பத்திரிகை...
முகத்தில் ஒரு குங்குமப் பொட்டு
அல்ல அல்ல அதுகும் ஸ்ற்றிக்கர் இட்டு
கதிரவனின் கீற்றுக்களால் கூற்று...
கொட்டை எழுத்தில் ஏதோ ஒன்று
அதன் பக்கம் பார்த்தால்
சவரம் செய்யாத புற்கள் நான்கு
முன்னும் பின்னும் நடுவத்திலும்
நாலுங் கெட்ட நங்கையர் சிட்டு
அத்தனையும்,
சினிமா ஸ்ற்றார்களின் கிசு கிசுக் கொத்து
தினப் பத்திரிகை தினமும் சொல்வதெல்லாம்
காதல் தோல்வியும் கற்பழிப்பும் கத்திக் குத்தும்
சட்ட சபையில் எம் எல்லேக்களின்
செருப்பு விளாசல்களும்
உதய வேளை இதயச் சுடர் ஏற்றும் ஒளியே
பத்திரிகை என்பார்.. ..
உலகையே இன்று ஊழிக்குள் தள்ளும்
விபச்சாரி வீட்டு வெளிச்சமாகிவிட்டது பத்திரிகை...
Kavignar Valvai Suyen
என்ன செய்ய முடியும் இப்படி கூறுவதைத் தவிர...
RépondreSupprimerவேதா. இலங்காதிலகம்.
உண்மைதான் சகோதரி வேதா..., குட்டையில் ஊறிய மட்டைகளாகி விட்டன பத்திரிகைகள். என்று தன்னிலை தாம் பெறமோ யாருக்கும் தெரியவில்லை....
Supprimer