mardi 31 décembre 2013

நாளை மலருதடா தமிழா, 2014..


நாளை மலருதடா தமிழா, 2014
கரைந்த காலங்களில் - இன்
உயிர் உறைந்ததுபோதும்
கண்ணீர் காயங்களை மாற்றி
கரை யேற்றுகிறேன் என்று
வரட்டும் வரவேற்ப்போம்
வட்ட நிலா ஒளிக்காலம்
வாசல் வந்து சேரட்டும்..

lundi 30 décembre 2013

நேத்துவரை வீசும் காத்தில்..


நேத்து வரை வீசும் காத்தில்
தூவப் பட்ட புழுதி நான்
கரைத்து விட்டேன்
கடந்த காலங்களை
உன் கரம் தொட்ட நொடியில்..

பட்ட மரம் நான்..

 
 
என் இனியவளே - உன்
உள்ளக் கிடக்கைகளை
ஓரம் வைத்துவிட்டு
நீ,எனக்காகவே வாழ்கிறாய்
நீ இறைத்த நீருக்கு
இனிமை தரவும் முடியாத
பட்டம் பூச்சியும் ஆனேன் நான்.....
 

dimanche 29 décembre 2013

என் தாய் யார்..


குயிலாக நான் பிறந்தேன் - காகம்
என்னை அடை காத்தது
மயிலாக தோகை விரித்தேன்
கார் மேகம் வந்து ஆசீர் வதித்தது
மானுட ஜென்மம் ஏன் எடுத்தேன்
அன்னையும் இல்லை எனக்கு
குப்பைத் தொட்டியே,
என் தாய் என்கிறார்கள்..

வானம் உன்னை அழைக்கலாம்..


வானம் ஒரு முறை உன்னை
அழைக்கலாம், முகிலாக - அது
நாலும் தெரிந்த பின்னால் நடந்தால்
நன்மையாகலாம்
எரிக்கும், தீ...
எதையும் எண்ணிப் பார்ப்பதில்லை..

samedi 28 décembre 2013

இரவுக்கு விடுதலை..


இரவுக்கு விடுதலை கொடுக்க உன்னால் முடியுமா
அந்த பௌர்ணமி ஓன்றுதான் கொடுக்கிறது
மாதத்தில் ஓர் நாள், இரவுக்கு விடுதலை
குளிரூட்டப் பட்ட உலகப் பெருந் திரை அரங்கில்
அன்றுதான் கட்டணம் இன்றி
பற்றுச் சீட்டு இன்றி
அனைவரும் படம் பார்க்கிறார்கள்
அரங்கம் நிறைந்த ரசிகர்கள் இருந்தாலும்
கௌவுஸ்,புல் என்று யாரும்
அறிவித்தல் இடுவதில்லை.

lundi 23 décembre 2013

இனி இல்லை இன்னும் கொடுப்பதற்கு..

பல முறை கேட்டு விட்டாய்
கடனாக இதயத்தை ..
ஒரு முறை,
கொடுத்துவிட்டேன் அதை
இனாமாக உன்னிடத்தில்
இனி இல்லை
இன்னும் கொடுப்பதற்கு
என் செய்வேன் நான்..
 

உன்னை நான் வாசித்தேன்....


என்னை நீ நேசிக்கும்போது
உன்னை நான் வாசித்தேன்
எனக்காக உன் மனசை
முழுதாய் நீ கொடுக்கவில்லை
அம்மா,அப்பா என்றாய்
அக மகிழ்ந்தேன்
அண்ணா,அக்கா,தம்பி,தங்கையென்றாய்
மகிழ்ச்சிக் கடலில் இமைச் சிறகை
மெல்ல விரித்தேன்
அன்பே ஆரூயிரே என்றாய்
அங்கே நான் வீழ்ந்துவிட்டேன்
எனக்காகவும் ஓர்ரிடம்
என்னை உன்னுயிராய் கணித்திருந்தாய்
இனிய காதல் என்பது இதுதானே என் காதலா
உயிர் தந்த அன்னை முதற்கொண்டு
உயிராக என்னை நேசிக்கும் உன்னோடு
காலம் எல்லாம் வாழ காத்திருக்கிறேன்
எங்களின் கல்யாண நாள் எப்போது சொல்லடா

dimanche 22 décembre 2013

என் சிந்தை எல்லாம் இவளே...

