அருவி.. ..
உருவம் அற்ற மிகையில் மலையிருந்து வீழ்கிறேன் வசீகரம் கொள்கிறாய் மனிதா என்னில் நீ
மூலிகையும் தேனீகமும் தேடி வருகிறேன்
உன் ஜீவனின் மருந்தகம் என்னில் சுமக்கிறேன்
தழுவிக்கொள் என்னுயிரே என்னை உன் காதலியாய்
தடாச் சட்டம் ஏதும் இல்லை
உன்னை தடுத்தாட்கொள்ளமாட்டேன், ஆனாலும்
உன் ஜீவனாய் எண்ணிவிடாதே என்னை, என
வளைந்தோடி விலகிச் செல்கிறது, அருவி ...
Kavignar Valvai Suyen
''..மூலிகையும் தேனீகமும் தேடி வருகிறேன்
RépondreSupprimerஉன் ஜீவனின் மருந்தகம் என்னில் சுமக்கிறேன்...''
மிக மிக நன்று சுஜேன்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
சகோதரி வேதா தங்களின் மிக மிக நன்றெனும் இனிய வாழ்த்தில், என் ஈரடி கவியின் இனிமை கண்டு மகிழ்ந்தேன் .. நன்றி...
Supprimer