vendredi 27 février 2015

சந்தேகம்...

சந்தேகம்...
இல்லறத்தின் இன்ப நிலை சாய்த்து - துன்ப
நிலை வீழ்த்தி ரெத்தம் குடிக்கும் பிசாசு
வரவேற்ப் பின்றி வாசல் வரும்
பூதாகரம் கொண்டு தலைக்கேறும்
புழுதிப் பூசலாய் தொட்ட இடம் நோக
தொடாத இடம் சாக சத்திர சிகிச்சை செய்யும்
சந்தணம் உரைத்து
மேனி எங்கும் கொண்டாலும்
குளிர்மை இதற்கு கானகத் தூரம்
மரணம் கண்டுதான்
சந்தேகப் பிசாசு மரணம் கொள்ளும்
சந்தேகக் கோடு சந்தோசக் கேடே ....
Kavignar Valvai Suyen

jeudi 26 février 2015

வீடு...


உயிரும் உடலும் சேர்ந்த கூடு
உறவோடு வாழத்தானே
தேன் கூடானது வீடு...
கல்லும் மண்ணும் சீமெந்தும்
கலந்த கலவை கல் வீட்டில்
மாடி யன்னலும் சொக்கா சோக்கில்
சொக்கிப் போய் நிற்கிறது
சந்தோசம் கொண்டு..
 
லெட்ச்சியக் கனவென
லெட்சனை பொறித்திருக்கும் வீடு
கட்டி முடிப்பதற்குள்
காடுவரை செல்லும் வயசை
கடனாய் வாங்கிவிட்டது
சீதணச் சீர் வரிசையாம்
கேட்கிறான் சீமைத் துரை !
இது யார் போட்ட கணக்கு ?
 
வர்ணங்கள் பூசப்பட்ட வீட்டுக்குள்
ஒவ்வொரு கற்களிலும்
குருதியால் எழுதப்பட்டிருக்கிறது
உளைப்பாளியின் வியர்வைத் துளியின்
விலை என்னவென்று..
சேலை நிழல் கட்டி தேய்ந்த வாழ்விருந்தும்
சேரிக் குடிலின் சேதார வாழ்விருந்தும்
செந்தாமரைகள் கை கொட்டிச் சிரிக்கின்றன
வீட்டை கட்டிய தாய் தந்தையரை
முதியோர் மண்டபத்தில் கண்டு.!
Kavignar Valvai Suyen

mardi 24 février 2015

என் தாயின் முகம் தனை மறந்தறியேன்...


கருவறை கடலில் நீந்த வைத்து - உலக
வாழ்வியல் தந்தவள் என் அம்மா
நோயில் பாயில் நான் வீழ்ந்தால்
நொந்து மடிந்தே அவள் துடித்தாள்
அன்பெனும் ஊற்றே அவள்தானே
அனுதினம் நனைந்தேன் நான் தானே
வாழ்ந்த காலங்கள் நான் அறியேன்
என் தாயின் முகம் தனை மறந்தறியேன்
கடவிள் அழைத்ததாகச் சொல்கிறார்கள்
என் அம்மாவை.!
கருணை இல்லாதவன் எனச் சொல்வேன்
அக் கடவிளை..
அன்னை இல்லை இன்றெனக்கு
போதும் என்று சொல்லேன் இப்பிறவி
பெறுவேன் தாயை என் மகளாய்
என் தாயெனும் கோயிலை
தரிசனம் செய்யவே..
Kavignar Valvai Suyen

உன் ஊடல் தீயுதடி...


உலைக் களம் ஆற்ற கிளைக் கரம் நீட்டும்
நிழலடி தரு முற்றத்து வேம்பே...
இலையோ தழிரோ
இன்றுனக்குச் சொந்தம் இல்லை
உதிர் காலத் துயர்க் கோலத்தில்
உன்  ஊடல் தீயுதடி
ஊர் கோலம் போகும் கார் மேகக் காதலன்
அதோ கண் யாடை செய்கின்றான் கலங்காதே
தொட்டணைத்த காதலன் தொட்டணைத்திட
வருகிறான் மழையாய்
உன் சடைக் கூந்தலை சீவி முடித்து
சந்தோசச் சதங்கை இடு
இருள் சூழ்ந்தாலும்
விழிகள் வேலை நிறுத்தம் செய்வதில்லை..
Kavignar Valvai Suyen

mercredi 18 février 2015

எட்டும்வரை எட்டினேன்...