சிரித்துச் சிரித்து என்னை
உயர வைத்தாள்
கன்னக் குளியில் விழுத்தி
கரம் கொடுத்தாள்
சிரிக்கச் சொன்னேன் சிரிக்கிறாள்
என் சிந்தை எல்லாம் இவளே...

samedi 21 décembre 2013

இந்த மழை ஓய்ந்துவிட்டது..


இந்த மழை ஓய்ந்துவிட்டது
இது நியம்...
என் மனதிற்குள் இன்னும்
அந்த மழை ஓயவில்லை
என் தோழனின் கரம் பற்றிய படியே
இனிமையான நினைவுகளோடு
இன்னும் நான் நனைந்துகொண்டே நடக்கிறேன்...

உயர்ந்த மனிதன்..


உன் விரல் தொடும் நேரமே...


என் தோழனே, சோகச் சுமை
தாங்கியே...
வாழ்க்கை அலை ஓடுது
ஓராயிரம் காலம் ஆனாலும்!
உன் விரல் தொடும் நேரமே
கரை தொடும் அலையாகிறேன் நான்..

vendredi 20 décembre 2013

யாரை யார் அன்பே என்பார் இவ்வுலகில்..

ரெத்தம் இன்றி கத்தி வீசும் - காமக்
காதலின் மகுட வாசிகள் நாங்கள்
ஊடல் நதி வீழ்ந்து இருவரும்
இரு கரையானால்
யாரை யார்
அன்பே என்பார் இவ்வுலகில்..
 

mercredi 18 décembre 2013

வாடா என் தோழா...


வாடா என் தோழா..
வாழ்க்கை வெகு தூரம்
அதில் வாலிபம்,
கொஞ்சக் காலம்
ஓடிப் பார்க்கலாம் வா..
நீயா நானா முதலிடம்!

mardi 17 décembre 2013

தேசக் குரலோன்..


பேரினச் சிங்களம் தமிழர் மேல் அள்ளி இட்ட தீ..
பூவென்றும் பிஞ்சென்றும் கிளம் என்றும் பாராமல்
அள்ளி உண்ணும் போதில்
விதியென வீழாது வெகுண்டெழுந்த
வீர வேங்கையே...

எம்மின வாழ்வியலின் ஏடேந்தி
இறையாண்மைக்கு உயிரூட்டி
விடிவான கதிர் ஏற்றி
திம்பு முதல் ஜெனிவா வரை
,நா மன்றுக்குள்ளும்
அடங்கா பற்றொடு அறம் எழுதி
வாதிட்ட தத்துவ ஞானியே
தேசியத் தலைவனின் அவைப் புலவன் நீ

தம்பியிடம் கேட்டேன் ஆயுதம் தாரும் என்று
தர மறுத்துவிட்டார் நான் மந்திரி என்று
புன்னகையாய் சொன்னீர் அண்ணா
மென் மலர் தூவி நின்றீர் அண்ணா
தேசக் குரலோனே உமது ஆழுமை சொற் புதிர்கள்
இன்றும் அகிலத்தை ஆட்டிவைத்துப் பார்க்குதண்ணா..

vendredi 13 décembre 2013

சினம் தணிந்து மனம் கனிவீர்..


பிளைக்க வந்தேன் வெளி நாட்டில்
ஈராண்டு களிந்தது நூறாண்டு போல்
பணம் பத்தும் செய்யும் என்பார்
குணம் தானே இங்கே
குட்டையில் மட்டையானது
வீடு நோக்கி ஓடிவந்து
பிணக் காட்டில் துடிக்கிறேன்
 
பிளைப்புத் தேடி போனவரே
சினம் தணிந்து மனம் கனிவீர்
ஆற்றி வைத்தேன் ஆனவரை
என் உடல் பசியோ ஆறவில்லை
கள்ளிக் காட்டு காற்றலையில்
இழந்து விட்டேன் என்னை நான்
தன்னை, மன்னித்து விடு என்றாள் இவள்.

mercredi 11 décembre 2013

நான் அழைத்தால் வருவாள் என் அம்மா..


