samedi 23 janvier 2016

ஏன்டீ என்னை கொன்றே ....


சீண்டிச் சீண்டி என்னை சிரிக்க வைத்து

ஏன்டீ என்னை கொன்றே

தங்கம்தானே என் மனசு

தணலில் இட்டாய் தந்த மனசை

உன்னில் எழுந்த கோபத்தில்

நீ, எழுதிய அனைத்தையும் அழித்துவிட்டேன்

எஸ் எம் எஸ் என்பதால்

அழிந்துவிட்டன தட்டெழுத்துக்கள்

நெஞ்சில் பதிந்த பசுஞ்சோலை

கிழிசல் வீழ்ந்து எரியுதடி

ஏன்டீ என்னை கொன்றே.....



Kavignar Valvai Suyen

jeudi 21 janvier 2016

வெள்ளைச் சோக்கின் நேசம்...


ஐந்து வயதில் அம்மா என்ற உலகைத் தவிர

வேறேதும் அறியேன் நான்

பள்ளியில் கல்வியே கண் என்றார்  

அகண்ட கருந் திரையில் ஏதும் தெரியவில்லை

அக்கம் பக்கத்தில் அழுதனர் என்னைப்போன்றோர்

யாரோ மூச்சா பெய்து விட்டார்கள்

என் காலுக்குக் கீழ் பாம்பு ஓடிக் கொண்டிருந்தது

எழுலகம் என்று அப்பம்மா கதை சொல்ல கேட்டுருக்கிறேன்

அதில் ஒன்ரு இதுதானோ அருண்டேன் மிரண்டேன்

அச்சத்தில் அழுதேன்.... .....

வகுப்பறைக்கு ஒரு அங்கிள் வந்து வணக்கம் சொன்னார்

எனக்கொன்றும் சொல்லத் தெரியவில்லை

சிரிப்பவர் பாதி அழுபவர் பாதியாய் இருக்க

தூரத்து வகுப்பறையில் மூத்தவர்களின் படிப்போசை கேட்டது

அமைதி உற்று ஆர்வத்துடன் நிமிர்ந் தமர்ந்தேன் கதிரையில்

மேசையில் கிடந்த வெள்ளைச் சோக்கு மட்டும்

தூடித்துக் கொண்டிருந்தது

ஏதோ எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று

வாத்தியார் தன் கையில் வெள்ளைச் சோக்கை எடுத்ததும்

கருந் திரையில் வெள்ளை எழுத்தில்

நாங்கள் கண்ட முதல் காட்சி

அ, என அகரம் தொடங்கி மூன்றெழுத்தில் அம்மா வந்து அரவணைத்தாள்

ஆ, என்று கரம் நீட்டி ஆண்டவன் எங்களிடம் கருணை செய்தான்

உணர்ந்தேன் அன்றே கல்விச் சாலையும் என் தாயின் கருவறை தானென்று

கனிவோடு இன்றும் பள்ளிக்கு போகிறேன் அங்கே அன்பு செய்யும்

அந்த வெள்ளைச் சோக்கின் நேசம் நினைந்து 

அழுக்காற்றி அறிவுடமை சேர்த்து அறிஞனாவேன் எனும் நம்பிக்கையோடு

Kavignar Valvai Suyen

dimanche 17 janvier 2016

சாலையிலே சோலைக் குயில் .....


சாலையிலே சோலைக் குயில் கூவுதம்மா கூவுதம்மா

தாளாத சோகத்திலே மூழ்குதம்மா மூழ்குதம்மா

ஊரும் இல்லை உறவும் இல்லை

நேசம் கொள்ள யாரும் இல்லை

செஞ்சோலை வாழ்ந்த குயில் செய்ததென்ன குற்றம் அம்மா

தாயே பசி எனும் கீதம் தாளாத பிஞ்சுக்குள்ளே ஓலம்

ஏன் பிறந்தேன் என்றுங்கே ஏங்குதம்மா

ஏதிலியாய் தினம் தினமாய் வாடுதம்மா

ஆதரிப்பார் யாரும் இல்லை அன்பு செய்ய நேசம் இல்லை

ஊருக்குள்ளே ஓடுதிங்கே இதன் ஓசை நதி

ஓடக்கரை கால்வாயிலே இதன் ஜீவ நதி

போர் முடிந்தால் வாழ்வு வரும் என்றாரே

வீரம் வீழ்ந்த பின்னே மண்ணிலொரு இறைவன் இல்லையே

வசந்தம் இல்லா வாடைதானே வடக்கில் இங்கே வீசுதம்மா

 உதயம் தந்த சூரியனால் கிழக்கில் ஒளி இல்லையம்மா

ஏர் பிடித்த நாளை எண்ணி எத்தனை நாள் வாழ்வதிங்கே

வரப்புயர வாழ்வு தரும் மன்னவரே சின்னவரே

மனசிருந்தா மார்க்கம் உண்டு

வீதி வாழ் குயில்களுக்கு வேடம் தாங்கல் தாருங்களேன்....

