ஒத்தை மரமாய் நான்
தனித்திருக்க
நித்தம் என் நிழல்
வந்தவனேசாய்ந்தாடத் தோள் தந்தேன்
ஆடும்வரை ஆடி
இளந் தளிர் பூப் பறித்து
பட்டமரம் என விட்டுச் சென்றாய் என்னை
இலையுதிர் காலம் தெரியாதோ நோக்கு
வசந்த காலத் தழைகள் கண்டு மீண்டும்
பூப்பறிக்க வருகிறாய் கரம் கொண்டு
விட்ட குறை மீதம் இருக்க
தொட்ட குறை ஏதடா என்னிடத்தில்
தொடராதே தொலை தூரம் போய்விடு
துவண்ட மனசுக்குள் தூறல் நின்டுபோச்சு..
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...