கருவறைக் காலக் கார் மேகம் - மீண்டும்
வராதா என இறைவனை கேட்டேன்
ஒரு முறைதானே
அந்த அரு மறை வரம் என்றே
இறைவனும் சொல்லிவிட்டான்

 நான் அழுதால்  வருவாள் என் அம்மா
பசியில் அழுதேன் நோயில் அழுதேன்
இடரில் அழுதேன் துயரில் அழுதேன்
நீ வரவில்லையே இறைவா..
என் விழி நீர் துடைத்து
என்னை ஆட்கொள்ள
அவள்தானே வந்தாள்

 நான் அழைத்தால் வருவாள்
என் அம்மா
எனக்குத் தெரியும்
இது உனக்குப் புரியாது
இறைவா நீ அன்னை இல்லாதவன்
அம்மா.. அம்மா... அழைக்கிறேன்
உன் பிள்ளை, வந்துவிடு...

mardi 10 décembre 2013

கவிச்சாரதிக்கு, இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்...


பாரதி கவிச்சாரதி
  
   எண்ணம் எனும் தேரில் – வண்
   ணம் மாறா வாழ்வில் நீ வாழ்கிறாய்
கவியே நீ வாழ்கிறாய்
     கட்டவிழ்ந்த நதியிலும்
     காடு மலை மேட்டிலும்
     சொட்டு மலர் தேனிலும்      
     நீ வாழ்கிறாய்
     கவியே நீ வாழ்கிறாய்

கொஞ்சுங் கிளியாள் கூண்டுக்குள்ளே
     பஞ்ச வர்ணம் கலையக் கண்டு
     நெஞ்சத் தீ நெடுவளர்த்து
     மஞ்சத்திரை மாற்றியவா
வேல் விழியில் தீ வளர்த்து
தீயவரை தான் அழித்து
உன் இறப்பை மீட்டெடுத்து
தசையினை தீ சுடினும் சுடட்டும் என்றே
தமிழீழத் தங்கையர்
ஈழத்திலே மீண்டும் உன்னை பிரசவித்தார்

விஜையனுக்கு பார்த்தன் போல்
     பாமரர்க்கு சாரதி நீ.. பாப்பா பாட்டின் பாரதி நீ..
புவி ஈர்ந்த கவியே புயல் சாயா மதியே
கள்ளிருக்கும் பூவிலும் உள்ளிருக்கும் தேனிலும்
உனை காண்கிறேன் நான் உனை காண்கிறேன்.
 
(எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.)

நான் உருகும் மெழுகு பொம்மையே...


இனிமையின் நினைவிலும் இளமையின் ஒளியிலும்
என் உள்ளம் வருடும் பெண்மையே
நான் உருகும் மெழுகு பொம்மையே
ஒரு பக்க பூவிலும்
மறு பக்க தலையிலும்
வாழ்க்கை நாணயமா
உன் பூமுக சிரிப்பும்
கருகிடும் திரியில்
உருகிடும் நாடகமா
உருகுது மனமும் உளறுது நினைவும்
உன் நினைவலை எடுத்தே போகின்றேன்
மறுமுறை ஒரு முறை கருவறை ஒன்று
என் திருமுகம் தந்தால்
மறு ஜென்ம மலரே காத்திரு
வாழ்வினில் கொடியது நோய் என தெரிந்தும்
வரம் வாங்கி நான் வந்து பிறப்பேன்..

lundi 9 décembre 2013

மலரின் மரணம்..


மலரே நீ அழகே அழகு..
மொட்டாக இருக்கயில்
உன் பட்டு இதழ்களை
தொட்டதில்லை சூரியனும்

சிட்டுக்களின் மகுடி கேட்டு
மொட்டு இதழை ஏன் விரித்தாய்
பட்டுக் குஞ்சம் நடுவே
நீ, சொட்டுத் தேன் கொடுத்தாலும்
சிட்டுக்கள் உன் இதழ்கள் மேல்
வைத்துப் போவது ரணங்களின் வடுவே

அழகெல்லாம் உன்னிடம் கொடுத்தவன்
உன் ஆயுளை ஏன் சுருங்கக் கொடுத்தான்
நீ, துயரக் கடலில் மூழ்குவதை கண்டுதானோ...

இந்தப் புல்லாங்குழல் காத்திருக்கிறது..


இத்தனை நாழும் என் இசை  
கேட்டு நீ மகிழ்ந்தாய் ராதா..
இன்று உன் இசை யெனும்
இன்ப மழையில் நனைந்திட
இந்தப் புல்லாங்குழல்
காத்திருக்கிறது
எங்கே,
உன் விரல்களின் சலங்கை நாதம்
சுவாச நாளங்களோடு ஒலிக்கட்டும்..

dimanche 8 décembre 2013

சுதந்திரப் போராட்ட வீரன், சுபாஷ் சந்திர போஸ்..

