samedi 16 août 2014

கப்டன், அங்கயற்கண்ணி ..


கொடு நிலை உளன்று சிறு நிலை அகற்றி
கடல் கலம் தனை எரித்த கனலே
உன் உயிரே உனக்கு துச்சமடி
தமிழீழ விடுதலை ஒன்றே உனது நேசமடி
தலைவன் பிரபாகரனின் தங்கை நீயல்லவா
வீரப் புலிப் படையணியின் புயலல்வா
நீரடி மூழ்கி பேரிடி முழங்கி கந்தக வெடியில்
கயவரின் போர்க் கப்பலை எரித்தாய் ..
யாரடி உனக்கு நிகர் சொல்
பாரதி இன்றில்லை காண்
நீயே புரட்சி பெண்ணின் முதல் படைப்பு
இனியும் பணியாது பெண்ணினம் மிதி பட்டு
உன் நினைவலை ஏறி நின்னடி தொழுகிறோம்
வீரத் திருமகளே நீ வாழி ....

vendredi 15 août 2014

மண்ணுலகை பூவுலகென்றான் ஒருவன் ..


மண்ணுலகை பூவுலகென்றான் ஒருவன்
அந்தப் புனிதனை தேடுகிறேன் ..
புனர்ச்சியில் படைப்பும்
கூண்டில் காத்தலும்
அகத்தில் அழித்தலும்
மனிதன் கையில் ..
அருவமா .. உருவமா ..
வேலியில் ஓணான் இறைவனா ..
புனிதனை தேடுகிறேன் ..

ஆகாசம் தொட்டு வளர்ந்தாலும் ..


ஆகாசம் தொட்டு வளர்ந்தாலும்
தாய் மண்ணை பிரியாமல்
பதித்து நிற்கிறது தன் பாதம்
அந்த ஆல மரம் ..
 
வெண் பனிச் சாரல் தொட்டும்
வெந்து துடிக்கும் மனமே
உன்னை என்னை
உலகின் கண் அறிமுகம் தந்தது
அந்தத் தமிழீழ மண்ணல்லவா ..
ஆலைப் போல் அறுகைப் போல்
பாதம் பதித்திட வாடா என் தோழா
அழைக்கிறது தாயகம் ..

உன் சொந்தம் உள்ள புன்னகையை ஏலம் போட்டவன் யார்.?


உன் சொந்தம் உள்ள புன்னகையை
ஏலம் போட்டவன் யார்.?
பணம் படைத்தோரின் வர்ண மாளிகையில்
பளிங்கிக் கற்களாய் ,
பதிக்கப் பட்டுக் கிடக்கிறது உன் புன்னகை
இறைவன் என்பவன் நியம் என்றால்
இன்னும் ஏன் அவன் இங்கு வரவில்லை .. ..

jeudi 14 août 2014

பகல் நிலவான புலம் பெயர்த் தமிழச்சியே ..



பகல் நிலவான புலம் பெயர்த் தமிழச்சியே
உதிர்கால இலையாய் உலர்கிறாய்  உழர்கிறாய்      
கடிகார முள்ளாய் நில்லாது சுழல்கிறாய்
இருந்தும் இல்லற ஒளியிலும்
இன்றியமையா உழைப்பிலும்
விண்ணைத் தொடுகிறாய் .!

வளர் முகம் காட்டும்
வறுமைச் சோலையே
வம்ச ஒளி வீசும் விம்ப முகமே
இருதயம் பகரும் இரும்புத் தென்றல் நீ ...

mercredi 13 août 2014

கடவுளை காணவில்லை ஆத்மா துடிக்கிறது ..


கடவுளை காணவில்லை ஆத்மா துடிக்கிறது
வறுமை உறவு கொள்ள பிரிந்த உறவுகளே
உலை ஏற்றிய அன்னை அரிசிக்காக அலைகிறாள்
ஆனவரை பொறுத்துவிட்டேன்
ஆக்கும்வரை பொறுக்குதில்லையே, பசி..

இதழ்களை ஆழுமை கொள்ளும் நிறங்கள் ..


