mercredi 30 août 2017

மனுசன் எனக்கு மசக்கையாச்சு !!!


நாலு முள கூந்தல்காறி தோகை மெல்ல விரித்தாளே
ஆசைத்தூறல் கூதல் தொட்டு ஆடும் மயில் அசந்தேனே
ஆறுகால பூசையிலே சாமியென்று சொன்னாளே
பாவியின்று பயித்தியமாய் சேலை நூலின் பின்னாலே

சினிமா என்றால் சினுங்குகிறாள்
சமையலென்றால் அனுங்குகிறாள்
புடவை கடை பொம்மை போலே
நகை கடையில் நுள்ளுறாளே
அட்டியலு ஒட்டியானம்,
வளையல் மோதிரம் வாங்கி கொடுத்தேன்
வைர நெக்கிலஸ் வாங்கிக் கொடென்டு
பூசை செய்து கொல்லுறாளே
மாதச் சம்பளம் மீதம் இல்லே
மனுசன் எனக்கு மசக்கையாச்சு

ஊத்தை வேட்டி சால்வையிலே
ஊரை சுற்றி வாறேனே
பயித்தியம் பயித்தியம் பயித்தியம்தான்
ஊரே சொல்லு தென்னை பயித்தியம்தான்
பணம் இல்லா பிணமாகி நிழலுக்கும் நிந்தனையானேன்
வாய்க்கரிசி தருவதற்கும் நெற்றிக் காசை வருடுறாளே
பாச நேச பந்த மெல்லாம் பணம்தானென்றால்
போதுமடா சாமி போகும் வளி எங்கே சொல்லு

பாவலர் வல்வை சுயேன்

mercredi 23 août 2017

தீயும் மனமே உள்ளொளி ஏற்று ....



வேண்டுவது வேண்டா நிலையுற்று மாண்டால் வருமெனும் மறு ஜென்ம நினைவோதி தீயும் மனமே உள்ளொளி ஏற்றி உளமிசை மேவு பூமிக்கும் பாரமே உன் வாழ்வு

பாவலர் வல்வை சுயேன்

mardi 22 août 2017

அம்மா நீ எங்கே .....

                     
விட்டகலா விடிவெல்லாம் முத்தமிட தந்தவளே நெரிஞ்சியில் என் பாதம் வாழ்வெலாம் ஆடி அமாவாசை அம்மா நீ எங்கே......

பாவலர் வல்வை சுயேன்

lundi 21 août 2017

முற்றத்து பலா.....


முகத்தில் முள் ளிருத்தி அகத்தில் கருவூட்டி
ஒற்றை சூழில் நூற்றுச் சுளை கூட்டி
இரும்பறை யெனும்
வைப்பக வங்கி தனை வென்றே
பெற்றுத் தருகிறாய் சக்கரை இனிப்பில்
தேனமுத கனிச் சுளை
முற்றத்து பலாவே சுற்றமே உன் சொந்தம்
முகத்தில் முள் ளென்றாலும் உன்னகம் அழகே அழகு    

பாவலர் வல்வை சுயேன்

mercredi 16 août 2017

தேனீக்களே வந்தமர்கின்றன !!


இனியவளே உன் பெயரெழுதி பேனா தந்த முத்தத்தில் நீ வருவாயென காத்திருந்தேன் தேனீக்களே வந்தமர்கின்றன உன் பெயரில்

பாவலர் வல்வை சுயேன்

mercredi 9 août 2017

அன்புத் தெய்வங்கள் !!!!!

முத்து முத்தாய் மழைத் துளி முத்தம் ஏன் வருகிது - நீ
கப்பல் கட்டி திரவியம் தேட வாசல் வந்து வாழ்த்துது

நித்தம் நித்தம் வரும் சூரியன் நில்லாமல் ஏன் எரியுது
உலகை நினைந்து உள்ளம் நொந்து
உயிர்களெல்லாம் விடியல் காண தன்னைத் தானே எரிக்கிது

உலகப் பந்து உருளும் விந்தை உன்னில்தானே தெரியுது
நீயும்தானே விண்ணாய் உயர்ந்து வைரம் தீட்டி சிரிக்கிறாய்
ஊதக் காற்று நெரிஞ்சிக் காட்டில் ரெத்தம் கொட்டி அழுதாலும்
தென்றல் காற்றே உயிரின் மூச்சாய் சுவாசம் தந்து வாழ்த்துது
நீரும் நிலமும் காற்றும் ஆகாசம் பூமியும்
அன்பு செய்யும் தெய்வங்களே
வாழ வைக்கும் தெய்வங்களை
வாழ்த்தி வணங்குவோம் அனு தினமே

பாவலர் வல்வை சுயேன்

அறிவாய் மனமே!!


உள்ளத்தில் உள்ளம் வைத்து காதல் கனிவுறேல் கூடு விட்டுச் செல்லும் ஆத்மா அறிகிலார் யாரும் அறிவாய் மனமே

பாவலர் வல்வை சுயேன்

samedi 5 août 2017

கேழ்வியாய் வளைந்தேன் நானே !!!


நான் தமிழனா கேழ்விக்கணை
யாரும் தொடுக்கவில்லை
கேழ்வியாய் வளைந்தேன் நானே

எத்தனை எத்தனையோ எரிப் பிளம்புகள்
என்னைச் சுற்றி தணியாத் தாகத்துடன்
சிங்கள ஏகாதிபத்திய படைகளின் கணைகள்
எமது குடியிருப்புகளை எரித்து
எம்மையும் வீழ்த்தின
சுயம் இளந்த நினைவலை திரும்பிய வேளை

இராணுவ வண்டிக்குள் வீசப்பட்டுருந்தேன்
சிறிசு பெரிசென்ற பேதம் இல்லை
ராணுவ வண்டிக்குள் மானுடக் குவியல்
ரெத்தம் கொட்டி சங்கமித்து உறைந்திட
கண்களின் ஈரம் காயவில்லை

எங்கள் ஊர் மதவருகே அண்மித்தது
அந்த அராயக ராணுவத் தொடர்
இடியாய் ஒரு மனித வெடி
தன்னை ஈகம் தந்தான்
தமிழீழத் தாயின் மைந்தன்
மகே அம்மே கொட்டியா என்ற ஓலம்
தொலைவில் வீசப்பட்டேன்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
உலகத்தமிழினமே உச்சரித்த மந்திரம்
நச்சரித்து அழிகின்றது இன்றந்த வேதம்
தற் கொடைவான்களே
மன்னியுங்கள்
முற்சக்கர வண்டியில் முடமே நான்
சாம்பிறாட்சிய அவையில்
இன்னும் ஈனத்தோரின் இழி நிலையே
எறிகணை ஒன்று தருவீரா எனக்கு
அறிவேன் உங்கள் ஆதங்கத்தை

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...