jeudi 28 décembre 2017

கருணை கடவுள் வருவானா....

உலக மேடை உறுழுது உறுழுது
இறுதி மூச்சு எப்போ தெரியலே
சுருதி ஏத்தி சுரங்கள் பாடு
நீயோ நானோ முன்னே பின்னே..

அம்மா அப்பா பொம்மைகள் செய்ய
இறைவன் உசிரை கொடுத்தான்டா
பாசம் மோசம் வேசத்தினால்
வெந்து நூலாய் போனேன்டா
உறவும் உசிரும் ஒன்றே என்று
கொள்ளை போனது உள்ளம் தான்டா...

உறவை பிரிச்சு வரவை பாக்கிறார்
வங்கி வைப்பிலே பாசம் கொள்ளுறார்
ஏரிக் கரையும் எரியுதடா
நீரில் மீனே அவியுதடா
சரணம் சேரா பல்லவி கூட
மரணக் குழியில் போச்சேடா...

ஆறில்ச் சாவு நூறிலே சாவு
உசிரின் இருப்பிடம் எங்கே தெரியலே
கூட்டிப் பார்த்தேன்
கழித்தும் பார்த்தேன்
சம நிலை ஏதும் சரியா தெரியலே
உசிரை கொடுத்தவன் எங்கே இருக்கான்
ஏன்டா கொடுத்தான் எனக்கு புரியலே
கருணை கடவுள் வருவானா
தேடி பார்க்கிறேன் கிடைச்சா,
சொல்லுடா....

பாவலர் வல்வை சுயேன்

lundi 25 décembre 2017

பாலன் யேசு....


பிதா பரிசுதன் பாலன் யேசு
பூமியில் வந்து பிறந்தாரே
நத்தார் தினத்தில் நலங்கள் பெற்று
இறையருள் பாதம் தொழுவோமே
நாம் இறையருள் பாதம் தொழுவோமே

மார்கழி திங்களில் மாட்டுத் தொழுவத்தில்
ஏழை குடிலில் இறை பிறந்தார்
எல்லா ஜீவனும் ஒன்றே என்றே
தூய ஞான ஒளி ஏற்றி
தன்னையே தந்தார்

ஒளி தரும் தீபங்களே வென்றாடுங்கள்
விழிகளால் தூய ஒளியினை ஏந்தி
அகம் சேருங்கள்...
குற்றம் அற்றோர் இல்லை என்றே
அறிவற்றோர் கண்களை திறந்து வென்றார்
யேசு அன்பால் தீமையை அகம் எரித்தார்
உனக்கெது வேண்டுமோ
கொடு கொடு அதையே
பிறருக்கும் கொடு என்றார்
கயமையாளர் கட்டி அடித்தும்
மறு கன்னமும் காட்டி முகம் மலர்ந்தார்
மாசுள்ளோர் மமதையை புதைத்து புலர்வு தந்தார்  

முள் முடி ஏந்தி சிலுவை சுமந்து உதிரம் சொரிந்தாலும்
மூன்றே நாளில் மீழ் உயிரேற்று அருள் புரிந்தார்
தேவன் யேசு அருள் புரிந்தார்
வணங்கியே வாழ்வோம் தேவனின் பாதம்
போற்றியே பாடுவோம் பலனின் வேதம்
வாருங்கள் தோழர்களே, நாம் கொண்டாடுவோம்
நத்தார் வைபோகம்....

பாவலர் வல்வை சுயேன்

mercredi 20 décembre 2017

அருந்ததி அறியேன் ...

நெஞ்சம் அள்ளும் நீரலையும் கானமழை பொழியும்
ஆசையிலே நனைந்தால் நெஞ்சுக்குள்ளே சிலிற்கும்
ஓர விழிச் சிற்பமே எனை நீ சிதைச்சே
சிற்பி தந்த பொற் சிலையே
சிந்தனைய கலைச்சே

அடை மழை காலம் அருந்ததி அறியேன்
இருட்டினில் தானே பெட்டகம் திறந்தேன்
விரல்களினாலே விழிகளை மறைத்தே
தொடத் தொடத்தானே
நனையிறேன் நானும்
தனிமரம் கண்டு தழிரினை நனைத்து
புது மலரென்னை கிள்ளி பார்க்கிறாய்
காமன் அறைக்கே கோலம் இடுகிறாய்
ஏடகத்தின் வாசல் எனை மறித்தாலும்
உன் மடல் போதும் கம்பனை காண்பேன்

விடி வான வெள்ளி விழித்திட்ட போதும்
அடி வான ஒளிக்கு இருள் தூவி மறைப்பேன்
இமை காவல் உடைத்தே உயிராவேன்
உன் உள்ளக் கோட்டையில் தினம் வாழ்வேன்

பாவலர் வல்வை சுயேன்

lundi 18 décembre 2017

வாசலிலே அழைப்பொலி !!!

