mardi 29 novembre 2016

நந்தவனப் பந்தலிலே மாறாப்பு !!!பூ மேனி பூத்திருக்க பூ கொய்து போனவனே
செம் பவளம் சிரிக்குதடா செங்கோல் மன்னா
எத்தனை முறை நீ கொய்தாலும்
நந்தவனப்  பந்தலிலே மாறாப்பு சிக்குதடா
நூலாடை விடை கேட்டு வீழும் முன்னே
நீரோடை ஒன்று நதி ஆனதிங்கே
போராடும் மனசு போர்க் களத்தின் புரவியிலே
வீழ்ந்தாலும் நான் விழுப்புற்றே வீழ்வேன்
எனை வெல்ல என்று நீ வருவாய்
கள முனையில் காத்திருக்கேன்
எத்தனை முறை நீ பூக்களை கொய்தாலும்
வெற்றி நிச்சயம் எனக்கே எனக்குத் தான்....

பாவலர் வல்வை சுயேன்

lundi 28 novembre 2016

ரெட்டை வால் குருவிகள் !!!ஊரையும் உறவையும் ஏய்த்து உலகெங்கும் மேய்ந்தோரே
யல்லிக் கட்டுக் காளையென நீவிர் மார் தட்டிய சத்தம்
கேக்கலையே உலகரங்கில் அறுந்திச்சோ
உங்களின் இறக்கை !
மே தகு தலைவனின் பிறந்த நாள் பகரொளியிலும்
மாவீரர் நாள் உணர்வெழுச்சி மிகு நினைவேந்தலிலும்
காணலையே உங்களின் உணர்வுப் பொதிகளை
ரெட்டை வால் குருவிகளே எங்கே பறந்தீர்கள் !

நினைக்கலையே நீங்கள் எட்டாண்டை எட்டும் வேளை
மாவீர ஒளி முகங்களின் ஆத்மாக்களை அரவணைத்து
அள்ளி முத்தம் கொடுப்போம் நாமென்று
புரட்சித் தீ அணையவில்லை
எழுச்சி மிகை மேவுதடா
பெற்றோரும் சோதரரும் அற்றோர் அல்லடா   
ஏய்த்து வாழாதீர் ஏமாரும் காலம் இனி இல்லை
விழிப்புணர்வோடு விழி பகன்றோம்
அந்தோ தெரிகிறது தமிழீழ விடியல் !

பாவலர் வல்வை சுயேன்

vendredi 25 novembre 2016

கற்பகத் தருவே சூரியத் தேவா வாழிய நீ
போற்றுதற்குரிய பொற் கதிரே... கற்பகத் தருவே சூரியத் தேவா ..
தமிழ் இனத்தின் விடியலுக்கே அன்பு ஒளி முகம் தந்த ஆதவன் நீ ..
கிழக்கு வானம் சிவக்கத்தானே அதிகாலை பிறக்கிறது
பிரபாகரா உன் விழி இரண்டும் சிவக்கச் சிவக்கத் தானே
தமிழின மரபுத் தோன்றல் தாய்மண்ணை காதல் கொண்டது
நவ கோல்களில் ஒன்றே ஒன்றுதான் பூமிக்கொரு சூரியன்
தரணியில் நீ ஒருவனே தமிழ் மாந்தரின் பிரபாகர பகலவன்

மறக்குலத் தோன்றலே மாவீரா
அகவை இன்றுனக்கு அறுபத்தி இரண்டு
ஆதவனே உன் ஒளியே தமிழ் மாந்தரின் தேசியக் கீற்று ....
கண்ணியத்தின் காவலனே  காண்பதற்க் அரிய பேரொளியே
அஞ்ஞாத வாசம் மறந்தறியாய்  வனவாசம் தனிலும்
வரைமுறை வழுவாது எமை ஆண்டாய்
உயிருக்கு உயிர் தந்த உத்தமர் உயிர் நினைந்தே
உபவாசமும் நீ கொள்வாய்  
விழித் தீயாலே தீபம் ஏற்றி  இடர் எனும் துயர் அகற்றி
விடியலின் தடை கற்கள் அகற்றி தமிழ் குல கடவுளானாவன் நீ

தேசியம் தழைக்க நின்று எமை ஆண்ட தேவனே
உன் தரிசனமே எமது பொற்காலம்
நீ தந்த வெற்றி வாகைகளே தமிழர் நாம் சூடிக் கொண்ட கிரீடம்
புதிய வார்ப்புகளை புரட்சித் தீ எழுச்சியில் வார்த்தவன் நீ
உன் ஆற்றலின் ஒளியே தமிழீழ மலர்ச்சி
கோயிலில் இல்லாத் தெய்வம் நீ.. தேய் பிறை இல்லா தமிழ் வானம் நீ..
காலத்தை வென்ற கரிகாலனே ஞாலம் எமக்கு ஒரு வாழ்வு தர
உயர் வாழ்வானவனே
சூடித் தந்த சுடரோனே சுயம்புவே வாழிய வாழியவே நீ  

பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...