dimanche 21 août 2016

தூயவன் யார் எல்லாம் மாயவனே !!!



தொட்டால் சுடுகின்றாய் தொடாமல் இனிக்கின்றாய்
பட்டாம் பூச்சிக்கும் தெரிகிறது தொட்டும் தொடாமல்
உன்னிடம் தேனெடுக்க !
வனப்பு மிகு இறக்கை இல்லையே என்னிடம்
வடிவழகே உன்னை வாரி அணைக்க
ஒரு முறையேனும் என்னை திரும்பிப் பார்
கள்ளுண்ணும் நான் தேனுண்டு கிடக்கிறேன்
கவலை விடு யார் இங்கே தூயவன் எல்லாம் மாயவனே

பாவலர் வல்வை சுயேன்

தேசிய மலர் !!!



காந்தள் மலரிடம் தேசியம் கேட்டேன்
கார்த்திகை சிகப்பென்றது
கரும்புலி மில்லரை கண்டாயா என்றேன்
கறுப்பு யூலையின் கந்தகம் தந்தது
கோடி மலர்கள் கொட்டிக் கிடக்க
உயிரே நீதான் என்றார்
ஏன் என கேட்டேன்
சிகப்பு மஞ்சளாய் தமிழீழம் பற்றினேன்
தேசிய மலரானேன் என்றது...

பாவலர் வல்வை சுயேன்      

samedi 20 août 2016

உன்னத வாழ்வு உனக்கும் உண்டு !!!



உன்னத வாழ்வு உனக்கும் உண்டு நண்பா
இருட்டறையென ஏதும் இல்லை
அறிவெனும் சாவியால் அகிலத்தை திறந்து தேடு
கிடைத்தற்கரிய பழமையும் புதுமையும்
தேடலில் கிடைத்துவிடும்...  

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...