dimanche 12 octobre 2014

வறுமைக் காத்தில் வீசப்பட்ட கடுதாசி நான்...


வறுமைக் காத்தில் வீசப்பட்ட கடுதாசி நான்
கரைகின்றேன் கால வெப்பத் துளியில்
வெளி நாட்டில் ..                        
வண்ண வண்ணத் தாவணிகள்                 
என்னைத் தொட்டுப் போன்கிறன கனவில்
கண் விழித்தால் என்னெதிரே நிழலாடுகின்றன
உறவுகளின் வறுமைக் கோடுகள்
வாலிபம் என்னுள் வெறுமையாய் காய்கிறது
காதோர முடிகளும்
கருமைத் துறவிகளாகிவிட்டன
 
காலையில் வந்த கடிதத்தில் பார்த்தேன்
கல்யாணமாம் ...
எனக்கல்ல, என் அப்பனுக்கு.!
சித்தி எழுதி இருந்தாள்
நான்தான் அவளுக்கும் மூத்த பிள்ளையாம்
சேற்றில் வீழ்ந்த சில்லறை ஆனேன் எப்போது
எனக்கே தெரியவில்லை ...
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...