vendredi 24 octobre 2014

உயரப் பறக்க இறக்கை இருந்தும் ..

 
உயரப் பறக்க இறக்கை இருந்தும்
மூக்கணாங் கயிற்றில் வாழ்க்கை
ஏறப் படிகள் எத்தனையோ தெரிகிறது
படி தாண்டினால் பத்தினி அல்ல
தூசிக்கும் வார்த்தை, வேசி
கை கால் இயலாதவன்
கட்டிவைக்கிறான் தொழுவத்தில்
சுற்றிச் சுற்றி வருகிறோம்
வட்டம் இட்ட காலடியில், பள்ளத்தாக்கு
எங்கள் வண்ணச் சிறகை ரசிப்பவனே
எண்ணச் சிறகை வெட்டுகிறான்
விண்ணையும் தொட எம்மால் முடியும்
அவிழ்த்து விடுங்கள் தொழுவக் கயிறை
வாங்கித் தருகிறோம் சுதந்திரம் ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...