துருப் பிடித்த பூட்டு தெருக் கதவில்
தெரிவிக்கின்றது !உற்றவர் இங்கில்லை என்று...
எம் தந்தையின் வேர்வைத் துளிகளே
எங்கள் வீட்டின் சுவர்களாகும்
எம் தாயின் பாசக்குடையே
எங்கள் வீட்டின் உத்தர நிழலாகும்
மழலையாய் நான் ஆடிய பின்னும்
நான்கு சகோதர சகோதரிகள் ஆடி ஓய்ந்த
அம்மாவின் முதிசத் தொட்டில்
இன்றும் கிடக்கிறது உள்ளே பறணில்
பாச பந்தங்களின் வேர் இளை
நூலாகி அறுந்ததினால்
பெற்றவர் பட்ட மரம் ஆனார்
எங்கள் வீடு சிலந்தி வலைக்குள்...
தாய் தந்தையரின் நினைவாலயம்
என்றோ இறந்திட்ட நிலையிலும்
சர்காரின் துருப் பிடித்த பூட்டு
ஐவரில் யார் வருவார்
திறவு கோலுடன் என
கேழ்வியுடன் காத்திருக்கிறது
வீடு யாருக்கென்ற வில்லங்கம்
பூட்டுக்கும் தெரியாது.!
Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...