mardi 9 octobre 2018

கூறடி சிவ சக்தி!!


செல்பிக்குள்ளே என்னை வைத்தேன் செல்லம்மா
செங்குருத்து வாழை என்றாய் தேனம்மா
தண்ணீரில் ஓடம் இது அம்மம்மா
கரை இருந்தும் கானல் மீனே நானம்மா
துடிக்கிதே மனசு துவளுதே கொலுசு
சதி பதி இன்றி தாழ்வதேன் உறவு
விதியென சொல்லேன்
மதியும் துலைத்தேன்
எதுவரை என்பது தெரியலையே

பிரம்மன் படைத்தான் ஏன்தான் என்னை
அவனையும் இங்கே காணலையே
நீரடி ஊற்றுக்கு நிலை ஏது அறியேன்
தேரடி நிழலையும் தேடியே அலைகிறேன்
தூற்றுவார் தூற்றவும் போற்றுவார் போற்றவும்
போகட்டும் என்றேன் பொன் மனம் உடைந்தேன்
கூறடி சிவ சக்தி கூற்றுவன் குறை ஏதோ

பாவலர் வல்வை சுயேன்

மாயம் அறியேன் !!!


பூ வானமாய் அணைத்து - என்னில்
பூ கொய்து போனவனே
நீ அவிழ்த்து போட்ட காதலில்
ஐயம் கொண்டேன் ..!

ரெட்டை சடை பின்னி குட்டை பாவாடை கட்டி
தண்ணீர் குடம் தூக்கி போன என்னை
வடம் போட்டு இழுத்தாய் எப்படி ?

மாய விழிகளின் மன்னன் நீ
ஏதோ என்னிடம் தேடினாய்
விடை தந்து வளைந்தன
அந்த வான வில்லின் வர்ணங்கள் 
என்னவனே அன்றுதான் உணர்ந்தேன் 
நானும் வயசுக்கு வந்துவிட்டேன் என்று

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...