அமைதி இல்லா இராப் பொழுதுகளில்
பூத்திரி மௌனிக்க வலுவில்லா
இராத்திரிகள்நெஞ்சை வஞ்சித்தன..
பூடை நீக்கி தேறுதல் கொண்டு
மாறுதல் பெற்றேன்
அமைதிப் பூவனத்தில் அற நெறி காத்து
ஆறுதல் கொண்டது மனசு
பிரபஞ்சமே இடிந்து பூமியில் வீழ்ந்தாலும்
அஞ்சேன் இனி அறிந்தேன்
அன்னை அபிராமியின் திருப் பாதம்..
Kavignar Valvai Suyen
அபிராமியின் திருப்பாதம்...
RépondreSupprimerஅச்சம் நீக்குமன்றோ!
Vetha.Langathilakam.