கனவு.. ..
உறங்கும் உன்னை எழுப்பாமல் கனவுலகம் அழைத்துப் போகிறது
விழிப்புணர்வின் அணுக்கள்
காணாத உலகெல்லாம் கண்டு வருகின்றாய்
மாங்கனியும் தேன் கனியும் அள்ளி உண்கிறாய்
இவ்வுலகைக் காண பணம் வேண்டாம்
விமானம் வேண்டாம், படுத்துறங்கு போதும்
காணும் உலகிற் கெல்லாம் நீயே ராஜா ராணி
தேர் ஏறியும் வருகிறாய்
தெருக் கோடியிலும் கிடக்கிறாய்
விழியைத் திறவாதே, திறந்தால்
விட்டுப் போய்விடுவேன் என்கிறது கனவு...
Kavignar Valvai Suyen
''..தேர் ஏறியும் வருகிறாய்
RépondreSupprimerதெருக் கோடியிலும் கிடக்கிறாய்
விழியைத் திறவாதே, திறந்தால்
விட்டுப் போய்விடுவேன் என்கிறது கனவு.....''
ஆகவே நன்கு தூங்குங்கள்
நிறையக் கனவு காணலாம்.
நல்ல கற்பனை சகோதரா..
கற்பனையல்ல நிசம்.
வேதா. இலங்காதிலகம்.
நிசம்தனை கனவின் வசமாக்கி தேர்வுக்குரிய மதிப்பீட்டை தந்து கனவை காப்பாற்றிவிட்டீர்கள் சகோதரி வேதா... கனவென்பது எல்லோரிடமும் வருகிறது நித்திரையில் - நினைவில் எண்ணுவது கனவல்ல, பேச்சு வளக்கில் கனவை எங்கெங்கோ இடம் மாற்றி களங்கம் செய்கிறோம் அதற்கு இதுதான் நிசம்.. நன்றிகள் பல சகோதரி
Supprimer