mardi 28 juin 2016

அன்னை இல்லம் !!!



நூலிடை தரிப்பில் மனசொடு மனசை கொய்தன விழிகள் 
கோலம் இட்டு கோலம் இட்டு கோல விழி யாலம் உற்று
தொட்ட சுகம் தோகை விரித்தாடி
தோப்புறவில் சொந்தம் உற்று
கட்டில் சுகம் கலைத்தே
தொட்டில் தனை ஆடவிட்டோம் !
பூத்தகொடி பூமியிலே பூவும் இல்லை பிஞ்சும் இல்லை
மண மாலைகள் சூடச் சூட மலர் ஒன்றாய் போனதடி
வாட்டுதடி வறுமைக்காடு வாய்க்கரிசி கையில் இல்லை
சொற்ப சொற்பமாய் ஒடிந்த சிற்பமே முற்றத்தில் நீ
அன்பு இல்லா இல்லம் அன்னை இல்லம் ஆனதடி
இன்பமா துன்பமா இனம் புரியா வேட்கை தொட்டு
அடி எடுத்த கால்களில் தைத்தது முள்ளு
செந்நீரின் நிறம் கண்டு கண்ணீரை நிறுத்திவிட்டேன்
காயம் பட்டும் மாய வலையில் துடிப்பெதற்கு
கலங்காதே என்றது மனசு !!

பாவலர் வலவை சுயேன்.

dimanche 26 juin 2016

நல்லோர் அவரே தெய்வமடி !!!



குத்தும் ஊசி குத்தட்டும்
ரெத்த தானம் மேவட்டும்
இல்லார் என்பவர் இல்லையடி
நல்லோர் அவரே தெய்வமடி
யாதி பேய்களை ஓட விட்டு
மரபனு சோதனை
மதங்களும் பார்க்கணும்
வேதங்கள் புதிதாய் நீ எழுதி
பூத கணங்கள் இல்லாது அழித்து
இறைவன் எவனோ அவனுக்குச் சாத்து..

பாவலர் வல்வை சுயேன்

mardi 21 juin 2016

தமிழ் பா கூற்றெழுதி பாடி ஆடு பாவலா !!!



உயிரென்ன உயிர் உயிரினும் மேலே எங்கள் தாய்த் தமிழ்  
இருள் சூழ் காட்டுடை இன்னலில் கிடப்பதேன்
என் நாளும் நீ எழுந்து மோதி வெல்லடா
தமிழ் பா கூற்றெழுதி பாடி ஆடு பாவலா
அழிவிலே ஆதி மொழி செம்மொழி அல்லவா
அள்ளிப் பருகியதை நீயும் கிள்ளிக் கொடு கொடு
அன்னைத் தமிழ் இல்லையேல் அன்புச்சரம் ஏதடா
ஒற்றை விதையினில் பூத்த கற்றை நெல் மணிகளாய்
வையகம் எங்கும் நாணம் உறுகிறாள் முப் பெரும் தேவி
நற் தமிழ் நங்கையின் பொற் பாதம் போற்றி
பாரெங்கும் இவள் நாமம் முழங்குவோம் முழங்குவோம்
வாழ்க தமிழ் வாழ்கவென மேதினியில் வளர் திரை எழுதுவோம்

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...