இதழ்களை ஆழுமை கொள்ளும் நிறங்கள்
அரவணைத்துப் பரிசம் இட்டாலும்
அருந்திச் சுவைப்ப தென்னவோ
ஆசை முத்தங்களே ..
இறகு விரித்த இமைகள் கூட
நிர்ப்பந்தப் பிரிவில்
நினைந்துருகி பெருமூச் செறிந்திட
முள்ளில் ஆடும் றோஜா
மோகக் கள் தந்து
விரசம் ஊட்டி கொய்கிறது உயிரை ..

mardi 12 août 2014

இந்தா பாரு நான் கெற்றப்பு போட்ட மைனரு ..


இந்தா பாரு நான் கெற்றப்பு போட்ட மைனரு ..
மத்தாப்பு காட்டாதே நான் அழுதிடுவன் ..
ஆண் பாவம் பொல்லாது ..

lundi 11 août 2014

முதல் ராத்திரி நான் இவனுக்கு முழு நிலா ..

 
 
முதல் ராத்திரி நான் இவனுக்கு முழு நிலா
மூன்றை பெத்தபின் ஏனோ கரு நிலா
என், ஸ்பரிசங்களில் பூத்த வியர்வைத் துளிகள்
அன்றுவனுக்கு பன்னீர் வாசம் ..
இன்றோ என் வியர்வைத் துளிகள்
இவனுக்கு துர் நாத்தம் ..
என் நாடித் துடிப்பின் ஓசை ஒன்றுதான்
எனக்கு வாழ்நாள் கடிகாரம் ஆகிவிட்டது!

நிலா என்றழைத்தவன் உலா போகிறான்
நூலறுந்த பட்டமாய் ஒருநாள்
இவன் தொங்கும் வேளை
காத்தும் மழையும் இவனுக்காக 
காத்திருக்கா தென்பதை அறியட்டும் ..
என்றோ இவன் எனைக் காண வரும்போதில்
வாசலில் நான் அல்ல ,
இவனுக்காக காத்திருக்கும் விளக்குமாறு .. ..
 
 
 

dimanche 10 août 2014

சிலை என்றாலும் கலை என்றாலும் ..


சிலை என்றாலும் கலை என்றாலும்
பெண்மைக்கு பூவாடை உடுத்தி
பூச்சரம் தொடுப்பவனே ..
இன்று ரக்‌ஷாபந்த் தினம் என
சகோதரச் சான்றுகள்
உரிமைக் கயிறாய் கட்டப்படுகின்றன ..
சோதரன் உனக்கு ராக்கி கட்டத் துடிக்கிறேன்
எனக்கிரு கரம் இல்லையே என் செய்வேன்
பாதகர் பறித்துவிட்டார்
எரித்திடு அவரை உன் எழுத்தால்
நீ என் அண்ணன் அல்லவா ...

samedi 9 août 2014

நிமிடங்களை தொடுவதற்காக நொடிகளாய் ஓடுகிறேன் ..



நிமிடங்களை தொடுவதற்காக நொடிகளாய் ஓடுகிறேன்
நிமிடங்களோ மணித் துளிகளைத் தொட்டு
நாள்க்களோடு உறவாடுகிறது .. ..
இதுவரை நான் எண்ணியதில்லை
என் இதயத் துடிப்பின் எண்ணிக்கையை
இதயமே இதயத்தை கொன்று இறப்பைத் தரதே
நான் நிமிடங்களை தொடுவதே உனக்காகத்தானே....

மழைத் துளியின் நிர்வாணம் கண்ட மின்னல் ..


மழைத் துளியின் நிர்வாணம் கண்ட
மின்னல் எடுத்த படங்களால்
இடிக்கு எழுந்தது கோபம்.!
கர்ச்சித்து முழங்கிய இடியை கண்டு
கலங்கிய மின்னல்
தான் எடுத்த படங்களை எரித்து
மன்னிப்புக் கோரியதும்
உலகை நனைத்துப் போகிறது
நிர்வாணத் துளிகள் ..

vendredi 8 août 2014

வறண்ட பானையில் விழிகள் எதையோ தேட ..