சுதந்திரம் என்பது
யாசித்து பெறுவதல்ல
போராடிப் பெறுவது..

உங்களின் நெஞ்சை தொடுபவர் யார்...

இருந்தும் இல்லாதவரா
இல்லாது அழுபவரா..


உனக்காக வாழ்வேன் நான்..

மலர் கொடுத்தேன் நீ வாங்கவில்லை
மனம் கொடுத்தேன் நீ வாங்கிவிட்டாய்
உனக்காக வாழ்வேன் நான்
என் உயிர் மூச்சு உள்ளவரை...

samedi 7 décembre 2013

கருத் தொருமித்த காதலுக்கு, கல்லறை எதற்கு காதலரே..


கருத் தொருமித்த காதலுக்கு – கல்
லறை எதற்கு காதலரே..
அறு சுவை உணவாய்
அழகிகளை அள்ளி உண்ட ஷாஜகான்
தன், நான்காம் மனையாளின் நினைவாக
கட்டிய பளிங்கிச் சின்னமே
தாஜ் மஹால்,
இது சந்நிதி அல்ல
ஊமை விழிகளின் முற்றுகைச் சின்னம்.

vendredi 6 décembre 2013

ஏழை எளியோரின் தோழன் மோரும் இளநீரும்..

ஏழை எளியோரின் தோழன்

மோரும், இளநீரும்

சூரியன் சுட்டாலும்

தாகம் தணித்து வீரியம் தந்தே

தன்னடக்கம் கொண்டிருக்கும்..

என் ஜீவன் எனக்கெழுதிய முதல் கடிதம் நீ..

என் ஜீவன் எனக்கெழுதிய முதல் கடிதம் நீ
என் மனக்கடலில் நரம்பெனும் நதியாய் வந்து
சங்கமித்த ஜீவ நதியும் நீ
எம்மை வெவ்வேறாய் பிரித்திட
எவராலும் இயலுமோ சொல், என்னுயிரே...

இனி என் நாளும் வருவேன் என் மதியே..


அந்தி மாலைச் சந்தணமே

நீ உலா வரக் கண்டு

உச்சி மலைச் சாரல் வந்து

உன் சேதி சொன்னதடி

உண்மைதான் அழகோவியம் நீ..

இனி என் நாளும் வருவேன் என் மதியே

ஆதவனும் உன் முகம் காணும் முன்னே..

jeudi 5 décembre 2013

இதயம் இன்னும் சாகவில்லை..


இதயம் இன்னும் சாகவில்லை

இரு ரோஜாக்களாய் நானும் நீயும்

இடி தந்து போய்விட்டாய்

இருளில் நான் இங்கே..

கறுப்பு வெள்ளை  படமாக...

பூந் தோப்பு காதலனாய் வாராது வந்தவனே..


மொட்டவிழ்ந்த பூக்களெல்லாம்
வாராதோ வண்டென காத்திருக்க
பூந் தோப்பு காதலனாய்
வாராது வந்தவனே
மகரந்த மணிகள் இங்கே
கொட்டிக் கிடக்கின்றன
இன்பத் தேனோடு குழைத்து
வர்ணக் கோலங்கள் தீட்டிப் போ..

mercredi 4 décembre 2013

இன்னொரு ஜென்மம் இன்னும் வேண்டும் இருவருக்கும்..


காதல் பாடம் படிக்க வந்தேன் உன்னிடம்
உன் விழிகளால் என் விழிகளில் எழுதி
காந்தர்வ மணம்
வாசிக்க வைத்துவிட்டாய் என்னை
முடிவுரை காண்பதற்குள்
ஆயுள் முடிந்து விடும் போலிருக்கிறதே
இன்னொரு ஜென்மம்
இன்னும் வேண்டும் இருவருக்கும்
இப்போதே வா இறைவனிடம் கேட்போம்..

மழலையின் அன்பை மலரிடம் கண்டேன்...

மழலையின் அன்பை மலரிடம் கண்டேன்
அதிகாலை வேளை
மரணம் தொட்டு மௌனம் ஆனதும்
அதனிடம் கண்டேன்
முதியவர் முகத்தை  மறுநாள் காலை
மனித வாழ்வை ஒரே நாளில் எழுதும்
ஒரு நாள் பூவே..
வணங்குகிறேன் உன்னை..

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...