எட்டா கனவை எட்டும்வரை எட்டினேன் - என்
எண்ணத்தில் எட்டவில்லை எட்டுத்தர எட்டு
விட்டுவிட மாட்டேன்....
தமிழ் பாட்டாலே பொட்டு வைத்து
தன் பொன் மனம் தந்தாள் என் அன்னை
குமிழ் கிரீடம் சூடிய அலைகள்
என்னை அழைத்துச் செல்ல
ஆழ் கடல் மூழ்கி அமிழ்ந் தெடுத்தேன்
தமிழாணிமுத்து
ஆசை கொள்ளேன் அதிகம்
அருவமாய்,
எண்பத்தி நான்கு கலைகளில்
எட்டை யேனும் எட்டி
அந்த எட்டுமலை உச்சியில்
மின்னும் தாரகையானேன்
மகுடம் சூடினாள் தமிழ் அன்னை...
Kavignar Valvai Suyen

samedi 14 février 2015

அகவை ஐந்து..


அரும்பாய் தளிர்த்து கருவறை இருந்து
எம் உறவில் உதித்த உயிரே...
உன்னில்!
மலரின் புன்னகை மனம் கண்டேன்
வல்லின மெல்லின  மொழி கண்டேன்
இடையின நடனத்தின் மிகை கண்டேன்
அசைச் சொல்லின் தொடராலே
ஆனது ஆனந்தம் அக மகிழ்ந்தேன்
ஐந்தாண்டின் அகவை
உன்னை அழைக்கின்றது
நட நட நீ உன் திருவடிப் பாதம் நலமுடனே
தமிழாட்சி உயர்வின் சொல்லாட்சியாளனே
எழுத்தாணி ஊன்றி எழுது நீ புது வாசகம்
வல்லமை தருவாள் கலைவாணி
நீ எழுதும் தமிழே சந்தணம்  
அது தரும் தரணிக்கு புதுத் திருவாசகம்
சொல்லாட்சி மிகை வெல்லும்
வல்லான்மையோனே வாழிய நீ
அறநெறி பொருள்  இன்பம் அனைத்தும் காத்து
நூறாண்டு காலம் நோய் நொடி இன்றி மான்புடனே...
 
தாத்தா அம்மம்மா...

vendredi 13 février 2015

காதலர் தினம்...


Happy Valentjnes Day...

மலையும் மடுவும் கொடுக்கின்றது
இதழோடு இதழ் முத்தம்
காத்தும் கடலும் கொடுக்கின்றது
இதழோடு இதழ் முத்தம்
அலையும் கரையும் கொடுக்கின்றது
இதழோடு இதழ் முத்தம்
பூவும் வன்டும் கொடுக்கின்றது
இதழோடு இதழ் முத்தம்
இயற்கையோடு ஒன்றிவிட்டோம் அன்பே
இன்னும் ஏன் தாமதம் கொடுத்திடுவோம்
இதழோடு இதழ் முத்தம்...
Kavignar Valvai Suyen

samedi 7 février 2015

மழை வருமா கிளியே..


கோடை இடி கேட்கிதென்று கூவி அழைத்தாலும்
மாதம் மும்மாரி மழை வருமா கிளியே..
காலம் கனிந்துவர காடுமலை கழணியெங்கும்
பருவத் துளி பொழிந்து பசுந்தளிர் வளர்க்க
கடல் தாண்டியும் வரும் மாரி மழை கிளியே..
Kavignar Valvai Suyen

jeudi 5 février 2015

சலவை போட்டுத் தருகிறான் சூரியன்..


