mercredi 31 mai 2017

பொன் வான ஓடம் நீ ....

ஏஞ்சலே வந்து போகிறாய்
ஏதேதோ சொல்லத் துடிக்கிறாய்
பிஞ் செனவே எண்ணாதே
அஞ்சுகமே அஞ்சாதே
எந் நாளும் பஞ்சணையில்
என்னை நீ கொல்லாதே...

கொல்லாமல் கொல்லும் கண்ணே
பொன் வான ஓடம் நீ
தூரக் கண்ணாடியில்
ஏதே தோ எழுதுகிறாய்
நம்பிக்கையே நல் வேதம்
நான் அறிவேன் உன் தாகம்
நான்கு சுவர் வேலிக்குள்
நற் தவம் கொள்வோம் வா.. வா..

பாவலர் வல்வை சுயேன்

lundi 29 mai 2017

மௌனமே காதலாள் ....

அகழ் வாராச்சியும் அறிவேன் உயிரே
ஏன் இந்த மௌனம் உனக்குள்ளே
அறியேன் அறிந்திட
எதைத்தான் கற்றறிவேன்
மடல் நீக்கி ஓர விழி காட்டு
என் தேடலுக்கான விடை
கிடைக்கிறதா என காண்கிறேன்


பாவலர் வல்வை சுயேன்

jeudi 25 mai 2017

எல்லோர்க்கும் பெய்யும் மழை!!!

நிழல் தரு உயர்வில் நீள நினைந்தேன்
ஏந்திழை என் செய்வேன் ஏதறிவேன்
உதிர்வெனும் இறப்பில்
இமைகளும் இளந்தேன் ...
தனிமை கொடிதாய் கொன்றிட        
இதய நரம்புகளையே (சு)வாசித்தேன்
துளிர்கள் பற்றின துணைக் கரம் பெற்றேன்
பூக்களின் வாசம் பூமிக்கும் தெளித்தேன்
கால மாற்றம் கண்ணீரை துடைத்தது
பூபாளம் பாடும் குயில்களே
கூடி வாருங்கள் குடியிருக்க   
இலையுதிர் காலம் திரும்பும் முன்னே
வசந்த காலம் வாழ வா எங்கிறது
நல்லார் இங்குளார் எனில்
எல்லோர்க்கும்,
பெய்யென பெய்யும் மழையே

பாவலர் வல்வை சுயேன்

mercredi 24 mai 2017

நைகராவும் உறங்கி விழிக்கட்டும்!!!


கொள்ளும் இடமும் கொள்ளா ஆசை
உயிர் உள்ளவரை சங்கமிக்கும் சாரல்
என் இதயம் நீயாக
உன் இதயம் நான் ஆக
முத்த மழை பொழிகிறது
சத்தம் இன்றி
நைகராவும் உறங்கி விழிக்கட்டும்
ஈடில்லா காதலை காணும் விழிகளே
கனிவோடு செய்வீர் தூய காதலே

பாவலர் வல்வை சுயேன்

மடல் திறந்த இதழ்கள்!!

அன்றலர்ந்த தாமரையின்
ஆருயிர் தோழனே
தினம் நீராடும் உன் தோழியின்
கொடி இடை நீ வருடுவதால்
இதழ் மலர்ந்து தருகிறாள்
பரிச முத்தம் உன் தோழி!

கொண்டவனின் துணை இன்றி
விழி நீர் வறண்டோடி
நின்று லர்ந்து வீழ்ந்துவிட்டேன்
மணல் காட்டில்!
தண்ணீர் இல்லையேல் தாமரை உதிர்கிறாள்
கண்ணீர் வெள்ளத்திலே நானும் காய்கிறேன்
மடல் திறந்த இதழ்களை,
விளுமியங்களே காயம் செய்கின்றன!

பாவலர் வல்வை சுயேன்

lundi 22 mai 2017

பாஸ்ற் பூட் பரிணாமம் !!!

