mardi 28 février 2017

இறைவனாகிய தலைவன்!!!


(பண்பாடு - 09)
ஆயுதம் மௌனித்து எட்டாண்டுகள்
குருதி ஊற்றில் தமிழினக் கூடல்
தேடலில் கிடைத்த ஈழம்
தேய் பிறையாகி
தலைவனை இழந்தும்

அவன் பெயராலே அவன் நாமம் சொல்லி
உண்மை மறைத்து உலா கூட்டி போகிறீர்
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி
தலைவன் போட்ட கணக்கை
பூட்டில் பூட்டி
மன்னர் என்றே
இன்றும் சில (அ) சுகவாசிகள்
உதாசீனம் அல்ல உங்களை கேட்கிறேன்
பொருள் தேடி வீடு வருகிறீர்கள்
விடுதலை தேடி எப்போது போவீர்கள்
இறைவனாகிய தலைவன் பிரபாகரன்
சினம் கொண்டிருக்கிறான்...
பாவலர் வல்வை சுயேன்

lundi 27 février 2017

சோலைக் கீதம் கேட்டேன் !!

மகப் பேற்றுச் சாலையில்

மழலைகள் குரல் கேட்டேன்

மாங் குயிலும் பூங் குயிலும்

இவர்களிடமே இராகம் கற்று

சோலைக் கீதம் பாடுகின்றன



பாவலர் வல்வை சுயேன்      

jeudi 23 février 2017

எந் நாளும் வாழ்வேன் நான் !!

பூகம்பச் சாரலும் தோற்றது உன்னிடத்தில்  
இதயக் கதவை இனிமேலும் பூட்டிவிடாதே
ஆசை மலர்களில் தோரணம் கட்டி
மாலை மஞ்சம் அழைக்கிறது
வெட்கமெனும் ஆடை களைந்துவிடு
உனக்குள்ளே உயிராகி
எந் நாளும் வாழ்வேன் நான்                

பாவலர் வல்வை சுயேன்      

mardi 21 février 2017

வளர் பிறையே வருந்தாதே !!


நிலாவே நீதான் நில்லாமல் வருகிறாய்
தனி வழி போரேனென்று துணையாக வாராயோ   
பொல்லா வாழ்விலே போகும் வழி நான் அறியேன்
இல்லா வாழ்விலே யுத்தங்கள் செய்திட்டேன்
காதலாலே கதல் செய்து காணும் இன்பம்
கண்டு திளைத்தேன்
வேறு முகம் கொள்ள வில்லை
வேண்டாம் இந்த வாழ் வென்றே
பாடை வழி நான் போக
இறுதி வழி அனுப்பி இரங்கல் உரை செய்து  
வளர் பிறையே நீ வருந்துகிறாய….

பாவலர் வல்வை சுயேன்

dimanche 19 février 2017

தனிமை கொடிதே !!!

சுடாத சூரியன் உலா கூட்டிச் சென்று
உள்ளம் தொட்டுப் போகின்றான்
நாளை வறேன் என்று
இரவின் தனிமை நினைத்து தயங்குகிறேன்
அவனை தழுவாமல் தனியே ஏன் விட்டேன் என்று

பாவலர் வல்வை சுயேன்

samedi 18 février 2017

வாடை வந்து வரவேற்றது !!


இலக்கங்களை கூட்டிக் கழித்து எழுதிப் பார்த்தேன் - உன்

இதயத்திற் கென்றொர் தொலை பேசி எண் இல்லை

வாசலிலே நீ போடும் வண்ணக் கோலங்களில்

உன் விரல்கள் எங்கெங்கோ தீன்ட

மறந்தும் அது என்னை தீன்டாதா என

என் பருவ ஏக்கங்கள் மனதை கொய்ய

வாடை வந்து வரவேற்றது

என்னையும் உன் வாசலுக்கு !

மதனாய் நானும் ரதியாய் நீயும் மணவறையில்

இமைக் கதவின் வழியே

இதய அறைக்கே

அழைத்துச் சென்றாய் என்னை நீ

கவிப் பாயில் விடியல் பனியிலும்

இலக்கணங்கள் எழுதி எழுதி சித்தி பெற்றோம்



பாவலர் வல்வை சுயேன்

vendredi 17 février 2017

காமம் அல்ல !! மோகம் அல்ல !!


