புத்தகம்
நல்லார் இங்குள்ளார் எனில்
எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை


பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...