dimanche 26 novembre 2017

தமிழரின் இறைவனுக்கு அகவை 63

உயிரே உலகுரு தமிழின உள்ளொளியே
முது மொழி தமிழின் முக வடிவே
கார் மழை கூடலில் கார்த்திகை மலராய்
வங்க அலை தாலாட்டும் வல்வையிலே
அன்னை பார்வதி பெற்ற வடிவழகே பிரபாகரா

வானுயர்ந்து பெய்யும் மழை நீ
நீ தந்த நீர் பொசிந்து
தழிர் கொண்டே
யாம் உமை பாடுகிறோம்
அருள் ஞான வடிவே
உன்னடி முடி தேடுகிறோம்
வரம் தந்து தமிழீழம் காண வா தலைவா
சத்திய சோதனையின் நித்திலமே
நீ இன்றி யாம் வாழும் ஈழம் ஏதிங்கே

சூரியச் செல்வா சுதந்திர ஒளியே
அருள் வடிவான ஆரமுதே
நெடு நீழ் களம்தனில்
கொடும் துயர் களைந்தே
கருப் பொருளாணவன் நீ
அடர் வனக்காடும் அன்புடை தோழரும்
புடை சூழ் புலி படை கொண்டே
புறம் எரித்த அறமே
உன் திருவடி தொழ தேடுகிறோம் இறைவா
பிறந்தாய் நீ பிறந்தோம் உமதூரில்
அரு மருந்தே நீ வாழியவே வாழி       


பாவலர் வல்வை சுயேன்

vendredi 24 novembre 2017

என்னை மன்னித்துவிடு 🌷

அழகே உன்னெழில் காணத்தானே
புத்தகத்தில் குடி வைத்தேன்
மாதங்கள் வருடங்களாகிட
மனப்பால் குடித்திருந்தேன்...
முலை ஊட்டிகளே
குட்டி போடும் என்றார்
ஆசிரியர்!

உன் வண்ணம் கண்டே
ஆசை கொண்டேன்
மயிலே மயிலே
என்னை மன்னித்துவிடு
எண்ண இறகை உதிர்த்து
உன் வண்ண இறகை
உன்னிடமே தந்துவிட்டேன்

பாவலர் வல்வை சுயேன்

mardi 21 novembre 2017

விற்பனைக்கு சவப் பெட்டி.....

கடை ஒன்று திறப்பு விழா
விற்பனைக்கு சவப் பெட்டி
அழைப்பிதழ் வைத்து
அழைக்கிறான் அன்பு நண்பன்
என்னென்று வாழ்த்துரைப்பேன்

தினம் தினம் ஊரில் விழும்
சாவை எண்ணி
சந்தோசம் காணும் தொழில்
மனம் கூச மண்ணை பார்த்து
கடை வாசல் ஏறினேன்
புன்னகை புரிந்தான் தோழன்
கண்ணகைத்தேன் காணவில்லை போலும்
கட்டப்பட்டிருந்த றிப்பனை வெட்டச் சொன்னான்

ஒரு கணம் இதயம் ஊடறுந்து உளறாதே என்றது
மங்கலம் உண்டாகட்டும் என்று எப்படி சொல்வேன்
றிப்பனை கத்தரித்து உச்சரித்தன உதடுகள்
கலகலவெனவே கல்லாவில் வாசம் செய்வாள் லக்ஷ்மி
இதில் நான் என்ன நீ என்ன ஆறோ நூறோ தோழா
இறுதியாய் உறங்கிச் செல்வேன் உன் கடை பெட்டிக்குள் என்றேன்
ஆரத் தழுவி முத்தம் இட்டு உத்தரவென்றான் அன்பு நண்பன்


பாவலர் வல்வை சுயேன்

samedi 18 novembre 2017

பாரியின் வம்சம் நீ ...

பகலிலும் ஒளிரும் பதுமையே
கரு விழி கலந்தாய் பாலமுதே
ஏழு கடல் ஏறி ஓடி வந்தேன் நானே
உன் கால் தடம் கண்டே கரையினை தொட்டேன்

கொலு சொலி சொல்லும் உன் பெயர்தானடா
மெட்டி வளைவிலும் ஒட்டியே நிற்கிறாய்

போதும் எனக்கிந்த வதிவிடம் தேவி
போ என்று தள்ளாதே
போகுமிடம் அறியேன் நானே  

நாழிகை நொடிக்குள் துடிக்கிதே இதயம்
தின மணி முள்ளாய் சுற்றியே வாறேன்
விண் மேகம் உரசும் மின்சார கதிரே
இடி ஓசை வரும் முன்னே
மடி சாய்ந்தேன் நானே நானே
உதயம் வரும்வரை உறங்காமல் கொடு கொடு
உன் பேர் சொல்லும் பிள்ளை பெற்றே நான் தாறேன்