மண் சட்டி சோற்றுக்கும்
மீன் கறிக் குளம்புக்கும்
அன்றொரு வாசம்
என் மன்னவன் மகிழ்ந்து
புன்னகை பூத்திட
நடு நிசி தோர்க்கும்

இன்றைய வாழ்வுக்கும்
இல்லற ஜோதிக்கும்
இரும்பறைக் காலம்
இதில் பந்தமும் பாசமும்
பாஸ்ற் பூட்டை பரி மாறி
பறக்கின்ற பரிணாமம்

நடு நிசி ஏதென்றும்
நண் பகல் எதென்றும்
யாருக்கும் தெரியவில்லை
ஞாயிறின் வருகைக்கும்
வானுயர் உயர் வுக்கும்
தேய் பிறைக் காலம்
வளர் பிறையாய் வருவார் கோடி
முழுமதியாய் ஆவார் சிலரே...

பாவலர் வல்வை சுயேன்

mardi 16 mai 2017

எதுவரை என்பது தெரியாது !!!

பொய்யின்றி பொய் சொல்லும் உன் கண்கள் அழகு
உயிருக்கு உயிரான சினேகம் அதன் அழகு
திகில் நிறைந்தே இருந்தது கடந்த இரவும்
நான்கு சுவர்களுக்குள் பக்கம் பக்கமாய்
புரட்டி நாம் படித்துக் கொண்டிருந்தோம்
இருட் டறையும் கண்டு விரண்டது
பூத்திரியும் ஒரு கணம் மௌனித்து
சுடர் ஒளி வீசி வெக்கித்து குனிந்தது

எதுவரை என்பது இருவக்கும் தெரியவில்லை
அதுவரை என்றால் ஆனந்தமே ஆருயிரே
அன்று நாம் போடும் முற்றுப் புள்ளியில்
ஆயுளும் முடிந்துவிடும்
முற்றுப் புள்ளியை முதலில் இடுவது யார்
அதுதான் புரியவில்லை இருவருக்கும்.....  

பாவலர் வல்வை சுயேன்

lundi 15 mai 2017

முள்ளி வாய்க்கால் நினைவெழுச்சியில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவோம்...முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பிரித்தானிய தமிழர் பேரவையின் நிர்வாகம் தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருவது அதன் உறுப்பினர்களினதும், ஆதரவாளர்களினதும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கின்றது. தமிழீழ தேசியக் கொடியாகிய பாயும் புலிக்கொடிக்குப் பிரித்தானியாவில் எந்தத் தடையும் இல்லாத பொழுதும், அதற்குத் தடை இருப்பது போன்ற போலியான பிம்பத்தை உருவாக்கிக் கடந்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வில் அதனை ஏற்றுவதற்குப் பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், சென்ற வருடம் இலண்டனில் பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாகத் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி அந்நிகழ்வை வெற்றிகரமாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மேற்கொண்டிருந்தது. அதே இடத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்ற மறுத்துப் பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய போட்டி நிகழ்வு மண்கவ்விய நிலையில், இம்முறை இலண்டனின் ஒரு பக்கத்தில் உள்ள மூடப்பட்ட பூங்கா ஒன்றில் போட்டி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வைப் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு போட்டி நிகழ்வுகளை நடாத்துவதைத் தவிர்த்து இம்முறையாவது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாகத் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றி முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வை நடாத்துமாறு தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் மாறி மாறிக் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட பொழுதும் அதனை பிரித்தானிய தமிழர் பேரவையின் நிர்வாகத்தினர் அடியோடு நிராகரித்துள்ளனர். இதனையடுத்துத் தமிழீழ தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பிரித்தானிய தமிழர் பேரவையின் நிர்வாகத்திற்கு மனு ஒன்றைக் கையளிப்பதற்கான கையெழுத்து வேட்டையில் அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இறங்கியுள்ளனர். இவ்வாறான கையெழுத்து வேட்டையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதேநேரத்தில் கடந்த ஆண்டு போன்று இம்முறையும் வரும் 18.05.2017 வியாழக்கிழமை இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாகத் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நிகழ்வை நடாத்துவதற்கான ஏற்பாடுகளில் முழுவீச்சுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஈடுபட்டுள்ளது. இது பற்றிய ஊடக விவாத நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து தருமாறு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்த பொழுதும், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாது ஐ.பி.சி நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்களப் படைகளின் இரத்தம் தமிழர்களின் உடலில் ஓடுவதாகக் கூறிக் கடந்த ஆண்டு ஐ.பி.சி தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியை அடுத்து அதில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த பிறிதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்காது அதனைத் தடாலடியாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு புறக்கணித்ததற்கான பழிவாங்கலாக இவ்வாறான இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஐ.பி.சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதா? என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

(நாடு கடந்த தமிழீழ அரசின் அறிக்கை)

யாருக்கும் வெட்கம் இல்லை !!!