நீலச்சேலை கட்ட மறந்தாள்
முகில் திரை மூடி
முத்தம் தரும் மங்கை

வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள்
ஆடை கட்டி கூடு திரும்பின
வாசலிலே அழைப்பொலி கேட்டு
மெல்லத் திறந்தேன் ஜன்னலை
உத்தரவின்றி உள்ளன்போடு
உதட்டில் முத்தம் கொடுத்தாள்
வெண்பனி பாவை !
முற்கள் இல்லா பஞ்சணையின் கத கதப்பில்
உதடுகள் சிதைந்து ரெத்தம் சிந்தியது !
உச்சிமுதல் பாதம்வரை
பாதுகாப்பு கவசம் அணிந்துவிட்டேன்
உத்தரவாதம் இல்லா குளிர் நங்கையுடன்
கூடுதல் கூடாதென்பதற்காகவே... ....

பாவலர் வல்வை சுயேன்

jeudi 14 décembre 2017

தேவ தேவா உன் தேவி இங்கே ...

வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா
வாசம் போகா வாடா மலர்
உன் தோழில் சேரத்தான்
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா....

மாலை சூடும் மணநாள்
மரணத் தேதி பார்ப்பதோ
வேதம் ஓதும் வேதியர்
வேண்டித் தவம் கிடப்பதோ
உந்தன் குயில் பாடுதே
எந்தன் குரல் கேட்கிதோ
மஞ்சம் கண்டு கொஞ்சத்தான்
மலர்கள் இங்கே பூர்க்கிதே
கோதும் விரல் இன்றித்தான் கேசம்
வாடும் கன்னம் தழுவி ஏங்கிதே
மீட்டும் விரலேவா வீணை அழைக்கிதே
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா....

தேனை தேடும் வண்டுகள் தேகம் மெல்ல கடிக்கிது
வாழ்வும் வளமும் காணத்தான் வாசல் இங்கே திறக்கிது
மனங்கள் ரெண்டும் சேர்ந்திட மாலை தென்றல் வீசுது
மனமும் மனமும் ஒன்றிய நாணல் இங்கே ஓடுது
உதயம் இல்லா விழிகளே விழிகளே
உறவில் விரிசல் வீழ்ந்ததேன் வீழி காய்ந்ததேன்
வர்ண்ணம் குலைந்த ஓவியமோ வாராய் கண்ணா
தேவ தேவா உன் தேவி இங்கே
வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே
வாழ்வோம் வா
வாசம் போகா வாடா மலர்
உன் தோழில் சேரத்தான்...

பாவலர் வல்வை சுயேன்

vendredi 8 décembre 2017

அறிவேண் அனலே !!!

கருப் பொருளான கவிதை நீ
அலை கடல் மீதிலும் ஓடம் நீ
அன்பெனும் அறிவுடமை அழி நிலையாகி
தாழ்வுறு பேதமை பெருஞ் சுவராகினும்
தகர்வது தணலினில் எரியும் கூடே
குணமெனும் குன்றாய் விளங்கும் அருவே
அழி நிலை உனக்கேது தீ அள்ளி இட்டார்க்கே
அறிவேன் அனலே...


பாவலர் வல்வை சுயேன்

vendredi 1 décembre 2017

காத்திருக்கேன் கண்ணா !!!

எனக்குள்ளே எனக்குள்ளே
என்னாச்சு என்னாச்சு
ஆசைத் தூரல் மெல்ல மெல்ல    
விரகத் தீயில் கொல்லுதே....

மனு நீதி காத்திட வா வா நீ வா
விடியலும் உட் புகாமல் யன்னலைச் சாத்து
கரு விழி நான்கும் கலர்ப் படம் காணுதே
இதழ் ரசம் தானே இரவுக்கு ஆகாரம்
நான்கிதழ்களால் நான்மறை எழுதுவோம்
காலம் கரைவதேன் காத்திருக்கேன் கண்ணா


பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...