கணையாழி தந்தேனடி கலங்காமல் காத்திரு
துஷ்யந்தன் அல்ல நான் துவளாதே தூவானம் அடிக்கிது

உன் தேகம் எனக்கு தேக்கம் தோப்பே தோப்பே
என்னை படர வைத்தாய் நீ பாரியின் வம்சமே

களம் காணும் மன்னா உன் தேரோட்டி நானே நானே
என் புருவ வில்லேந்தி கொன்று வா பகைவனை
சாம்றாட்சிய வாழ்வில் சந்தோசம் காண்போமே


பாவலர் வல்வை சுயேன்        

jeudi 16 novembre 2017

வாசலிலே அழைப்பொலி !!!

முகில் திரையாலே முத்தம் இட்டாள்
நீலச்சேலை கட்ட மறந்த மங்கை
வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள்
ஆடை கட்டின !
வாசலிலே அழைப்பொலி கேட்டே
மெல்லத் திறந்தேன் ஜன்னலை
உத்தரவின்றி உள்ளன்போடு
உதட்டில் முத்தம் கொடுத்தாள்
வெண்பனி பாவை !
முற்கள் இல்லா பஞ்சணையின் கத கதப்பில்
உதடுகள் சிதைந்து ரெத்தம் சிந்தியது !
உச்சிமுதல் பாதம்வரை
பாதுகாப்பு கவசம் அணிந்துவிட்டேன்
உத்தரவாதம் இல்லா குளிர் நங்கையுடன்
கூடுதல் கூடாதென்றே... ....

பாவலர் வல்வை சுயேன்

lundi 13 novembre 2017

வாசம் போகும் வாழ்விலே....

வட்டமிடும் கழுகின் முன்னே அலை தட்டும் ஒலி கரையினிலே
இருளும் ஒளியும் விழி சூழ வாழ்ந்தே வாழ்வு இறக்கிறது
வாசம் போகும் வாழ்விலே, மாயும் மனமே நீ ஓய்வெடு....

பாவலர் வல்வை சுயேன்

dimanche 12 novembre 2017

விதி என்றால் விடைகொடு!!!

ஈர் உடல் ஓர் உயிர் ஒன்றாய் ஒன்றிட
காதலும் காமமும் சங்கமம்
காதல் ஊன்றி காமம் ஊன்றேல்
மோகத் திரையில் சங்கமம்
விதி என்றால் விடை கொடு விழியே
மதி இங்கு வெல்லாது மனசே
மாமரத்து பூவிலும்
மகரந்தம் மனம் கனிந்தே விழ்கிறது

பாவலர் வலவை சுயேன்

vendredi 10 novembre 2017

என்னை தொடு நிலாவே!!!

விழியில் ஒளியாய் நுளைந்தாய் நிலாவே - மென்
விரல்களிலே உன் புருவம் கண்டே உயிர் கலந்தேன்
உன்னை தொட்ட நீலாம்ஸ்றோங்
இன்றில்லை என்றால் என்ன
நிலாவே என்னை தொடு
உனக்காக விண்ணுக்கும் மண்ணுக்கும்
தொடர் பாலம் கட்டுகிறேன்
பா எழுதும் பாவலர்கள் பருவம் பார்த்து
உன் கன்னத்தில் முத்தம் இட்டால் என்ன,
கலங்கேன்
விண் முகில் இறகெடுத்து விளையாட வாறேன் நானும்
என்னுயிர் உள்ளவரை என்னவள் நீயே... ....

பாவலர் வல்வை சுயேன்

jeudi 2 novembre 2017

ஏர் முனை இல்லையேல் !!!

வான மழை பெய்யாதோ என
பூமி உடைந்து விண் நோக்க
விதைந்த நெற்கள் வரப்புயர் வின்றி கூனி குறுக
ஏர் முனை பதிந்த நிலம் ஏற்றம் இன்றி எரிகிறதே

வாராதோ மழையென வாடி உளவன் நொந்தும்
வர்ணன் வாராதிடத்தில் வந்து போன அரசு
வழங்கிச் செல்கிறது மரணச் சன்றிதழ்
எள்ளி நகை செய்யாதீர்
ஏர் முனை இல்லையேல் நீயும் இல்லை

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...