நிலாவறை… ..
நிலாவறை என்றுதானே வந்தேன்
நிமிடங்கள் கழிந்தன
நிசப்த்தங்கள் கழிந்தன
ஸ்பரிசங்களில் பூத்த
வியர்வைத் துளிகளும் காய்ந்தன
மலரே என்றான் மன்மதா என்றேன்
இருவரும் உலாப் போன காலங்கள்
ஓரளவுதான்.. ..
நிலாவும் தேய்ந்து வளர்ந்தது
தேய்ந்த நான் வளரவில்லை
மலரே என அழைத்தவன்
முள்ளெனச் சொல்லி
வீதியில் வீசிவிட்டான் என்னை
வீதியில் கிடந்தாலும் தாசியல்ல நான்
அழகொரு நாள் அவனையும் கொல்லும்
அன்று வருவான் என காத்திருக்கிறேன்
அவனின் இருள் முகம் காண.. ...
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...