இல்லை இல்லை நேசம் இல்லை நேரில் இப்போ
இன்ற நெற்றில் உலாவும் உறவே
அள்ளிப் பருகும் ஆனந்த சுகம் ஆச்சுதையோ
உறவில் எத்தனை விரிசல்கள்
உள்ளத்தில் எத்தனை எரி மலைகள்
யாரை யார் நோவது இங்கே
யாருக்கும் வெட்கம் இல்லை...

பாவலர் வல்வை  சுயேன்

vendredi 12 mai 2017

கூட்டுக் குடும்பம் !!

கூட்டுக் குடும்பத்தின் முற்றம்  
குறுக் கெழுத்துக்கள் வாழ்கின்ற
சதுரங்கக் கட்டம்....
ஒவ் வொரு சுவர் கட்டங்களுக்குள்ளும்
ஒன்றுக் கொன்றான ஜீவ நாடி
துடித்துக் கொண்டே இருக்கும்

கனல் மழை என்ன கடும் புயலென்ன
கூட்டுக் குடும்ப முற்றத்தில்
கண் தூசி கொள்ளும் முன்னே
பொத்தி வைச்ச மல்லிகையாய்
கரங்கள் யாவும் காக்கும்....
கால தேவனை காதல் செய்
கரும்பாகும் உன் பிறப்பு...

பாவலர் வல்வை சுயேன்

mardi 9 mai 2017

தெரியும் என்பார் தெரியாது !!!

தெரியும் என்பார் தெரியாது! அறிவேன் என்பார் அறியாது!
தெரியாமல் தெரிந்தும் தெரியாததை தேடியும்
தொடரும் வாழ்வில் இடையில் போவதும்
யாருக்கும் தெரியாது!
பிறக்கும் முன்னே என்னையும் உன்னயும்
அன்னைக்கும் தெரியாது!
அன்னை மடியில் எவன்டா வைத்தான்
அவனுக்கும் தெரியாது!

உயிரே உயிரின் ராச்சியம் பூச்சியத்திற்குள்ளே
பூட்டிய கதவைத் திறந்து போகும் உயிரை
யாருக்கும் தெரியாது!
இத்தனை சூட்சுமம் யார்தான் செய்வார்
இறைவன் என்றால் அவனையும் தெரியாது!
இதில் யாரை யார்தான் நம்பி வாழ்வது
எனக்கும் தெரியாது! உனக்கும் தெரியாது!
ஊருக்கும் தெரியாது!  
தெரியும் என்பார் தெரியாது!
அறிவேன் என்பார் அறியாது!
பூமிக்கு யார்தான் சொந்தம் சொந்தம் 
இறைவா உனக்கும் தெரியாது....!

பாவலர் வல்வை சுயேன்

dimanche 7 mai 2017

ஆகாய வீதியிலே ஆடுதடி தென்குருத்து!!!

ஆகாய வீதியிலே ஆடுதடி தென் குருத்து
பெண்ணாக மலர்ந்துவிட்ட
மரிக் கொழுந்தே நீயும் ஆடு
தாய் மாமன் சீரினிலே
தாவணிக்கும் தாலாட்டு
ஆடாமல் ஆடி விட்டு
பொன்னூஞ்சல் விட்டுறங்கு
தொம்மாங்கில் இல்லையடி
இந் நாளில் உன் வாழ்வு

ஆராரோ பாடலுக்குள் அன்று நீ உறங்கிவிட்டாய்
அம்மாவின் துயரினிலும் மூழ்காது விலகிவிட்டாய்
குங்குமத்தின் சங்கமத்தில் ஓரங்க ஞாயமடி
கூவாத குயிலாக கூண்டுக்குள்ளே நீயுமடி
பெண்ணாகப் பிறந்தவளே மண் பார்த்து நடவாமல்
தீயாக எழுந்து தீயோரை மாய்த்துவிடு

