samedi 22 novembre 2014

ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை ..


ஒவ்வொரு விடியலும் விடியும்வேளை
ஒவ்வொரு இரவுகள் இறக்கின்றதே
ஒவ்வொரு விடியலும் உறங்கிவிட்டால்
ஒவ்வொரு இரவும் தின்கிறதே.. ..
இருப்பது சில நாள் இறப்பது ஒரு நாள்
உயிரும் அதற்கே போராடு
உரிமை வெல்வோம் உலகம் வியக்கும்
உன் நிலை உயரும் வழி தேடு
வாழ்வுக்காகப் போராட்டம்
வானகம் மீதிலும் நடக்கிதடா
வாழ்வோ சாவோ வென்றால்த்தானே
தலை முறை வாழ்ந்து சிறக்குமடா
தமிழா தமிழா ஒன்றுபடு
தமிழீழத் தாயகம் தாகமடா...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...