mercredi 28 octobre 2015

என் டயரி ...

வாழ்க்கை எனும் பாடத்தை வழி மொழியும் மனமே
செயல் முறை பாடத்தில் தேர்வெழுதும்
மாணவன் நான் ,,,,
எதிர்காலப் பக்கங்களில் எழுதுவதை கொடுத்துவிடு
இறந்த கால கிழிசல்களை நிகழ் காலத்தில்
நெறி முறை செய்துடுவேன்

உள்ளிருக்கும் உனக்கென்ன கள்ளிருக்கும் பூ நான்
ஊற்றுக்கள் சுரந்து உமிழ்கின்ற தேன் எடுத்து
நாவிற்கும் சுவைக்கும் நடு இருந்து
நற்தனம் ஆடுகிறேன்
கறை காணும் கனவுகளில் தள்ளி கனல் மூச்சு இறைக்கின்றாய்
விடியா இரவுகளில் வீழ்த்தி  உலர் பூவாய் உதிர்க்கின்றாய்
மலரும் போதில் நறுமணம் தெரியுது மனம் உதிரும் போதில்
உலகே வெறுக்குது
பொய் அன்றி மெய் உணர ஜனனத்தின் மேன்மை புரியுது
கருத்தில்லா கனவுகளில் தள்ளிவிடாதே எழுத்தில்லா ஜாதிகளை
எழுதச் சொல்லாதே
நிலை இல்லா வாழ்வில் நிம்மதி இல்லை எனில்
எழுத மாட்டேன் உன்னை நான், இனி என் வாழ்வில் ...
Kavignar Valvai Suyen

vendredi 23 octobre 2015

நண்பா நண்பா நீ இன்றி நானா ....

ஆகாயம் கண் இருத்தி ஆரத் தழுவுது மனசு
பெருங் குடை ஆல விழுது பற்றி 
அன்புக்கு நான் அடி பணிந்தேன் 
பிரிவெனும் கொடுமை கத்தரித்தால்
கொலைக் களம் சென்றே  உயிர் திரிப்பேன்
அறுகம் புல்லும் நீயேதான்
அதில் தூங்கும் பனித்துளி நானேதான்
அடை மழை என்றால் நீ குடையானாய்
கொடு வெயில் என்றால் நான் நிழலானேன்
இலக்கணக் கற்கள் உன் இதயம்
அதைத் தாங்கும் அகரம் என் நேசம்
நடுகல் நட்டு நாளாச்சு உறவுப் பாலம் விரிவாச்சு
ஊரே நடக்கிது உள மலர்வில் நட்பே உனக்கு உயிராவேன்...
 Kavignar Valvai Suyen

தேனீக்கள்.....

ஏய் எங்கே போகிறாய் நீ
உனக்காகப் பிறந்தவள் நான்
சிலை வடிக்க சிற்பி அழைக்கிறான்
வண்ணம் தீட்ட ஓவியன் அழைக்கிறான்
இருந்தும்..,
உன்னை நான் அழைக்கிறேன்
என் உள்ளம் கவர் கள்வனே..
வாழலாம் வா வண்ணப் பூங்காவில்
தேனீக்களாய்..
Kavignar Valvai Suyen

jeudi 22 octobre 2015

நெஞ்சம் இன்னும் இறக்கவில்லை ......

புன்னகை இளந்த உதடுகள்,  விலாசம் துலைத்த விழிகள்
இவற்றை கண்டு இதயம் ஓவென்று ஒப்பாரி வைக்கிறது
கூலியாய் குனிந்த கேள்வி குற்றுயிராய் துடிக்கிறது 
இளப்பதற்கு இனி ஏதும் இல்லை
என்று தணியுமோ எங்கள் தமிழீழத் தாகம்?
வாராது வருமோ அந்த விடியல்
மீன்டும் துளிர்க்காதோ தமிழீழக் காதல்
நெஞ்சம் இன்னும் இறக்கவில்லை
காதலாகி கசிந்துருகி காதலிக்கிறது தமிழீழத்தை.....Kavignar Valvai Suyen

mardi 20 octobre 2015

வீர வணக்கம்...

தேசிய விடுதலைக் கள வேங்கையே
ஒருகணம் தலை வணங்கி நிமிர்கிறேன்
உன் நினைவில்.....
விடிவெள்ளி தெரியுதென்று காத்திருக்கவில்லை
தமிழீழ விடியலை தேடுகிறேன்
வீர வணக்கம் நிந்தனுக்கு....

dimanche 18 octobre 2015

நற் துணையாவது நவ ராத்திரி .....

விசயதசமியின் வித்தியாரம்பம்  வீடுகள் தோறும்
கல்வியே கண்ணென ஏடெழுதும்
நவ ராத்திரியின்  இன்ப வரம் 
ஒன்பது இரவும் தேவியர் மூவரின் பாதம் பணிந்து
கூற்றுடை மறையாய் காற்றுடை வெளியிலும்
கல்வி செல்வம் வீரம் என நாம் காணும் இன்ப சுகம்
தேனும் தினையொடு தித்திக்கும் சுவை படைத்து
ஒருதிரி முகமாய் உம் திருவடி போற்றி
பகரொளியாற்றின் பண்புடை நினைந்து
நேரிய வழியில் பேரிடி தகர்த்திட
பணிந்தோம் பண்புற்றோம் இகபரம் அறியோம் தேவியரே
நல் அருளாலே தீவினை அறுத்து தகமை அடைவோம்
ஒரு பொழுதேனும் உமை மறவோம் உய்வுற்று உவகை பெற
ஆத்ம பலம் அள்ளித் தந்தருள்வீர் அன்னையரே
 பொற்புடை தேவியே போற்றி.... கல்விக் கண் வாணியே போற்றி.....
வீரத்தின் சக்தியே போற்றி.... 
நவராத்திரியின்  நான்மறை வெல்க  நா, நிலம் தழைத்தே வாழ்க,,,,
Kavignar Valvai Suyen

vendredi 16 octobre 2015

அலாரம் அடிக்கிறது ......