Kavignar Valvai Suyen

mercredi 13 janvier 2016

போதும் உந்தன் யாலமே ...


பருதா போடும் பெண்ணே ஏன்டி பந்தி வைக்கிறே

பவளப் பாறையில் நீதான் நிலா என

நின்று ரசிக்கிறேன்...

சூடான ராணி நீதான் நீதான் சும்மா உசுப்பேத்துறே

துபாய் சேக்கு டுபாக்கூர் என்றே டாப்பு டக்கர் பண்ணுறே

பாதி ராத்திரி மோதி அலையிறே

மீதி ராத்திரி மின்னலாகிறே

காதலாலே கன்னம் இட்டு களவு கொள்ளுறே

மோதலாலே விரசம் ஊட்டி நாளம் மீட்டுறே

போதும் உந்தன் யாலமே வேண்டாம் இந்தக் காதலே

ஒரு முறைதானே திருமணம் என்பதில்

நான் கண்ணா இருக்கிறேன்...

Kavignar Valvai Suyen

dimanche 10 janvier 2016

என்னை ஏன் அழைக்கிறாய் நீ….


தோழனே ஆடவர்தானே ஏற்றுகிறார்

உலகில் ஒளி விளக்கு

அட என்னை ஏன் அழைக்கிறாய் நீ

விளக்கேற்ற உன் வீட்டுக்கு

பகலுக்கு ஒளி விளக்கு சூரியன்

இரவுக்கு ஒளி விளக்கு சந்திரன்

நான் தட்டும் தீப்பெட்டியை

நீயே தட்டி ஏத்திக்கொள்

பத்திக்கொள்ளும் குத்துவிளக்கு ...



Kavignar Valvai Suyen  

mercredi 6 janvier 2016

முழுகித்தான் நான் இருக்கேன் ...

சத்தியமா நான் இருந்தேன் ஒத்தையிலே எந்தன் மச்சான்
நீ முத்தம் வந்து போகையிலே தேதி சொல்லி சிரிக்க வச்சே
பூப்பூவாய் பூச் சொரிந்த சோலை மலர்த் தோப்புக்குள்ளே
பச்சரிசி வெல்லம் சேர்த்து பரிசம் போட்டு தந்தவனே
சந்தைக்கு போன மச்சான் சாயங்காலம் ஆச்சேடா
முழுகித்தான் நான் இருக்கேன் மூன்று நாள் முடிஞ்சு போச்சே
இராத்திரியின் கூரையிலே பூச்சரங்கள் பூத்துடுச்சு
மாறாப்பு ஓரத்திலே மாங்கனியும் ஒளிந்திருக்கு
என் காவலனே காவலனே உன்னை இன்னும் காணோமடா
கால நேரம் பார்த்து கயித்துக் கட்டில் காத்திருக்கு
ஆக்கி வைச்ச மீன் சோறு ஆறும் முன்னே வந்துவிடு
விடி வெள்ளி முழைக்கும் முன்னே விழா பார்த்து வந்திடுவோம்....
Kavignar Valvai Suyen

dimanche 3 janvier 2016

கன்னி மலர் ...

பூத்திருந்து காத்திருந்தேன் பூங் குயிலே உனக்காக - தேன்
எடுத்து போகும் போதில் என் தேவனிடம் சேதி சொல்லு
நாளைய விடியல் வரும் வேளை மரணம் என்னை தொட்டுருக்கும்
ஒரு நாள் வாழ்வில் என் சரிதை எழுதி
மகரந்தப் பேழையில் தந்துவிட்டேன் சேருமிடம் சேர்த்துவிடு
கன்னி மலரின் கலைந்த கனவை  உன்னை அல்லால் வேறு யார் அறிவார்...
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...