lundi 17 novembre 2014

இரகசியம்.. ..


இரகசியம்.. ..
 
இரண்டாம் ஜாமம் கடந்தும்
ஈர விழிகள் உறங்கவில்லை
என் இதயத் துடிப்பின் ஓசை கேட்டு
மின்மினிகள் அழைத்தன என்னை..
பறந்தேனா நடந்தேனா
எனக்கே தெரியவில்லை
சிறகை விரித்தேன் ..
இரவின் மௌனம் இதய வீணை மீட்டிட
பௌர்ணமி என்னை பார்த்துவிட்டது
பௌர்ணமி பார்த்ததை
இன்னும் இரு விழிகள் பார்த்துவிட்டன
பார்த்ததை யாரிடமும் சொல்லாதே என்றேன்
இதுவரையில் அந்த இரகசியத்தை
சொல்லவில்லை, பட்டாம் பூச்சி..
 
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. ''..இன்னும் இரு விழிகள் பார்த்துவிட்டன
    பார்த்ததை யாரிடமும் சொல்லாதே என்றேன் ..''
    ஆகா காதல் இரகசியம்.!...
    நடக்கட்டும்!...நடக்கட்டும்!.....
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி வேதா - காதலோ கண்ணாம்பூச்சியோ, கீச்சு மாச்சுத் தம்பலமோ மாயா மாயா தம்பலமோ இரகசியம் கொண்டு இரகசியமாக இருக்கும்வரைதானே அதற்கு உயிர் ... நடக்கும் நாடகம் இரகசியமாகவே நடக்கட்டும் .. இரகசியம் காத்தீர்கள் வேதா மகிழ்ந்தேன்..

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...