பற்றில்லா பந்தம் வந்து ஒட்டிக் கொண்டதால்
முத்தம் தந்த துளியை வெள்ளம் அடித்துச் சென்றது !     
ஓடிச் சென்று ஒதுங்கிய துளிகள்
ஒளி தொடா பாகத்தில் ஒட்டி நிற்க
இமைக் காவல் மீறிய உன் கரு விழிகள்              
அறியா மொழியென மூடி வைத்த புத்தகத்தை
மொழி பெயர்த்துத் தந்தன என்னிடத்தில் !
வாசகன் வாசிக்கின்றேன் உன் நேசம் அறிந்தே
காமம் அல்ல மோகம் அல்ல
அனைத்தும் கடந்த மெஞ்ஞானம் நீயே ....

பாவலர் வல்வை சுஜேன்


lundi 13 février 2017

அன்பு மலர்கள் !!!

மலர்கள் பூத்திருக்கின்றன நீ வரும் வழியில்

உன் பாதம் நோகும் என்று

இதயச் செடியில் எந் நாளும் பூக்கட்டும்,

அன்பு மலர்கள்

காதலை காதலால் கனிவு செய்வோம்..  



பாவலர் வல்வை சுயேன்

dimanche 12 février 2017

நீ எங்கே போகிறாய் !!!


நிலம் விட்டு புலம் பெயர்ந்த மென் மனமே

நீ எங்கே போகிறாய்....

காற்றும் வெப்பமும் கடும் குளிரும்

கூட்டாட்சி போரில் உன்னை அடித்தனவோ

தாளாது தணிந் துருகி மழையாய்

உன் மண்ணுக்கே வந்துவிட்டாய் 

நதியாய் நாணலாய் நடமுற்று

சங்கமக் கடலில் கலந்த ஜீவிதமே

சிலையாகினேன்

நின் ஜீவன் மண்ணுக்கே எழுதப்பட்ட

பட்டையக் கணக்கென கண்ட பின்னே



பாவலர் வல்வை சுயேன்

நீ எனக்கானவளே !!!!


உன் ஒற்றை விழிப் பார்வையே ஈர்ப்பு விசை ஈட்டியடி

அணை போட்டு வைத்திருக்கிறேன்

துணைவனாய் உன்னருகே வரும் வரை!

மலர்ச் செண்டே உனை நாடும் வண்டுகளிடம்

இதழ் முத்தம் வாங்கிவிடாதே நீ எனக்கானவளே


பாவலர் வல்வை சுயேன்

jeudi 9 février 2017

உன் தாய் நிலம் உனக்கே சொந்தம் !!!!


விடி வானம் சிவந்து விடியல் பருகி விழி மலர

உதிர்ந்த மரங்களாய் உதிர்ந்தன உயிர்கள் 

கூனி வளைந்து குறுகியது கேழ்வி

பாரா முகமாய் பதில்கள் சிதைந்திட

யுத்தத்தின் மொத்த ரணங்களோடும்

திறந்த வெளிச் சிறையில் எஞ்சிய எச்சங்கள்

கானல் வாழ்க்கை கண்ணீர் குளத்தில்

ஊற்றுத் துளிகள் உறங்கா இருளில்     

விடிவில்லா எச்சமாய் விடிவின்றித் துடிக்கிறது

இன்று கேபாப் புலம் நாளை எவ்விடமோ

மடிந்தோம் என்று மனம் குன்றாதே

விடிவுண்டு நிச்சயம் எழுந்து போராடு

உன் தாய் நிலம் உனக்கே சொந்தம்       



பாவலர் வல்வை சுயேன்

mercredi 8 février 2017

உயர்ந்த உள்ளம் ..

மனமே மாளிகையானால் உயர்வென்ன தாழ்வென்ன
கிரகப் பிரவேசத்தின் குடியிருப்பில் பேதம் கொள்ளாது
உயர்ந்தவர் உள்ளம்

பாவலர் வல்வை சுயேன்

lundi 6 février 2017

கண்ட பின்னே சொன்னார் !!!

விண் தாரகைகளோடு நின்று குலாவும் நிலாவே
வெட்ட வெளி மீதிலும் நீ சட்டை போட்டதில்லை
குட்டை குளம் வெறுத்து நீந்தாமல் விலகவில்லை
அண்ட வெளி நின்று ஆதவன் ஒளி அள்ளி
கொடி இடை நீராடும் தாமரையின் இதழ் பரிசம் இட்டு
விடியல் வரும் போதில் விளக்கணைத்துப் போகின்றாய்

விரகம் எனச் சொன்னோரும் விழிப் புலனற்று
கால் நடையில் கார் இருள் கிடந்தோரும்
கண்ட பின்னே சொன்னார்
உண்பதற்கே இந்த ஊனும் உடலும் என்று
நிலாவே நீ வாழி   

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...