lundi 31 mars 2014

போதும் என்றும் எனக்கு ஒரு தாரம்....


மொழி அறியா காதலியே உன் விழியாலே
நீ எனக்கு விரசம் ஊட்டி விட்டாய்
உன்னை நான் பருக
என்னை நீ பருக
அச்சம் மறந்தேன்
நீ கூட்டிச் சென்ற இடம் ஏதடி..?
 
தட்டிய கதவு திறக்கப் பட்டது
எதிரே என் காதலி
எரித்துவிட்டாளே
என்னையும் உன்னையும்
விவாகம் ஆகவில்லை
விவாகரத்தும் தந்துவிட்டாள்
ஏன் மணந்தேன் இருதாரம்
இனியும் தொடேன்
சீவாஸ் பதினெட்டே...
போதும் என்றும் எனக்கு ஒரு தாரம்
மன்னிப்பாளா என் மரிக்கொழுந்து..?
தெரியவில்லை..!
தொலைத்துவிட்டேன் உன்னால்
என் வாழ்வாதாரம்....!

dimanche 30 mars 2014

இசைச் சாரல் தூவும் இள நகையே...


சோலைக் கிளியே என் கானக் குயிலே
இசைச் சாரல் தூவும் இள நகையே...
நீ எழுத நான் மீட்ட என்னும்
எத்தனையோ பாடல்கள்
சுரம் தேடித் தவிக்கிதடி
இரவேது பகலேதடி கண்ணே
உன் அழகிய விழிகளுக்குள்
தத்தெடுத்து, தாலாட்டி வா...
ஏழு சுரங்களும் ஆழைக்கின்றன...

samedi 29 mars 2014

விடிந்தால் தெரியும் இரவுக்கும் உனக்கும்..


இரவுக்குள் நிலவை ஒளித்துவிட்டு
உறங்கிவிட்டான்  ஒரு மூடன்
இதயத்தில்  என்னை பூட்டி வைத்துவிட்டு
இல்லை என்கிறாய் நீயும் அவனைப்போல்
விடிந்தால் தெரியும்
இரவுக்கும் உனக்கும்
நான் எங்கே இருந்தேன் என்று..!
போடா பொல்லாத போக்கிறி நீ...!

vendredi 28 mars 2014

மானச் சேலை இன்று..!


மாறாப்பின்றியே
மானம் காத்த
நாணமகளே... 
மாறாப்பிருந்தும்
மண்ணில் புறள்கிறது
மானச் சேலை இன்று..!

jeudi 27 mars 2014

இன்று ஏனோ இன்னும் அவனை காணவில்லை..!


ஒவ்வொரு விடியலிலும் அவன் இல்லை என்றால்

உலகே இருண்டுவிடும் எனக்கு

இன்று ஏனோ இன்னும் அவனை காணவில்லை..!

யாழ் நகரில் எழுந்த கரிய புகை வந்து சொன்னது

உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டது என்று...!

13.04.2013...

mardi 25 mars 2014

இனி என்ன மெகா சீரியல்தான்..


வண்ணத் திரை ஒளியில் வந்தெனைத் துருவி
என் எண்ணச் சிறகதனை விரித்துவிட்டாயடி
கட்டுடல்தான் என்னவளே இன்னும் உன் மேனி
பட்டுடலால் நீ என்னை தொட்டணைத்தபோதில்
எமக்கென்னும் வயசாகவில்லை என
கண்டுகொண்டேன்...
இடைவேளை தந்து நான் விட்ட குறை எவ்வளவோ
தொட்டணைத்த வேளை முடியவில்லை விடிந்துவிட்டது
இன்னும் இருக்கும் எத்தனையோ இரவுகள்
எம் உறவைக்காண இருவிழி யாடை செய்கின்றன
இனி என்ன மெகா சீரியல்தான்..
இருவரும் காண்போம் வா...
உயிர் உள்ளவரை....

lundi 24 mars 2014

நீயும் நாயகன்தான்...


உலகம் உனதே உனதானது
உசிரும் உனதே உனதானது
விதியே விதியென நினைந்து
விழியை நனைக்காதே
நாளை உனதானது..!
பாசம் வேசம்தான்
பயிர்முகக் கோலம்தான்
உயிரே பிரிந்தாலும்
உள்ளம் கரையாதே
காலம் ஒரு கணக்கே
காகிதப் பூ இருக்கே
வாசம் மோசம் செய்தாலும்
நிறங்கள் நீங்கி வாழாதே...
வாழ்க்கை நாடகம்தான்
நீயும் நாயகன்தான்
வானம் எல்லைதான்
வாழ்ந்தே தொட்டுவிடு...

jeudi 20 mars 2014

முருகா என்றழைத்தேன் ஓம் என்றாய் ...


