மன்னவா என் மன்னவா விழிச்
சிறகிற்குள்
உன்னை வைத்திருந்தேன் - இமைத் திரை விலக்கி நீ எங்கே சென்றாய்
போடா..போ..போ..
உன் அழகையா நான் காதலித்தேன்
அந்த இதயத்திடம் தானே
அன்பு செய்தேன்..
உன் பிரிவுத் தூரம் அதிகமாய் இருக்கலாம்
பிரித்துப் பார் உன் நெஞ்சை - அங்கே
இருப்பது என் இதயம் இங்கே துடிக்கிறது
உன் இதயம்..
அடையாள உண்ணா விரதம் இருக்கும்
என் இதயத்தை நீ அறிவாய்...
அதனால்த்தான் துடிக்கும் உன் இதயம்
என் காதில் சொல்கிறது ,
நீ வருவாய் என்று...
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...