உன் அண்ணாவின் அணியிலே 
அக்காளும் பெண் புலிதான்
ஆசை நெஞ்சக் குருத்தை எல்லாம்
அக்கினியில் போட்டாளடி
மூக்குத்தி மோகத்திலும்
மூக்கில் இல்லை துவாரமடி
வேர் அறுக்கும் பகை முடித்தே
வேங்கையென வாழலையா...
பூவுக்குள் புயலான
பெண் புலியே அவள்தான்டி
ஆதி காலச் சடங்கை எல்லாம்
காலக் கடலில் வீசிவிடு
அந்தி இனி வருமோடி
எந் நாளும் உதயமடி
பொத்தி வைச்ச மல்லிகையே
தென்றல் தொட்டு நீயும் ஆடு
ஆகாய வீதியிலே ஆடுதடி தென்குருத்து

பாவலர் வல்வை சுயேன்

vendredi 5 mai 2017

இதழோடு இதழ் முத்தம்!!

மலையும் மடுவும் கொடுக்கின்றன
இதழோடு இதழ் முத்தம்
காற்றும் கடலும் கொடுக்கின்றன
இதழோடு இதழ் முத்தம்
அலையும் கரையும் கொடுக்கின்றன
இதழோடு இதழ் முத்தம்
பூவும் வண்டும் கொடுக்கின்றன
இதழோடு இதழ் முத்தம்
இயற்கையோடு ஒன்றிவிட்டோம் அன்பே
இன்னும் ஏன் தாமதம் கொடுத்திடுவோம்
இதழோடு இதழ் முத்தம்...

பாவலர் வல்வை சுயேன்

jeudi 4 mai 2017

ஓரக் கண்ணால் பார்த்தால் போதும் !!!

புள்ளினமாய் புலம் பெயர்ந்து தேசம் கடந்தேன்

மனம் எனும் மேடையிலே எனை ஆளும் மெல்லினமே

கார் இருள் சூழும் முன்னே கான மயிலாய் ஆடுகிறாய்

நிலா உலா அழைத்து குலாவும் அழகாய்

மாறாக் காதல் மகுடம் சூட்டி

மறு ஜென்மச் சிந்தை கூட்டி

உனை ஆள அழைக்கிறாய்    தென்றல் வீசட்டும் தேதி சொல்லட்டும்

என் தோள் சாய மறு ஜென்ம மலராய்

நீயும் மலர்ந்திடு....

இந் நாள் நினைவலைகள் அந் நாளிலும் ஓயாது

ஓரக் கண்ணால் நீ பார்த்தால் போதும்

உன் ஞாபகம் உயிராகும்

காலப் பெருஞ் சூழலே காந்தர்வக் காதலை

உயிர் வாழ உயிர் கொடு....பாவலர் வல்வை சுயேன்

இது நியம் தானா !!!

மனசுக்குள் அந்த மத்தாப்பு
எத்தனை யாலங்களில்
வர்ணங்கள் தூவி
என்னை வாட்டுகிறது
உயிர் இருந்தும்
உயிரில்லா மாளிகையில்
ஒற்றைக் கிளி ஊமையானேன்

சிற்றலை வரிசையின் கதிரொளி
எங்கிருந்தோ வருகிறது அவ்வப்போது
பொங்கும் பூம்புனலின் பூபாளம்
மெலிதாய் வந்து என் உணர்வுகளில்
ஒத்தடம் தந்துவிட்டு
ஒய்யாரமாய் போகிறது

சொந்தம் தந்த பந்தமே எங்கே நீ
என் நினைப்பு உனக்கில்லையோ
போனது போனது தானா
போன பாதை மறந்தாயோ    
மஞ்சள் பூசி மருதாணி போட்டு
பொட்டு வைத்த அழகை
கண் பட்டுவிடுமே எனக் கூறி
கரிச் சட்டிப் பொட் டொன்று
என் கன்னத்திலே நீ இடுவாய்
                                     
நீ தொட்ட இடம் தேடுதடா உன்னை 
கண் பட்ட இடம் வாட்டுதடா கனவை
முகவுரை அழித்துவிட்டு
முடிவுரை தந்தாயோ

ஊரார் சொல்லும் வார்த்தை
நெரிஞ்சியென தைக்கிதடா நெஞ்சை
அமங்கலி எங்கிறார் இது நியம்தானா.....
                                                                                                                 
பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...