முருகா என்றழைத்தேன் ஓம் என்றாய் 
அருள் முருகா என்றழைத்தேன்
ஓம் என்றாய்
தெரிகிறதா என்னை என்றேன்
ஓம் என்று அருள் கூர்ந்து ,
தொணடமான் ஆற்றங்கரையில்
எந்நிதியும் தரும்
செல்வச்சந்நிதியானாய்
இருக்கிறேன் என்றாய்...
உண்மைதான் ,
கந்தா உன்னை கண்ட பின்னே
உன் திருவடி சரணம் என்றே
உச்சரிக்கிறது என் நா
ஓம் முருகா ஓம் முருகா 
ஓம் முருகா வேல் வேல்..

உனக்கும் எனக்கும் ஒரு ஜென்ம பந்தம்...


அழகோவியமே உறவென்ற உயிர் நூலில்  
கட்டிப் போட்டுவிட்டாய்  என்னை நீ
எண்ணாயிரம் கிலோமீட்டர் இடைவெளி
எனக்கும் உனக்கும்
நினைத்தவுடன் வருகிறாய்
என் நெஞ்சை எட்டித் தொடுகிறாய்
என்னை காணவில்லை என்றால்
உன் கண்களே உனக்கு சுமை என்கிறாய்
இது, கனவோ என கிள்ளிப்பார்த்தேன்
இல்லை இல்லை
என் மேல் நீ வைத்த பாசம்
நியம்தானடி
உனக்கும் எனக்கும் ஒரு ஜென்ம பந்தம்
இருந்திருக்கவேண்டும்
உண்மைதான், நீ என் தங்கை..!

mardi 18 mars 2014

அன்பென்றாலே அன்னை..

அன்பென்றாலே அன்னை
அன்னை இன்றி
தெய்வமும் இங்கில்லை
நீதானே என் அன்னை
நான் உன் பிள்ளையடி...

நிந்தனைதானடி என் செல்லமே...


நிந்தனைதானடி என் செல்லமே – நீ

சிந்திய வெண் சொற்கள் எல்லாம்

என் நெஞ்சக் கூட்டுக்குள்

சிதறிய கடுகுகளாய்

ஜீரணிக்க முடியவில்லை என்னால்

கற்பக்கிரகத்தில் நீ இல்லை என்றால் போடி

வேறொரு தெய்வம் இனி நான் வேண்டேன்..

lundi 17 mars 2014

வாழ்க்கை ஒரு நிலை கண்ணாடி...


வாழ்க்கை ஒரு நிலை கண்ணாடி

நீ சிரித்தால் சிரிக்கிறது

நீ அழுதால் அழுகிறது

அவரவர் விம்பம் அதற்குள்

நடிகனும் நீரே..

இரசிகரும் நீரே...

dimanche 16 mars 2014

இனக்காற்றில் சாய்ந்த மரங்கள்...


வனக்காட்டில் தினம் ஓடுகின்றன என்
மனக் குதிரை, வயசாகிப் போனதால்
வேகம் இழந்து தளர்ந்து விட்டன
என்னிரு கால்கள்...
இருந்தும் தினைப் புனம் காணவேண்டும்
என்கிறது விழி மடல்கள்
வீரியம் இழந்ததால் தூரம் அதிகம் என்று
விரித்த சிறகை மடித்து அமர்ந்திட
தேடுகிறேன் ஒரு கிளை       
இனக்காற்றில் சாய்ந்த மரங்கள்
நீறாகிக் கிடக்கின்றன
இருந்தும் அதன் வேர்கள் மண்ணுக்கடியில்
விதைத்தவன் விழி மூடினாலும்
மீண்டும் முளைக்கலாம் இந்த மரங்கள்
காத்திருக்கிறேன், அந்த ஒரு கொடி நிழலுக்காக
என் உசிர் உள்ளவரை...

samedi 15 mars 2014

ஓடிவிட்டாளாம் என் சாந்தி...