வறண்ட பானையில் விழிகள் எதையோ தேட
விறகில்லா அடுப்பும் அஞ்சித் தவம் கிடக்க
வானம் பார்த்த பூமியை                    
வர்ணன் காதலிக்கவில்லை
நேசம் கொண்ட கஞ்சிக் கலயத்தோடு
ஊடல் கொள்கிறது  வாழ்க்கை.!

jeudi 7 août 2014

சின்னச் சின்ன ஆசை சிறகறுந்த ஆசை ..



சின்னச் சின்ன ஆசை  சிறகறுந்த ஆசை
சும்மா இல்லைச் சுவையே 
அம்மா சுட்ட தோசை ..
முதுமை தொட்ட போதும்
இளமைக் காதல் ஆசை
சில்வெஷ்ற்றர்  ஸ்ற்றலோன் வீட்டில்
வேலை செய்ய ஆசை
அவர் கனாகாணும் வேளை
கட்டழகை களவு கொள்ள ஆசை
மீசை இல்லாக் கிளவனின்  
தீராத்  தொல்லை ஆசை ..

mercredi 6 août 2014

கவி தெரியா புலைஞன் என்னை ..



கவி தெரியா புலைஞன் என்னை
கவி எழுத வைத்தவளே ..
தொட்டது பாதி தொடாதது பாதியுமாய்
எழுதிக் கிழித்தேன் பல நூறு கவிதை
புரியவில்லை என்றாய் ..
என்னை நீ படித்து உன்னை நான் படித்து
வரவிலக்கணத்தோடு ,
மழலைக் கவி வடித்தோம்
வாழ்த்துக்கள் வந்து குவிந்தன ..
என்னை கவிஞனாக்கியவளே
என்னும் சொல்லிக் கொடு நீ
எழுதாத பக்கங்களில் எழுதுகிறேன்
புதுப் புது புதுக்கவிதை ..
எண் இல்லா இரவு பகல் இன்னும்
நமக்காக காத்திருக்கின்றன ..

mardi 5 août 2014

முதுமை தொடாத இளமை வனம் இன்னும் என்னிடத்தில் ..


முதுமை தொடாத இளமை வனம்
இன்னும் என்னிடத்தில் ..
என்னவன் இளப்பில் மரணித்தவள் நான்
தாவாரச் சாரல்கள் வந்து நனைப்பதால்
துளிர்க்கிறேன்  துவள்கிறேன்
இள மனசு இன்னும் இறக்கவில்லை ..
ஜன்னல் ஓரத்து நிலா வந்து
என் முகம் காண்கயில்
ஒரு வாசகம் பேசத் துடிக்கிறேன் ..
வெள்ளைப் புடவை தந்து வேர் அறுத்தவர் அருகில்
தூறலே ஏன் இன்னும் நீ மண்ணுக்கு வருகிறாய்
விண்ணுலகம் அழைத்துப் போ நானும் வாறேன் ..

lundi 4 août 2014

இதயம் பாவம் என்று எவன் சொன்னான் ..



இதயம் பாவம் என்று எவன் சொன்னான் ..
முள்ளும் மலரும் கலந்து செய்த கலவை இது ..
ஒரு நாள் நேசம் மறு நாள் ஈகம்
ஈட்டி முனையில் இன்ப துன்பம்
காலச் சுவட்டில் கருக்கிச் சிதைக்கிறது
இதயத்தை இதயம் ..

பட்ட மரம் என ஏன் நினைத்தாய் என்னை ..


பட்ட மரம் என ஏன் நினைத்தாய் என்னை ..
உறவெனும் ஆலின் ஒற்றைக் கிளை நான்..
நிழல் தந்த மேகமே ..
திசை அறியா காட்டில்      
மழைத் துளியாய்
வீழ்ந்தாய் எப்படி.?
நதிக் கரைக்கு வந்த என்னை
உன் மதி முகம் கொல்லுதடி ..
நீர்ச் சலனங்களுக்குள் நீ
நிற்கதியாய் நான்  ..

vendredi 1 août 2014

Fete Nationale Suisse 1er Aout ..


மழைத் துளி வீழணும் மண்ணில் சுதந்திரம்
காற்றுக்கில்லை வேலி எதிலும் சுதந்திரம்
தன்னைத்தானே செதுக்கணும்
தனி மனித சுதந்திரம்
ஓகஸ்ட் 1. சுவிஸ்சின் சுதந்திரம் ..

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...