பொய்யிலே புனைந்த வாழ்க்கை - இருந்தும்
மெய் அன்பிலே நனைகின்றேன் இது உண்மை 
பொய்யும் மெய்யும் இன்று யாரிடத்தில் இல்லை
உள்ளரங்கத்தில் இருக்கும்வரையில்
எதற்கும் உருவம் இல்லை
ஒற்றையடிப் பாதை கண்ட இரு விழிகள்
ஒரு விழி போதும் என்று ஒன்றை மூடுவதில்லை
எமது எண்ணக் கோலத்தின் நிறங்களே ஏழு
அதனை ஈரக்காத்தில் இழுத்து வளைத்து
சலவை போட்டுத் தருகிறான் சூரியன்
பொய்யே சொல்லாதவன் நீ எனச் சொன்னாலும்
அட அவனுக்குத்தான்டா வெளிச்சம்....
Kavignar Valvai Suyen

mercredi 4 février 2015

வயசுக்கு வந்துவிட்டேனா நான்..


பெண்ணின் புருவமதை வில்லென்றார்!
பொய் என்றேன்...
அவள் விழியை அம்பென்றார்!
பொய் என்றேன்...
என் இதயத்தை அவள் திறந்தபோதில்
அனைத்தும் உண்மை என்றேன்!
வெற்றுக் காகிதமாய் நான் கிடக்க
மை விழியால் அவள் எழுத
எச்சில் முத்தத்தில் என் நரம்புகளில் ஏதேதோ
அர்ச்சனை பூக்களாய் என் மார்பில் அவள்
மெய் சிலிர்த்த இறைவனாய் நான்
ஏடெழுதி படிக்கவில்லை
ஏந்திழையானாள் அவள் என்னிடத்தில்
நினைவில் ஒரு கணம் நியத்தில் மறுகணம்
தினசரி மலராய் என் ஓர விழிப் பார்வையில்
அவள் தினம் தினம்
இதுதான் காதல் என்றால்
உள்ளங்கை இதயத்தை இன்னும் கொஞ்சம்
பெரிதாய் படைத்திருக்கலாம் இறைவன்
பூப்பூவாய் பூக்கிது காதல்
இன்று எனக்குள்ளும் இது எப்படி
வயசுக்கு வந்துவிட்டேனா நான்..
Kavignar Valvai Suyen

mardi 3 février 2015

தூயவள்...


தூயவள் எனக்கோர் தூதுவிட்டாள்
கலந்தேன் காதலில் காமுறவில்லை
என், வாசல் அழைத்து வாழ்வளித்தேன்
வசந்த ஊஞ்சலில் ஆடுகிறாள்...
 
வஞ்யிவள் சொந்தம் என்று
அந்தி மாலைப் பொழுதெல்லாம்
யார் யாரோ இவளிடத்தில்
இதழோடு இதழ் சேர்த்து
இளம் தேன் மது அருந்தி
இன்பராகம் பாடுகிறார்
யார் இவர்கள்?
 
நாலுகால் பந்தலிட்டு நான் வைத்த
வண்ண மல்லியே...
எத்தனையோ உறவுகள் வண்ண இறகால்
உன்னை அணைத்து முத்தமிட
வண்டாக நான் இல்லையே என வருந்துகிறேன்
வெள்ளை மலரே நீ என்றும் தூயவளே
நானும் உன் நாளாந்தக் காதலனே.!
Kavignar Valvai Suyen

dimanche 1 février 2015

புனர் ஜென்ம மலரே காத்திரு.. ..


இனிமை நினைவிலும் இளமைத் துளிரிலும்
என் உள்ளம் வருடும் பெண்மையே
நான் உருகும் மெழுகு பொம்மையே
ஒரு பக்க பூவிலும் மறு பக்கத் தலையிலும்
வாழ்க்கை நாணயம் இல்லையடி
உன் பூமுகச் சிரிப்பை கருக்கும் திரியில்
ஒளிமுக நாடகம் ஏதுக்கடி
உருகுது மனமும் உளறுது நினைவும்
உன் நினைவலை எடுத்தே போகின்றேன்
மறுமுறை ஒரு முறை கருவறை ஒன்று
என் திருமுகம் தந்தால்
புனர் ஜென்ம மலரே காத்திரு
வாழ்வினில் கொடியது நோய் எனத் தெரிந்தும்
வரம் வாங்கி நான் வந்து பிறப்பேன்
வா வா மலரே அன்றுன்னை நான் அறிவேன்
விடைதா இன்று இதுதான் விதியென்றால்
அந்த விதியோடு நான் போகின்றேன்...
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...