vendredi 24 janvier 2020

அணைக்கத் துடிக்கின்றேன் !!!


நிலா பெண்ணே நிலா பெண்ணே
நீ, தேய்ந்து மறைவது நியமா
ஊர் சொல்லும் சொல்லில்
உண்மை இல்லை உன்னை அறிவேனே

பூரண நிலவே, பூமியின் நிழலில்
முகத் திரை போடுகிறாய்
நாணம் உற்றே நளினம் மெலிந்து
மாதத்தில், ஓர் நாள் மறைகின்றாய்

தேயும் நிழலில் வளர் பிறையாகி
பருவம் பூப்பவளே
புருவ வில்லால் வையகம் எய்து
புன்னகை பூக்கின்றாய்

காணம் பாடும் கவிக் குயில் நான்
அணைக்கத் துடிக்கின்றேன்
வான் மதி ஒளியே சிறகு விரித்தேன்
இரு கை நீரில் உன்னை ஏந்திவிட்டேன்

பாவலர் வல்வை சுயேன்

samedi 18 janvier 2020

ஆசை பெண்ணில் வைக்காதே !!!


 வைக்காதே வைக்காதே ஆசை பெண்ணில் வைக்காதே
ஆம்பள மனசு சுத்தம் பொம்பள மனசு குற்றம்
ஆயிரம் ரகசியம் பூட்டி வைப்பா
அதனால் அவதான் சுத்தம்

மின்னும் தங்கம் அவதான்டா
பொன்னும் மணியும் அவதான்டா
சூரியன் என்றே சொன்னவதான்
சந்திரன் தேடி போறாடா

இதயம் இருக்கிது தெரியுதப்பா
இருண்டால் அதுகும் அழுகிதப்பா
அர்ச்சனை கோவில் சிலை போலே
அபிசேகம் தினமும் நடக்கிதப்பா

சுத்தம் உள்ள மனசுக்கு சூத்திரம் தெரியலையே
அச்சம் இருக்கு ஆவன செய்திட எதுகும் தோணலையே
கள்ளை பாலென குடித்துவிட்டு காகிதக் கப்பல் ஓடவிட்டேன்
கண்ணீர் நிறைந்து குளமாகி காகிதம் கரைஞ்சு போயிடுச்சே

பாவலர் வல்வை சுயேன்

mercredi 15 janvier 2020

தைப்பொங்கல் வாழ்த்துகள் !!!


 பொங்கலோ பொங்கலென்று பொங்குதின்பத் திருநாள்
தை பொங்கி வழி சிறக்க வந்தாய் இறை மகளே

பொங்கலோ பொங்கலென்று தரணி எங்கும் 
பொங்கிதே தமிழரின் தைத் திருநாள் 

அந்திமம் நீக்கி ஆதவன் வருகிறான்
பழமை போக்கி புதுமை கூட்டி
வரவுகளாலே வாசனை தூவி
அன்பிணைப்பில் ஆனந்த மழையில்
பொங்கும் பொங்கல் இன்பத் திருநாள்

புத்தாடை கட்டுங்கடி சித்தாடை உடுத்துங்கடி
மத்தாப்பு விண்ணிலே மாறாப்பு மூடுங்கடி
விளைந்த நெல் அரிசி குத்தி
பாசிப்பயறு சேர்த்தெடுத்து
பொங்கிதே பொங்கல் கோலம் இட்ட முற்றத்திலே
கருப்பஞ் சாற்றில் பயறுட்டு பக்குவமாய் இறக்கிங்கடி

பட்ட துன்பம் யாவும் தீர்த்து
உற்ற துணை உரிமை சேர்த்து
நித்தம் நீடூழி நித்திலம் வாழ
பொற் கதிர் வீசி அகவிருள் போக்கி
செயற் பெரும் துணை கருணை சேர்த்தே
இப்புவியில் இடர் களைந்து இனிதே வாழ்வோம்
பொங்கலோ பொங்கலென்று பொங்குதின்பத் திருநாள்
தை பிறந்து வழி சிறக்க வந்தாய் தை மகளே வாழிய நீ

பாவலர் வல்வை சுயேன்

vendredi 3 janvier 2020

சட்டை இல்லா யன்னல் !!!

சாத்திய கதவு என் இதயம்
சட்டை இல்லா யன்னல்
உன் மேனி!

கூடு விட்டு சென்றாலும்
ஆடுகிறாள் என் தேவி
ஆனந்த ஊஞ்சலில்
என்னோடு

மாங்கனி வண்டு போல்
தேனுண்டு கிடக்கிறேன்
அனு தினம்,
அறியாயோ ஊதாவே

பொய் உடம்பில் போதை உனக்கு
என் உள்ளத்தின் உள்ளே அவளே

பாவலர் வல்வை சுயேன்

jeudi 2 janvier 2020

காம்புகள் அழுகின்றன !!

வாடா மலர் என்னை
இதழ் ஒன்றாய்
உதிர்த்துவிட்டாய் ...

துவள்கின்றேன் துடிக்கிறேன்
துயரங்கள் தொடர்கின்றன
அடிச் சுவடுகள் அரும்பாக
மொட்டாகி மலரானேன்
இதற்காகத்தானா...,
சுரந்த காம்புகள் அழுகிறன !

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...