mercredi 20 mars 2019

மாமா வாங்கோ மாமா வாங்கோ


மாமா வாங்கோ மாமா வாங்கோ
                        மழலை பூக்கள் அழைக்கின்றோம்
செஞ்சோலை நிழல் தந்த மாமா வாங்கோ
இரத்த ஆற்றில் தினம் மிதக்கின்றோம்

கண்ணை பறிச்சு காட்டில் விட்டு 
கைத்தடி ஒண்டு தாறாங்க
கைத்தட்டு ஏந்தி பிச்சை கேட்க
வீதியில் எங்களை விட்டாங்க

பாரத வரவு பெளர்ணமி என்றே
அப்பா அன்று சொன்னாரு
எங்களை விழுங்கும் சுனாமி என்றே
தலைவர் மாமா நீங்க சொன்னீங்க
காதகர் வந்தார் காமுக கழுகாய்
அம்மா கூட இரையாணாள்
சிங்கள ராணுவ கொடும்வதை முகாமில்
அப்பா கூட பிணமானார்

கருநிலா காலம் கண் உறங்கி நாளாச்சு மாமா
சாகாமல் சாகிறோம் சவக்காட்டில் வீழ்கிறோம் 
காத்திட ஓடி வாங்கோ 
மழலை பூக்கள் வாடுகிறோம்
உங்கள் மதி முகம் காட்டி போங்கோ

பாவலர் வல்வை சுயேன்

samedi 16 mars 2019

இனப் புயல் இங்கே வனப் புயலா தமிழா


இனப் புயல் இங்கே வனப் புயலா தமிழா - தினப்
புயலாலே இன்னும் நீ அடிநிலைதானா
சுதந்திர வாழ்வை சுறண்டலில் துலைத்து சிறையில் ஏனடா
கேழ்விக் குறியாய் வளைந்த வாழ்விற்கு நீதி தேடடா தமிழா
பூவரசம் வேலிக்குள் புலுணிக் குஞ்சும்
புலி ஜென்மம் எடுக்கலையா
உலக வானில் புலிக்கொடி உயர்ந்து
மான மறவரின் மரபு உயரலையா
அகரம் எழுதி அறிவைச் சேர்த்த
அழகு ஈழமடா
கனிந்த பழம்தான் தமிழீழம்
கையில் கிடைக்கும் எக் காலம்
மசக்கையிலே நீ மாற்றான் கால் நிலை
உலைக் களத்தாலே உருகி ஓடுதே
உன் உறவின் ரெத்தமடா

சமர்க்களம் ஆடிய வேங்கைகளாலே மலர்ந்தது தமிழீழம்
வஞ்சனைக் கொடியோர் வாரி இறைக்க
கொடும் தீ கருகி கண்ணீரில் முற்றம்
சந்ததி வாழ சரித்திரம் படைப்போம்
நாளை விடியும் நம் தேசம்
உலகப் பந்திலே தமிழனின் காலம்
வாடா தம்பி வாடா
இனப் புயல் நிறுத்தி சரித்திரம் படைப்போம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாகமடா

பாவலர் வல்வை சுயேன்
2012ல், எழுதிய பாடல்

samedi 9 mars 2019

மகளிர் தின வாழ்த்துகள்


சிற்பி செதுக்கா பொற் சிலை மகளீரே
சித்திரம் சிரித்திட சித்தம் சிதைந்தேனடி
ஆடாமல் ஆடும் தூரிகை ஒளியே
எண்ணை இல்லாத் திரியே
உம் சுடர் மிகையில்
இடர் அகன்றேனடி

உயிரே உயிரே என உடல் உரசி
கொள்ளை இடும் உலகிது தங்கமே
இல்லாத இளவு வீட்டில்
ஒப்பாரி கேட்கும்
இரங்காதே

சீதனம் கொள்வனவில் சீதா என்பார்
சீர் திருத்தவானும் சேதாரம் சேர்ப்பான்
உவமையில் உன்னுரு செவ் விளக்கு
நிறை ஒளியில் நீ குத்து விளக்கு
தயங்காதே தங்கமே
மாற்று குன்றா தங்கம் பெண்ணே
உமக்கென மலர்ந்தது மகளிர் தினம்
மான்புற சூடு மின்னும் மகுடம்
வாழ்க வாழ்க வளர் நிலவுமாய்
மாதரசிகளே
பார் போற்றும் உமை அனு தினம்



பாவலர் வல்வை சுயேன்

samedi 2 mars 2019

ஆசிரியர்!!

மழலையர் மனமும் மண்ணின் குணமும்
மறந்தறியார் அசிரியர் மாபெரும் குருவே
அவர் மனம் ஓர் நூலகம்   


புத்தகத்தின் பக்கங்களை புறட்டும் முன்னே
அட்டவணை முறையில் அறிவூட்டுவார் ஆசிரியர்
கல்விக் கூடம் அழைக்க
அழுது கொண்டே வந்தேன்
அன்றென் முதல் வகுப்பறை
வயது ஐந்து

பார்க்காத முகங்கள் பழகாத சொந்தங்கள்
சிலர் சிரிக்கிறார்கள் சிலர் அழுகிறார்கள்
சிலர் முகங்களில்
கண்ணீர் கோடுகள்
காய்ந்திருந்தன
மணி ஓசை கேட்டது
அந்த மணி ஒலிதான்
எமது ஆரம்பக் கல்வியின்
கட்டியம் சொன்னது

அழுகையை நிறுத்திக் கொண்டேன்
வணக்கம் தந்தார் ஆசிரியர்
அவரின் நண்பன் வெள்ளைச் சோக்கு
கரும் பலகையில்
ஒவ்வொன்றாக எழுத எழுத
உச்சத் தொணியில் உரம் இட்டு
உயிர் எழுத்துக்களை
அ ஆ இ ஈ உ ஊ என்றே
அறிவுப் பால் ஊட்டினார் ஆசிரியர்

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்
மெய் எழுத்துகள் பதினெட்டும்
உயிர் மெய் எழுத்துகள் இருநூற்று பதினாறும்
வர்ணப் படங்களோடு புத்தகத்தில் இருந்தாலும்
சொல் இயல் சொல்லில் இசையுற
ஓடி விளையாடு பாப்பா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடிவா என்றே
பாலுந் தெழி தேனுமாய்
தாய்த் தமிழ் குழைத்தூட்டி
எம் கல்விக் கண்ணை திறந்தார் ஆசிரியர்

பிள்ளை மனம் வெள்ளை மனமே - அதில்
வெற்றுடமாய் கிடந்த இருட்டுப் பலகையில்
வெள்ளைச் சோக்காய் உயிர்த்துவம் சேர்த்து
அழகுத் தாய்த் தமிழால்
அன்றாடம் எமக்களித்தார்
கல்வி கற்றதினால்
உலகில் மேதைகள் உண்டு
உலகம் உய்திட உழைக்கும்
உழைப்பாளியும் உண்டு
அகிலம் பற்றி நிற்கும் அன்புக்கு
மூலமும் ஆசிரியரே
அறிவுச் சுடரொளியும் அவரே
ஆசிரியர்களே,
உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்
நன்றி நன்றி நன்றி
நன்றி எனும் மூன்றெழுத்து மாலை சூடி
வாழ்த்தி வணக்குகிறோம் உம்மை

பாவலர் வல்வை சுயேன்

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...