ஓடிவிட்டாளாம் என் சாந்தி - அம்மா
கொதிக்கும் உலை அடுப்போடு
சிணுங்கிய வண்ணம்,
மூக்குச் சீறிக்கொண்டிருந்தாள்...
அப்பா பேசியிருக்கவேண்டும் போல்
பர பரக்க,
விழித்துக் கொண்டிருந்தான்
என் தம்பி - இவன்தான்,
நான் ஆசையுடன் வளர்த்த
என் சாந்தியை
அவிழ்த்து
விட்டிருக்க வேண்டும்
இன்று பௌர்ணமி
வீதி எங்கும் நாய்களின் ஓலம்...

கவிதை நூல் வெளியீடு 06.08.2003.


வல்வை சுஜேனின் மனமுருகி வயல் வெளியில்
கவிதை நூல் வெளியீடு 06.08.2003

   <oj;jkpoH kPJ rHtNjr r%fk; miuFiwahd jPHTfisj; jpzpf;f Kw;gLkhapd; mjid vjpHj;J Gyk; ngaHe;Js;s jkpo; kf;fNs Nghuhl Kd;tuNtz;Lnkd miw$ty; tpLj;Js;shH tpLjiyg; Gypfspd; fiy gz;ghl;Lf;fof nghWg;ghsH GJit ,uj;jpdJiu.  ty;ntl;bj;Jiwapy; ,Ue;J Gyk;ngaHe;J Rtp];yhe;J ehl;by; trpj;J tUk; ftpQuhd RN[dhy; vOjg;gl;l ftpijj; njhFg;ghd  kdKUfp tay; ntspapy; vDk; E}y; ntspaplg;gl;L itf;fg;gl;Ls;sJ. tpLjiyg; Gypfspd; fiy gz;ghl;Lf; fo fj;jpd; mDruidAld; ,e;epfo;T New;W Kd;jpdk; khiy ty;ntl;bj;Jiw rpjk;guhf;fy;Y}hp kz;lgj;jpy; ,lk; ngw;wJ.

  rpjk;guhf;fy;Y}hp mjpgH e. mhpauj;jpdk; jiyikapy; ,lk;ngw;w ,e;E}y; ntspaPl;by; Gypf;nfhbia Gypfspd; tlkuhl;rp tlf;F flw;Gypfspd; murpay; gphptpd; nghWg;ghsH nry;tp. fy;ahzp Njrpaf;nfhbia Vw;wp itj;jhH. nghJr; Rliu kiwe;j Nghuhsp nahUthpd; je;ijahuhd R.jq;Nf];tuuh[h Vw;wp itj;jhH.

  ,e;epfo;tpy; fye;J nfhz;L ntspaPl;Liu Mw;wpa GJit ,uj;jpdJiu jkJ ciuapy; NkYk; njhptpf;ifapy;  rHtNjr r%fj;jpd; eltbf;iffs; mr;rj;ij tpistpg;gjhf cs;sJ. ,e;j rHtNjr jug;Gf;fs; nry;Ykplnky;yhk; vd;d ,d;W elf;fpwnjd;gJ midtUf;Fk; njhpAk;.

  mtHfs; vkf;F KoikahdNjhH jPHitj; jug;Nghtjpy;iynad;gJ cWjpahf njhpfpd;wJ MapDk; vkJ ,yf;if milAk;tiu vq; fSf;fhd xU tho;it jPHkhdpf;Fk;tiu ehk; NghuhLNthk;.  tpLjiyg; Nghuhl;lj;jpd; Muk;g fl;lq;fspy; Nkhrkhd Mszpg; gw;whf;Fiw ,Ue;jJ ,e;epiyapy; ehl;bypUe;J Gyk;ngaHe;jtHfs; njhlHghf fhl;lkhf tpkHrpj;Njd;> Mdhy; ,d;W tpLjiy Nghuhl;lj;ij Kd;ndLf;f Nghjpa Mszp cs;sJ. mj;Jld; Gyk; ngaHe;j vkJ cwTfspd; Nghjpa cjtpfSk; fpilf;fpd;wJ.

  ,Jtiu Gyk;ngaHe;j vk;kf;fspd; ciog;gpid jpiug;glq;fs; vdTk;> fiy epfo;Tfs; vdTk; njd;dpe;jpa Fk;gy;fs; Ruz;b te;jpUe;jd. MapDk; vk;ktHfs; tpopj;Jf;nfhz;ljhy; ,t;thwhd Ruz;ly;fSf;F topapy;yhJ NghAs;sJ.

