mardi 7 octobre 2014

என், இதய வீட்டில் வாடகை இன்றி வந்தவளே ..


என், இதய வீட்டில் வாடகை இன்றி வந்தவளே
வாசல் திறப்பை எங்கே ஒளித்துவிட்டாய்
உன் இளமைப் பெட்டகத்தில் திருடியதை
என் இரு விழிக் கூட்டில் வைத்திருக்கிறேன்
வருமான வரிப் பரிசோதகியாய்
கனவிலும் என்னை எழுப்புகிறாய்
எடுக்கவோ கொடுக்கவோ
நான்கு விழிகளின் சங்கமம் தேவையடி
ஆதாரம் இன்றி என்னை அரஸ்ற் செய்ய
இயலுமா உன்னால் ?
சேதாரம் உண்டு, என்னை சிறை வைத்துவிடு
ஜாமீன் வேண்டாம் பத்தே மாதங்களில்
என் பெயர் சொல்லும் நம் பிள்ளை
உன்னை அம்மா என்றழைப்பதைக் கண்டே
குற்றம் அற்றவன் நான் என்று
என்னை விடுதலை செய்வாய் நீ..
 
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...