samedi 10 novembre 2018

பச்சை மடல் தோப்பு !!!


கொடிச் சோலை கடை விரித்தாள்
நுகர் கொம்புக் கூந்தல் காறி
வாங்கிச் சென்றன பட்டாம் பூச்சிகள்
வண்ண மலர்களை அவள் வாசலுக்கு

பாலருவி நூல் இளையாள்
வெட்கத்தில் தலை குனிந்து
ஊருக்குள்ளே ஊர் கோலமிட
பச்சை மடல் தோப்பிலே
அக்கக்கோ எனும் குயிலின் கீதம்
பூங்குயிலே பூம் பாவாய்
கால் கடுக்க காத்திருக்கேன்
பூமித் தாய் புலர்வு கொய்ய
பள்ளி கொள்வோம்
பார்க்கும் விழி ஏதடி
பஞ்சணையும் தேவை இல்லை

பாவலர் வல்வை சுயேன்

vendredi 2 novembre 2018

ஒளியின் துளியில் தாயகம்!!!

அதிகாலை புலர்வின் சூரியக் கதிர்கள்
மெல்லென எழுந்து
கூரை ஓட்டின் சாளரங்கள் ஊடே நுழைந்து
மூடித்திறந்த விழிகளுக்கு காலை வணக்கம் தந்தன

துயில் தந்த பாய் சுருட்டி ஓரம் வைத்துவிட்டு
காலை கடன்களை முடித்து
தலை வாசலில் வந்தமர்ந்தேன்
கதிரவன் வரவு கண்ட தென்னங் கீற்றுக்களும்
சென்டு பூக்களை ஜனனிக்கும் பூச்செடிகளும்
உள்ளம் மிகை பொங்க நர்த்தனங்களாடி

வாசல் வந்த கதிரவனுக்கு வாசனை தூவி
பூமித் தாய்க்கு பச்சை சேலை கட்டி
பல வர்ண யருகைகள் நெய்து
உள்ளப் பூரிகையுடன்
உறவுப் பாசம் ஊட்டி என்னை பார்த்தன
காலை எழுந்து என்ன செய்தேன் நான்
என்னைத் தாங்கும் தாய் நிலத்திற்கு

வெட்கித்தேன் வேதனை உற்றேன்
புன்னகை உலர்ந்த தாய் நிலத்தின்
கண்ணகை காணாது கலங்கினேன்
தேடலின் வாசல்கள் திறந்திருந்தும்
தனயன் என் பணி மறந்திருந்தேன்
உத்தரவுக்கு காத்திருக்கவில்லை
என் பாதங்கள்
மெல்ல நகரும் பாதம் கண்டு
உள்ளம் மிகை கொண்டு
விடிவைத் தரும் கதிரவனின்
ஒளி பற்றி செல்கிறேன்
நாளைய விடியலில்
நம் தேசம் புன்னகை பூக்கட்டும்

பாவலர் வல்வை சுயேன்

தண்ணீருக்கும் தாகம் !!!

வான தேவனே வந்துவிட்டாயா
என் காதல் கடிதங்களை
மேகக் கூட்டங்களிடம்
தூதனுப்பியிருந்தேன்
நீ கண்டுகொள்ளவே இல்லை

தூரத்து வானம் உன்னை
தொட்டேன் என்று
கண்டவர்கள் சொல்கிறார்கள்
இல்லை இல்லை இன்னும் நான்
கன்னியாகவே இருக்கிறேன் என்று
உனக்கும் எனக்கும்தான் தெரியும்

தண்ணீராய் நீ பிறந்தும்
உன் தாகம் தணியலையே இன்னும்

பாவலர் வல்வை சுஜேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...