  Gyk; ngaHe;j kf;fs; tho;tJ mq;F MdhYk; mtHfs; vq;fistpl $Ljyhf kz; gw;wpid nfhz;bUf;fpd;whHfs;. jhk; Gyk; ngaHe;Js;s ehl;iltpl vk; jha;ehl;il mtHfs; $Ljyhf Nerpf;fpd;whHfs;.

  ,d;W ,lk;ngWk; ftpijE}y; ntspaPl;L tpoh> Gyk; ngaHe;J ehl;bw;f;F kPsj; jpUk;gp tUk; vk;ktHfSf;fhd midj;J me;j];J kw;Wk; nfsutj;ij toq;Ftij midtUf;Fk; vLj;Jf;fhl;lNt ,lk; ngWfpd;wJ vd njhptj;jhH.

  Kd;djhf tuNtw;Giuia tlkuhl;rptlf;F kPdt rq;fq;fspd; nrayhsH ngh. R+hpaFkhH Mw;w MrpAiufis ty;ntl;bj;Jiw itj;jP];tud; Mya g.kNdhfuf;FUf;fs; kw;Wk; Flj;jid gq;Fj;je;ij uh[d;Nwhfd; MfpNahH toq;fpdH.

  ftpij E}iy ty;it Kj;Jkhhp mk;kd; Mya FUf;fs; Nrh.jz;lghzpfNjrpfH ntspaPl;L itf;f Kjy; gpujpia fl;ilNtyp g.Neh.$.rq;f jiytH f.rpjk;gug;gps;is ngw;Wf;nfhz;lhH. E}ypw;fhd Ma;Tiufis vOj;jhsH nrk;gpad;nry;td; kw;Wk; aho; gy;fiyf;fof jkpo;j;Jiw gPlhjpgjp fyhepjp rp.rptypq;fuhrh MfpNahH toq;fpdhH. aho; khtl;l murpay; Jiwg; nghWg;ghsH rp.,sk; ghpjp cs;spl;l gyKf;fpa gpuKfHfs; ,e; epfo;tpy; fye;Jnfhz;ldH.

- ty;it epUgH

ஆதாரம். தினக்குரல் பத்திரிகை 07.08.2003

tpLjiyg; Gypfspd; fiy gz;ghl;Lf;fof mDruizAld; Gyk;ngaHe;J Rtp]; ehl;by; thOk; ftpQH RN[d; ,dhy; vOjg;gl;l ftpijj; njhFjp ntspaPl;L tpoh epfo;tpy; GJit ,uj;jpdJiu> ,sk;gUjp> fyhepjp rptypq;fuh[h cs;spl;l gpuKfHfisAk;> E}iy tz. z;lghzpfNjrpfH ntspapl;L itf;f> fl;ilNtyp g.Neh.$.rq;f jiytH f.rpjk;gug;gps;is ngw;Wf;nfhs;tijAk; E}yhrphpaiuAk; ,q;F fhzyhk;.

vendredi 14 mars 2014

நீ இல்லை என்றால்...


நூறாண்டு காலம் நாம் உயிர் வாழவேண்டும்
இருவரும் புதுவேதம் எழுதி,
உலா வரவேண்டும்...
சமுதாயச் சீர்கேடு திரை போட்டுத் தடுத்தாலும்
தன்மானத் தேரில் தலைமுறை ஏறவேண்டும்
இதிகாசம் விழித்து புனர் ஜென்மம் பெற்று
எம் வேதம் எழுதி இளைப்பாற வேண்டும்
நீ இல்லை என்றால்
ஒரு நொடியும் வேண்டாம் வேண்டாம்
நிகழ்கால வாழ்வு விட்டு

நான் இறந்தாக வேண்டும்..








jeudi 13 mars 2014

என்னவன் அல்லடா நீ..


என்னவன் அல்லடா நீ - நிறுத்து
என் மேனியில் நீ கொள்ளும்
மோக விழிக் கலவையை
கரையாமல் கரைகிறதே
என் கற்பூர மேனி..!

நாளை, என்னவன் கேட்டால்
நான் என் சொல்வேன்...!
எதிர்கால அரசி
நான் ஆனால்
இதற்கான தடா..,
சட்டம் அமுல் செய்து
சிறையிடுவேன் உன்னை..!
கலவி கொள் அப்போது,
சிறைக் கம்பிகளை...

mercredi 12 mars 2014

இருமுனை போராட்டம் தீரவில்லை...


விழிகள் இரண்டும் வேண்டாம் என்றுட

உறக்கம் என்னை தொட்டணைத்தது...