கடமை எண்ணி கடிகாரமாய் ஓடிக் கொண்டிருந்தேன்
கனதியான வாழ்க்கை !
ஓய்ந்தாலும் அலாரம் தந்து எழுப்பிவிடும் கடிகாரம்
என்னை எழுப்ப மறந்து அது ஓய்ந்திருந்த அந்த ஒரு நாள்
அடித்துவிட்டேன் கோபம் கொண்டு அதனை
ஆனால் இன்றோ
அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது என்னை எழுப்ப
நான் முற்றாக ஓய்ந்துவிட்டேன் என்பதை அறியாமலே அது!
அழைப்பாணை இன்றி என்னை அழைத்து வந்த இயமன்
கடிகாரத்தை பார்த்து சிரித்துவிட்டே வந்தான்.....
Kavignar Valvai Suyen

mercredi 14 octobre 2015

அன்னைக்கோர் ஆலயம் ....

என்னை நான் அறியேன்
என்னுயிர் என் தாய் என்பதை
என்றும் நான் மறவேன்
என்னை காத்த அன்னையே
உன் திருவடியே சரணம் அம்மா 
அன்னைக்கு நான் அன்னையாகி
ஆறுகால பூசை செய்ய
அருள் தரவேண்டும் தாயே நீ ....
Kavignar Valvai Suyen

lundi 12 octobre 2015

மோகத் தீயில் மோகனக் கிளிகள் .....

வர்ணம் கண்டு வண்ணக் கிளி ஏன் விரித்தேன் எண்ணச் சிறகை
உன்னைத்தானே என்னுயிர் என்று ஆசை முத்தம் தந்து வைத்தேன்
போதை ஏற்றி உச்சம் தொட்டு பூனையாகத் தொட்டவனே
ஆடை இல்லா பால் மேனி ஆனவரை அள்ளிப் பருகி
காமக் குயில் சிறகடித்து கார் மேகம் கலையும்வரை
மோகத் தீ கொல்லக் கொல்ல மொட்டவிழ்த்து இதழ் விரித்து
தொட்டணைத்துத் தின்றவனே வெட்டிச் சென்றாய் 
நீ வேடம் இட்டு ........!
ஈர நெஞ்சு தூரமாச்சே இச்சைக் கிளி மோசம் போச்சே
உற்றவன் இன்றி தத்தித் தவள வருகிறான் பிள்ளை 
தாய் இருந்தும் தந்தை இருந்தும் தந்தை பேர் அறியான் உன் பிள்ளை ....
Kavignar Valvai Suyen

samedi 10 octobre 2015

கனவு ...

கண்களை மூடினேன் கனவு
எண்ணங்கள் வரைந்தன கனவு
எண் இல்லா வர்ணங்கள் எனக்குள்ளே
வான வில்லையும் வளைத்துப் பிடித்தேன்
சேவல் கூவி விடியலை சொன்னதும்
கனவை காணவில்லை !
சங்கொலி கேட்டு திரும்பி பார்த்தேன்
மரணப் படுக்கையில் கனவு
அடக்கம் முடித்து நால்வர் திரும்புகிறார்
மயானச் சாம்பல் என்னை பார்த்து சிரிக்கின்றது .... 
Kavignar Valvai Suyen

vendredi 9 octobre 2015

எதிர் வீட்டு யன்னல் .....

காதல் வந்தது காதல் வந்தது என்  வீட்டு நிலைக் கண்ணாடிக்கு
உன் வீட்டு யன்னலில் தான் ஓர விழி கொண்டதடி
கண்ணுக்குள் கண்ணை வைத்து தன்னகத்தே உன்னை வைத்து
உன் வீட்டு யன்னல் கம்பியில் என்னை சிறையிட்டு சிதைக்கிதடி
பூட்டி வைத்த நெஞ்சுடைத்து பூகம்பத்தை மூட்டிவிட்டு
கரு நீள் கூந்தல் அவிழ்த்து சாமரை நீ வீசுகிறாய்
விரல்கள் பாடும் வீணையின் நரம்பாய்
ஏழு சுரங்களும் எனக்குள்ளே
பல்லவி நீ அங்கிருக்க  அனுபல்லவி சரணம் கொள்வதேதடி
தாலி தாறேன் வாயேன்டி என் தாரம் நீதானே
முன் வாசல் வந்துவிடு
மூடுபனி வீழ்ந்தாலும் முத்தெடுப்போம் தடை ஏது ....
Kavignar Valvai Suyen

samedi 3 octobre 2015

மலர் வளையம் ...

நினைவில் நித்தியா கனவில் காஞ்சனா
உறவில் உஷா இரவில் இந்திரா
மரணத்தில் மலர் வளையம்
எனக்காக மரணித்தது மலர்கள்தான்
இன்னுயிரே என்றவரே
இது உனக்கு போதும் என்றார்
சொர்க்கம் பக்கம் அழைக்க நுழைந்தேன்
நினைப்பு பிழைப்பை கெடுத்தது
ஊர்வசியும் ரம்பையும் இந்திரனுக்குத்தான்
வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்ந்தே தோர்த்தேன்
மலர்களை என்றும் நேசி
மரணத்திலும் உன் உறவு அது ஒன்றுதான் ......
Kavignar Valvai Suyen

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...