mercredi 30 janvier 2019

விற்பனைக்கு அல்ல நானும் அவனும்!!!


முதுமை காணா இளமை
முக்காட்டில் நனைகிறது
வரன் வாங்க
வரதட்சணை வேண்டுமாம்
மௌனித்து அழுகிறது,
பெண்மை!சாளரத் துளிகள் நனைக்கின்றன
துளிர்க்கிறேன் துவள்கிறேன்
துவட்டியும்,
தூவாணம் தொடுகிறது
துடிக்கிறேன்!

சந்தைக்கு போன தந்தை
மந்தை விலை கண்டு
மரணித்துவிட்டார்!

நிலாவே அனு தினம்
உன்னோடுதான் பேசுகிறேன்
என் வாசலில் ஓர் சந்திரனின்
வரவை எண்ணி பார்க்கிறேன்

விலை இல்லா மாளிகையில்
விடிவெண்ணி வாழும்
அவனும் நானும்
விற்பனைக்கு அல்ல!

பாவலர் வல்வை சுயேன்

mardi 29 janvier 2019

மனம் கொண்ட மாளிகை !!!

ஒரு கூட்டு குயிலாக என் வீட்டு கிள்ளைகள்
பாடு காணம் பாடு உயர் கால உறு துணை தேடு
தேசங்கள் கடந்தாலும் துன்பங்கள் சூழ்ந்தாலும்
ஆநந்த வாழ்விற்கே அலைமோது 
சுக வாழ்வு காண கூடு
சுதந்திரம் நிலை கொண்டு வாழு

மண் குடில் கூரைக்குள் மனம் கொண்ட மாளிகை
மாறா புயுல் கூடி மண் வீட்டை கரைத்தாலும்
புன்னகை பூ உதிராது பூவின் வாசம் தீராது
வாய்மை ஒன்றே வாழ்வுக்கு துணை
வசந்தங்கள் தேடி ஓடு

வானம் பொய்க்காது மழை வந்து தூறும்
வசந்தங்கள் வந்துன்னை தாலாட்டும்
ஒளித் தீபங்கள் துணை நின்றே வாழ்த்தும்
வையகம் வளைவுதான் வையாதே பொய்யென்று
கானகம் இருண்டாலும் கதிரவன் வருவான் நாளை
வறுமை சிருமை என கண்ணீர் சிந்தாதே
உயர்வான வாழ்வென்றும் உம்மோடுதான்
பாடு காணம் பாடு உயர் கால உறுதுணை தேடு

பாவலர் வல்வை சுயேன்

mercredi 23 janvier 2019

அரசனும் ஆண்டியே !!!

ஊர் அற வேர் அற வேண்டா உறவெனில்
அரசனும் ஆண்டியே அம்பலத்தில் 
நான் நான் எனும் மமதை நாணமுற
அனுங்குகிறாள் சினுங்குகிறாள்
உனக்குள்ளே ஒருத்தி !
அடம்பன் கொடியென மிடுக்கெனத் திரண்டே
தீவினை அற தீன்டும் விசமும் கொல்
தாழா நிறைவு காணும் தாயகம் தன்னுயர்வு

பாவலர் வல்வை சுயேன்

jeudi 10 janvier 2019

அனுங்குகிறாள் அன்னைத் தமிழ் !!!

கலையோ சிலையோ கற்பனையோ
ஆதி சக்தி அன்னையென
அருளும் கொலுவிருக்க
சிற்றின்ப சிறகிலே சிற்பமோ

கல்லிலும் காமத்துப்பால்
சொல்லிலும் காமத்துப்பால்
கைவளை ஓசையிலும் காமத்துப்பால்
முப்பாலும் தரும் மூன்று தமிழாலே
முப்பிறவிதனிலும் மூண்ட பயனும் கொல்
இப்பிறவியொடு இனி எப்பிறவியும் வேண்டாதே
நின் நீச மிகையாலே நீர் விழி சொரிகிறாள்
அன்னைத் தமிழ் உன்னை ஏன் பெற்றேனென்று

பாவலர் வல்வை சுயேன்

dimanche 6 janvier 2019

காணவில்லை தேடுகிறேன் !!!

காதலின் உயிர் செழுமை
தேடலில் கிடைக்காத
மலர் வனச் சிரிப்பு
ஏதோ ஒன்று
இருவருக்கும் இடையில்
என்னென்பேன்

எடுத்துச் சொல்ல முடியவில்லை
கூட்டை விட்டு உயிர் தனியானதேன்
அறியேன் உயிரே
உள்ளம் பாவம்
கொடுத்துவிடு என் ஜீவனை

நிலையுரு தாழா நிழலாய் தொடர்ந்தேன்
கூட்டத்தில் துலைத்துவிட்டேன்
துணையே துணை இன்றி இருள்கிறது
புலர்வில்
பூவே உன் முகம் காட்டு
மறு ஜென்மம் எடுத்து
மறுபடியும் காண வருவேன்
அன்பிருந்தால் அன்றேனும் கொடு
உன் நினைவோடு வாழ்வேன் நான்

பாவலர் வல்வை சுயேன்

  வையகம் ஓங்குக   !!!   எனக்கு வேண்டும் எமக்கு வேண்டும் புது யுகத்தில் மறு மலர்ச்சி முடிந்த வாழ்வென மடிந்து சாவோமா கடந்து செல்லும் ப...