இருமுனை போராட்டம் தீரவில்லை

இரவின் நடுவில் எழுப்பிவிட்டு

எதற்காக விலகிப்போகிறாள் இவள்.!

விடுவதாக இல்லை...

எட்டி இழுத்தேன், கூந்தல் என் கையில்

எழுந்தவள் மல்லுக்கு நிற்கிறாள்..!

அப்படியானால்..! கனவில் வந்தவள் யார்..?

சொல்லிவிடாதீர்கள் என் துணைவிக்கு..

mardi 11 mars 2014

விரித்த பாயில், நீரோடையின் தண தணப்பு....

இரவோ பகலோ விழிகள் அறியவில்லை
திரையிட்ட காட்சி நிறுத்தப்படவில்லை
விரித்த பாயில்நீரோடையின் தண தணப்பு
வெள்ளிவிழா தாண்டி வெற்றிவிழா காண
ஓடிக்கொண்டிருக்கிறது
இச்,சித்திரம்...
அனுமதி முதியோர்க்கு மட்டுமே
படத்தின் பெயர் - முதியோர் இல்லம்


பாவலர் வல்வை சுயேன்

அழகு காட்டுகிறாள் ஒருத்தி...


முற்பகல் ஒளித்து பிற்பகல் அணிந்து

அழகு காட்டுகிறாள் ஒருத்தி...

வைரங்கள் அஞ்சுகின்றன!

ஒடுக்கப்பட்டு விடுவோமோ என்று..

அஞ்ச வேண்டாம்! 

வந்தது அறிவிப்பு,

விண்ணில் இருந்து..

நட்சத்திரங்களின் குரல்...

lundi 10 mars 2014

வீதியில் மலம்...


வீதியில் மலம் சாமி அறையில் தெய்வம்
கொடுத்து வைத்தது. கோமாதா..


....

dimanche 9 mars 2014

என்னை ஏன் நீ கைப்பிடித்தாய்...


தனிமையில் இருக்கும்வரை நானும் நல்லவனே
என்னை ஏன் நீ கைப்பிடித்தாய்..?
விஞ்சிவிட்டேன் உன்னை..!
இரெத்தக்கனல் வெட்டி நித்தம் குளிக்காவிடில்
நித்திரை இல்லை எனக்கு...
போதும் விட்டுவிடு என்னை
பாவம் பொல்லாதது, சினம் தணிந்தது
கோப, வாள்..

சினந்தது விண் கல்...


உன், கைக்கெட்டாமல் எங்கோ இருந்தேன்

தங்க மீன் என்றாய், உன்னிடம் சேர்ந்ததால்

வெறும் ஜடம் என்கிறாய் என்னை..

சினந்தது விண் கல்...

samedi 8 mars 2014

ஈரடி நோகுமடி என் இதயம் வேகிதடி ...


பூவே.. பூவே.. பூங்கொடி மலரே
பொன் எழில் ஒளியே வா..
சித்திரை நிலவெனும் முத்திரை
நீயே.., என் மடித்தழிரே வா..
புன்னகை வாசம் வீசுதடி
உன் பூவிழி ஏதோ சொல்லுதடி
கண்மணி உன்னை காணத்தானே
கடுந்தவம் பூண்டு
கடவிளை வேண்டி நின்றேன்
தாய் மடி இறங்கி தாய் நிலம் நடந்து
இருகரம் வீசி வருகின்றாய்
ஈரடி நோகுமடி என் இதயம் வேகிதடி
வெண்பனி பூவே வெயில் உனைசுடும்
வேகாதே ஓடிவா....

மகளிர் தினத்தின் இதய ஒலி..


அன்பெனும் அகல்விளக்கேற்றி
அகம் காணுங்கள் ஆடவரே...
ஊற்றெடுக்கும் அன்பு நதிக்கு
அணையிடாதீர்கள்...

வேதனை இன்றும் எமக்கு வேப்பமரம்
சாதனை ஒன்றே துளிரான போதிமரம்
விழியோடு உறவாடும் உறவே
பொய்யோடு உறவாடி புழுதியில்
வீழவேண்டாம்.., போகட்டும் விடுங்கள்..
மெய்யெனும் உயிர்ஞானம் ஏற்றி உயிர்வாழும்
இன்நாள்போல் என்நாளும் எமை வாழவிடுங்கள்...
உறவுப்பாலம் உயிரிலும் மேலானது
நன்றி....

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...