jeudi 21 avril 2016

நீலவிழி பாவை.... பனி படர்ந்த காட்டில் பஞ்சாடை களையும் பகலவனே
நீ செய்த மாயம் என்ன ?
வெண்ணிற ஆடை களைந்த இயற்கையாளொடு
நீலவிழி பாவையொன்று விழி இமை தட்டி
விரல்களால் கோலமிட்டு வா என்றழைத்தது என்னை!

தரைமீது அன்னமோ தங்கச்சிமிழோ என நான் பாத்திருக்க
அவளின் பிறை விரல் நகங்களை
நூலாடை இல்லா நண்டுகளும் தொட்டு விளையாடி
புதுக்கவிதை எழுதி பூக்கோலம் வரைந்தன, அந்த மணற்பரப்பில் !

விழ்ந்தேனா வாழ்ந்தேனா அறியேன் அந்த நீல விழிக்குள்
விழி மூடா இரவுகளோ நூறு
அவளுயிரே நான் என அவள் வரைந்த ஓவியங்கள்
நூற்றுக்கு நூறு !
இருவரின் பரிச பரிமாற்றத்தில் நனைந்த இரவும் பகலும்
நான்கு விழிகளின் நட்சத்திர நர்த்தனம் கண்டு
நன்றி கூறிச் சென்றன தாம் பிறந்து இறந்த நினைவுகளோடு  

மாதங்கள் பன்னிரென்டில் மார்கழி வந்து செல்ல
வைகாசி பகலவனால் நூலாடைகளும் மெல்ல விலக
மீன்டும் மணல்பரப்பில் நேசக்காதல் நீல விழி பாவை
அந்த நீலவிழிகளுக்குள் புதிய கென்டைகளை நீந்தவிட்டு
மறுவீடு போய்விட்டாள்!
இரண்டு மனம் வேண்டாமென யாரிடம் சொல்வேன்
இயற்கை எனும் இளைய கன்னியை கைகோர்த்து வாழ்கிறேன்

Kavignar Valvai Suyen

samedi 16 avril 2016

இதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்கள்..!இதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்களில்
இறக்கை விரிக்கின்றன
மனம் எனும் பட்டாம் பூச்சிகள் !

மோகக் காதல் முன்னரங்க வகுப்பில்
ஆசைத்தூறல் ,
எல்லை இல்லா ஏகாந்த வெளியில்
அறுபதிலும் இளைப்பாற
மனசில்லை மனசுக்கு
வற்றிய தடாகத்திலும் தூர்வாரி
துகில் முகிலுக்குள் ஒளிகிறது
எத்தனையோ இராத்திரிகள் செல்லரித்து இறந்தாலும் 
சுட்டெரிக்கும் நெருப்பு மேனி களை தின்றாலும்
பசி எடுத்த நாள்கள் பட்டுணியில் கழிந்ததென்று
இதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்கள்
குப்பையிலும் உயிர்க்கின்றன....

Kavignar Valvai Suyen

jeudi 14 avril 2016

தமிழர் புத்தாண்டாம்.. !
சித்திரை ஒன்று இன்றென்று அதிகாலை
தட்டப்படுகிறது கதவு !
தமிழர் புத்தாண்டாம் நாள்காட்டியும் சொல்கிறது
உண்மைதான் போலும் !

என்ன சத்தம் அங்கே ?
ஓர் சிலர் சீனவெடி கொழுத்துகிறார்கள் !
வீரப்பிரதாபம் கொள்ளும் போர்த்தேங்காய்
அடிக்கவில்லை !
காரணம், யுத்த நெஞ்சுரம் கொண்ட மண்வாசம்

செம்மொழி தமிழென்றான் செரிக்காத ஒருவன்
ஆறரைகோடி தமிழன் இருந்தும்
அம்மொழியே அம்மணமாய் கிடக்கிதடா
ஆறடி நிலமும் சொந்தம் இல்லா தமிழா

உனக்கொரு நாடு வேண்டுமடா
அன்,நாள் காணும் பொன்,நாள் எதுவோ
அதுவே தமிழரின் புத்தாண்டென கொள் நீ
புதுயுகம் காண புயலாய் எழு... எழு...
அனல்மின் அல்லடா... அணுவுலையே நீதானடா...

Kavignar Valvai Suyen

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...